இந்திய நெடுஞ்சாலைத் துறையில் படிமலர்ச்சி 237
அட்டவணை. இந்தியாவில் சாலைகளின் வளர்ச்சி ஆண்டு சாலைகளின் நீளம் (கி.மீ.-இல்) மேற்பரப்பு பூசப்படாதது மேற்பரப்பு பூசப்பட்டது 1951 1,57,019 1961 2,31,152 2,42,923 2,46,965 1971 3,66,046 4,12,363 1980 5,54,478 6,67,726 நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ.826 94 கோடியும் ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ1,348 கோடியும் செலவிடப்பட்டுள்ளன.. ஆறாவது அரசின் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் மத்திய பங்காகச் சாலை வளர்ச்சிச் செலவிற்காக ரூ 830 கோடியும் மாநில அரசுகளின் பங்காக ரூ.2,609 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. சுமார் தேசிய நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலை கள் அமைப்பிற்கு மத்திய அரசே நேரடிப் பொறுப் பாகும். 1947 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த தொடர்ச்சியான சாலைத் தொடர்பிற்குச் 2500 கி.மீ. நீளத்திற்கு விடுபட்டுப்போன சாலைத் தொடர்புகள். ஆயிரக்கணக்கான பாலங்கள் கட்டப்பட வேண்டியிருந்தன. தேசிய அமைப்புடன் சேர்க்கப்பட்ட நெடுஞ்சாலைகள் சாலைகளால் விடுபட்டுப்போன சாலைத் பாலங்கள், புதிய தொடர்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. சிறு 1983 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முப்பத் தொன்றாம் நாள் வரை மாற்றுப் பாதைகள் உள் ளிட்ட சாலைத் தொடர்புகள் மேம்பாட்டிற்கு மொத்தம் 4494 கி.மீ. நீளத்திற்கும், தாழ்வான மேம்பாட்டிற்கு மொத்தம் சாலைப் பகுதிகளின் 22,959 கி.மீ. நீளத்திற்கும், ஒற்றை ஓட்டப் பாதையை இரட்டை ஓட்டப் பாதையாக விரிவுபடுத்தல் மற்றும் வலிமைப்படுத்தலுக்கு மொத்தம் 21,848 கி.மீ. நீளத் திற்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இக்காலத்திற் கட்டப்பட்டிருக் குள் 388 முக்கிய பாலங்களும் கின்றன. தற்போதைய தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 1984-85 ஆம் ஆண்டின் கணக்குப் படி 31,710 கி.மீட்டர் ஆகும். இவற்றின் வளர்ச்சிக் காகவும் மேம்பாட்டிற்காகவும் ஆறாவது ஐந்தாண் டுத் திட்டத்தில் ரூ. 660 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைகள், மாவட்டச் சாலைகள் கிராமச் சாலைகள் ஆகியவை மாநில அரசுகளின் பொறுப்பாகும். அவை மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களின் வெவ்வேறு முகமை அமைப்புகளால் பேணப்படுகின்றன. சிறுமத் தேவைத்திட்டத்தின் இந்திய நெடுஞ்சாலைத் துறையில் படிமலர்ச்சி 237 கீழ் ஊரகச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை 1500 பேருக்கு மேலுள்ள ஊர்கள் அனைத்தையும் இணைப்பது 1000 முதல் 1500 வரை மக்கள்தொகை கொண்ட ஊர்களில் 50 விழுக்காடு ஊர்களுக்கு 1990 ஆம் ஆண்டிற்குள் எல்லாக் கால நிலைகளுக்கும் ஏற்ற சாலைகள் அமைப்பது ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமா கும். மாநிலங்களில், சில தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைகளின் வளர்ச்சிக்காகவும் மத்திய அரசு உதவு கின்றது. எல்லைப்புறச் சாலைகள். எல்லைப்புறச் சாலைகள் வளர்ச்சி வாரியம் 1960 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ஏற்படுத்தப்பட்டது. வடக்கு, வடகிழக்கு எல்லைபுறப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக் கவும், பாதுகாப்புத் தயாரிப்புகளை வலுப்படுத்த வும் விரைவான ஒருங்கிணைந்த வளர்ச்சியின் மூலம் சாலைத் தொடர்பை ஏற்படுத்தவும் இவ்வாரியம் ஏற்படுத்தப்பட்டது. இராஜஸ்தான், ஜம்மு, காஷ்மீர், இமாசலப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மணிப்பூர் பீகார், அந்தமான், நிக்கோபார் தீவுகள், அருணாசலப் பிரதேசம் மிஜோரம், பூடான் ஆகியவற்றைச் சூழ்ந்து இம்மேம்பாட்டுச் செயல்கள் தற்பொழுது நடைபெறுகின்றன. மத்திய பொதுப் பணித்துறை இராணுவப் பொறியியல் துறை போன்ற துறைகளில் நடைபெறும் ஒப்பந்த முறை யைப் போலன்றி எல்லைச் சாலைகள் அமைப்பு அத்துறையின் மூலமாகவே வேலைகளைச் செயல் படுத்துகின்றது. இந்த எல்லைச் சாலைகள் அமைப்பு தான் சாலைகள் கட்டுமான வேலையை மேற்கொள் ளும் தனித்த பெரிய அரசுத் துறை நிறுவனமாகும். இது ஒரு தன்னிறைவு கொண்ட எந்திரமயமாக்கப் பட்ட இடம் பெயர்ந்து செல்கின்ற அமைப்பாகும். தேசிய நெருக்கடி கால நிலைமைகளில் இராணுவத் திற்குப் பொறியியல் துணையாக விளங்குகின்றது. பெரும்பாலான போக்குவரத்து. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பயணிப் போக்கு வரத்து பல் அளவுகளில் அரசுடைமையாக்கப் பட்டுள்ளது. நாடு முழுமைக்குமாக, 50 விழுக்காடு பேருந்துகள் பொதுத்துறை நிறுவனங்களால் நடத் தப்படுகின்றன. 1950 ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் விதிப்படி பல மாநிலங் களில் போக்குவரத்துக் கழகங்கள் ஏற்படுத்தப் பட்டன. இதர மாநிலங்களில் தேசிய மயமாக்கப்பட்ட கழகங்கள் அரசுத்துறைகள், நகராட்சிகள், பதிவு செய்யப்பட்ட குழுமங்கள் ஆகியவற்றால் நடத்தப் படுகின்றன. பெரும்பாலான பெரிய நகரங்களில் பேருந்து போக்குவரத்து அரசுக்குச் சொந்தமானது. பொருள் போக்குவரத்து பெரும்பாலும் தனியார் துறையிடமே உள்ளது.