பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 இந்திய நெடுஞ்சாலைத்‌ துறையில்‌ படிமலர்ச்சி

234 இந்திய நெடுஞ்சாலைத் துறையில் படிமலர்ச்சி அமைக்கப் பட்டிருந்த ஓய்வகங்கள் மற்றும் பல வசதிகள் பற்றித் தெளிவாகக் கூறியுள்ளார். முகலாயர் காலச் சாலைகள். முகலாயப் பேரரசர் களின் ஆட்சிக் காலங்களில், இந்தியாவிலிருந்த சாலைகளுக்கு மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. முகலாயர் காலங்களில் இந்தியாவிற்கு வந்த அனைத்து வெளி நாட்டவர்களும் அக்காலத்தில் நில விய பயண வசதிகளைப் பற்றிப் புகழ்ந்துள்ளனர். ஷெர்ஷாஹி (Shershahi) ஷெர்ஷா (Shersha) என்ற பேரரசர்களின் காலச் சாலைகள் மற்றும் சாலை வச திகளைப் பற்றி (கவனத்தை ஈர்க்கும் வகையில்) விரிவாக இவர்கள் விவரித்துள்ளனர். 'சாஹர் குல்ஷான்' (Chahar Gulshan) என்ற ஒரு பழைய வேதம் பதினெட்டாம் நூற்றாண்டில் வலைப்பின்னல் அமைப்புடன் நிலவிய இருபத்து நான்கு சாலைகளைப் பற்றி விவரித்துள்ளது. இச் சாலைகள் இந்தியாவின் பெரும் நகரங்களை இணைத்தன. ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்கக் காலச் சாலை கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்தபொழுது சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்திருந்த போது நாடு பொருளாதாரத்தில் மிகவும் சீரழிந்தும். மிகுதியான அரசியல் பிரிவுகளுடனும் இருந்தது. பதினேழாம் நூற்றாண்டின் இடைக் காலத்தில்தான் சில இணைப்புச்சாலைகள் முகலாயர் காலத்திய சாலைகளின் எஞ்சியபகுதிகளில் அமைக்கப்பட்டன. இவ்வளர்ச்சி பதினெட்டாம் நூற்றாண்டின் இடைக் காலம் வரை தொடர்ந்தது. இவ்வேலை பெரும் பாலும் பிரிட்டிஷ் இராணுவப் பொறியாளர்களால் செயல்படுத்தப் பட்டதால் இராணுவச் சிறப்பு வாய்ந்த பகுதிகளிலேயே கவனம் செலுத்தப்பட்டது. டல்ஹௌசி பிரபு (Lord Dalhowsie) கவர்னர் ஜெனர லாகப் பதவி வகித்த 1855 ஆம் ஆண்டில்தான் இராணுவப் பொறியாளர்களின் மேற்பார்வை யிலிருந்த சாலைகளின் நிருவாகம் நிறைவுடன் இல்லாதது உணரப்பட்டு அதற்கென ஒரு பொதுப் பணித்துறை ஏற்படுத்தப்பட்டது. இத்துறையின் முதன்மைப் பணியாக இந்தியாவிலிருந்த முதன்மைச் சாலைகளின் கட்டுமானம், மேற்பார்வை ஆகியவை இருந்தன.தற்பொழுது இதுவே, மத்திய பொதுப் பணித்துறை என்றழைக்கப்படும் துறையாகும். க்காலத்தில். இருப்புப் பாதைகள் அமைத்தல் இந்திய அரசாங்கத்தின் கவனத்தைக் கவர்ந்ததால் அப்பொழுது அமைக்கப்பட்ட சாலைகள் இருப்புப் பாதைகளுக்கான ஊட்டுப் பாதைகளாகவே அமைந் தன . ஆகவே, இருப்புப்பாதைகளின் வளர்ச்சியினால் சாலை வளர்ச்சியின் நோக்கம் முற்றிலும் மாறு பட்டது. சாலைகளின் வளர்ச்சி அவ்வவ்வட்டாரத் தின் அக்கறைக்குரிய தாக மாறியது. 