இந்திய நெடுஞ்சாலைக் கட்டுமான வரலாறு 231
1967 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நிறுவப்பட்ட மத்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக் கழகம் கல்கத்தாவிற்கும் அசாமிற்கும் இடையிலான ஆற்று வழிப்பொருள் போக்குவரத்தை நடத்துகின்றது. இக்கழகம் கல்கத்தா ஃபராக்காவிற்கிடையிலும், கல்கத்தா கச்சாருக்குமிடையிலும் ஆற்றுவழிப் போக்குவரத்தை நடத்துகின்றது. இக்கழகத்தின் ஏனைய செயல்களில் கப்பல் கட்டுதலும் கப்பல் செப் பனிடுதலும் கூட அடங்கும். மு.புகழேந்தி இந்திய நெடுஞ்சாலைக் கட்டுமான வரலாறு இந்திய வரலாற்றின் வெவ்வேறு காலங்களில் பயன் படுத்தப்பட்ட வெவ்வேறு வகையான கட்டுமானப் பொருள்களைப் பற்றிக் குறைந்த அளவிலான தகவல் களே கிடைத்துள்ளன. இருந்தபோதும், சாலைப் பகுதிகள், அகழ்வாராய்ச்சி ஆவணங்கள் ஆகியவற்றி லிருந்து சாலைக் கட்டுமானத்திற்குச் சீரில்லாத கற்களையே கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்தி யிருப்பது அறியவந்தது. இக்கட்டுமானப் பொருள்கள் பெரிதும் சாலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. நகரங்களின் சாலைத்தளங்களுக்குச் சீராக் கப்படாத கல் பலகங்களே பயன்படுத்தப்பட்டன. அக்காலப் போக்குவரத்திற்கு இந்நிலை ஏற்றதாக இருந்தது. அதே வேளையில் நிழல்தரும் மரங் இந்திய நெடுஞ்சாலைக் கட்டுமான வரலாறு 231 கள், குடிநீர்க் கிணறுகள், இரவைக் கழிக்கச் சாலை யோர ஓய்வகங்கள் போன்ற வசதிகளைச் செய்வதில் கவனம் செலுத்தினர். இச்செய்திகளனைத்தும் இந்தி யாவில் பல காலக்கட்டங்களில் பயணம் செய்த வெளிநாட்டுப் பயணிகளின் பயணக் குறிப்புகளின் வாயிலாகத் தெரிய வருகின்றன. கெட்டிக்கும் முறை கள், சாலை மைய உயர்ச்சி, வடிகால்கள் அமைக்கும் தொழில்நுட்பங்கள் ஆகியவை பற்றிய விவரங்கள் சரிவர அறியப்படவில்லை. இத்தொழில்நுட்பங் கள்பதினெட்டாம் நூற்றாண்டிலேயே வளர்ச்சி அடையத் தொடங்கின. ட்ரசாகெட் (Tresaguet) என்ற பிரெஞ்சுப் பொறியாளர், அடிமண்ணின் நீரளவிற் கும் அடிமானத்தின் நொடிப்பிற்கும் இடையிலுள்ள தொடர்பை உணர்ந்து வடிகால்கள் அமைக்கத் தொடங்கினார். இவ்வளர்ச்சி, பிரான்சு நாட்டில் தான் முதன்முதலில் தோன்றியது. நவீன சாலைக்கட்டுமானத் தொழில்நுட்பங் கள், இந்தியாவில் முதன்முதலில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப் பட்டன. இவை இங்கிலாந்தைச் சேர்ந்த பொறி யாளர்களான டெல்ஃபோர்டு (Telford) மெக்கா டெம் (Mecadam) ஆகியோரின் கருத்துப்படி நடை பெற்றன. உடைந்த கற்களை முதன்முதலில் 1597 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய சல்லி (sully), சாலைக் கட்டுமானத் தொழில் நுட்பத்தில் நீரளவின் சிறப்பை உணர்ந்து 1775-ஆம் ஆண்டு செயல் படுத்திய ட்ரசாகெட் ஆகியோரின் கருத்துக் களின் அடிப்படையிலேயே இப்பொறியாளர்களும் அகலமும், 7* (9") - 3" (5") உயரமும் உடைய கற்கள் 11" பருமனுள்ள சல்லிப் பரப்பு உடைந்த கற்களும் சல்லியும் " மற்றும் 2" பருமனுடைய ஈரடுக்குக் கற்கள் 6 சரிவு 1:60; கிடைமட்ட அடிமானம் படம். டெல்ஃபோர்டு கட்டுமானம் சாலையின் குறுக்குவெட்டு அமைப்பு