1919 ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டப்படி சாலைகள் முழுதுமாக மாநிலங்களுக்குரியபொருளாக மாறியது. நகராட்சிகள், மாவட்ட வளர்ச்சிக் குழுக்கள், வட்டார வளர்ச்சிக் குழுக்களுக்குச் சாலைகளின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை இருக்குமென உணரப் பட்டது. இராணுவச் சிறப்பு வாய்ந்த சாலைகள், மன்னராட்சி நிலவிய மாநிலங்களின் சில சிறப்புச் சாலைகள் ஆகியவற்றின் வளர்ச்சியை மட்டும் மத் திய அரசு தன் பொறுப்பில் வைத்துக கொண்டது. இதனால் சாலைகளின் வளர்ச்சியில் தேக்கநிலை ஏற் பட்டது. குறிப்பாக மாநிலங்களுக்கிடையிலான சாலை வளர்ச்சியின் முன்னேற்றம் தடைப்பட்டது. ஜெயகர் சுமிட்டி நிறுவுதலும் மத்திய சாலைநிதி உருவாக்குதலும், முதலாம் உலகப்போர் முடிவடைந்த போது இந்தியாவின் போக்குவரத்து அமைப்பில் ஒரு புரட்சிகரமான மாறுதல் ஏற்பட்டது மிகவும் மலிவான விலையில்மிகுதியான இராணுவ வண்டிகள் பொதுமக்களின் போக்குவரத்திற்காகக் கிடைத்தன. நாடுமுழுதும் உள்ள சிறப்புச் சாலைகளில் பேருந்து களின் மூலமான எந்திரப் போக்குவரத்து ஒருவழக்க மான நடைமுறைக் காட்சியாக மாறியது இரும்புச் சக்கரங்களாலான மாட்டுவண்டியில் செல்லும் வணி கப்பொருள் போக்குவரத்தாலும், ரப்பர் சக்கரங் களாலான விரைந்து செல்லும் பேருந்துப் போக்கு வரத்தாலும் சாலையின் மேற்பரப்பில் விரைவில் தேய்மானம் ஏற்பட்டுப் பாழடைந்து போனதால் சாலை பேணும் செலவு மிகுந்தது. மாநில அரசு களிடமும் வட்டார வளர்ச்சிக் குழுக்களிடமும் வசதி இல்லாமையால், சாலைகளின் நிலைமை மிகவும் சீர்கேடு அடைந்தன. இதனால் 1927-ஆம் ஆண்டு இந்தியச் சாலை வளர்ச்சிக்குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவின் தலைவராக இருந்த திரு.எம்-ஆர் ஜெயகர் என்பவரின் பெயரில் இக்குழு 'ஜெயகர் கமிட்டி' என்றழைக்கப்பட்டது. க்குழு சாலைப் போக்குவரத்து, சாலை வளர்ச்சி ஆகியவற்றிலுள்ள சிக்கல்களை ஆராய்ந்து ஓர் அறிக்கையைத் தர வேண்டுமெனப் பணிக்கப்பட்டது. 1928-ஆம் ஆண்டு இக்குழு தன் அறிக்கையை வெளியிட்டது. மத்தியசாலை நிதியை உருவாக்க வேண்டும் என்பது இக்குழு தந்த சிறப்புப் பரிந்துரை யாகும். இதன்படி ஒவ்வொரு காலன் எந்திர எரி பொருளுக்கும் இரு அணாக்கள் (அக்காலத்திய நாணயம்) வீதம் வரி வசூலிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைத்தது. மேலும் சாலைகளின் வளர்ச்சி மத்திய அரசின் பொறுப்பாகுமென்றும் பல மாநிலங் களுக்கும் சாலை வளர்ச்சிக்கான இந்நிதியிலிருந்து தொகுதி நல்கைகள் (block grants) வழங்க வேண்டு மென்றும் இக்குழு பரிந்துரை செய்தது. இந்தியச் சாலைகள் கழகம் (1934). இச்சாலை