பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 இந்திய நெடுஞ்சாலைத்‌ துறையில்‌ படிமலர்ச்சி

238 இந்திய நெடுஞ்சாலைத் துறையின் படிமலர்ச்சி பொருள்களைச் சாலைப் போக்குவரத்தின் மூலம் கொண்டு செல்வதில் இருக்கும் இடையூறுகளை நீக்கு வதற்காக 1975 ஆம் ஆண்டு சரக்கு வண்டிகளுக்குத் தேசிய ஒப்புமம் (national permit) அறிமுகப்படுத்தப் பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசங்களும் தேசிய அனுமதி வழங்கும் எண்ணிக்கையை மத்திய அரசு வரையறுத்துள்ளது. ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்பட வேண்டிய பெரும எண்ணிக்கை 1979 ஆம் ஆண்டில் 5,300 ஆக இருந்தது. பின்னர் 1980 ஆம் ஆண்டில் 16,600 எனவும் தற்பொழுது 24,900 எனவும் அதிகரிக்கப் பட்டு குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 17,800 தேசிய அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. வட்டார ஒப்புமத் திட்டத்திற்காக வட்டாரங் களுக்கிடையே பரிமாறிக் கொள்ளும் போக்குவரத் திற்காக ஒப்பந்தங்கள் அதில் ஈடுபடும் மாநிலங் களினால் இறுதியாக்கப்பட்டன. மாநிலங்களுக்கிடை யிலான போக்குவரத்து ஆணையம் என்ற அமைப் பின் கீழ் இவ்வொப்பந்தங்கள் நடைபெற்றன. இந்த ஒப்பந்தங்கள் தேவைப்படும் பொழுது மறு ஆய்வு செய்யப்பட்டு திருத்தியமைக்கப்படுகின்றது. அட்டவணை. இந்தியாவில் ஊர்திகளின் உற்பத்தி பேருந்துகள்!ஈப்புகள் (Jeeps) ஈருருளி சரக்கு வண்டி சிற்றுந்து ஊர்திகள் ஆண்டு சள் 1951 8,602 7,917 1961 28,405 26,623 1970 39,097 1980 48,652 1985 72,964 44,366 65,265 1,62,227 1,21,084 4,21,798 10,98,331 பொதுத்துறையில் பயணி ஊர்திகள் 1970 ஆம் ஆண்டில் 35,193 என்ற எண்ணிக்கையிலிருந்து 1983 ஆம் ஆண்டில் 82,259 என உயர்ந்தது. சுமார் 5.70 இலட்சம் பேர் வேலை செய்யக் கூடிய மாநிலப் போக்கு வரத்துத் துறைகளின் கீழ் நாளொன்றுக்கு ஏறக்குறைய 4 கோடி பேர் பயணம் செய்கின்றனர். மத்திய மாநில அரசுகள் தங்களுக்கிடையேயான கொள்கைகள், வெவ்வேறுவிதமான போக்குவரத்து இயக்கங்கள் தொடர்பாக ஒருங்கிணைந்து செல்லப் போக்குவரத்து வளர்ச்சிக் குழுவை மத்திய அரசு ஏற்படுத்தியது. மாநிலங்களுக்கிடையிலான சாலைத் தடங்களில் செல்லும் சாலைப் போக்குவரத்துகளின் வளர்ச்சி, ஒருங்கிணைந்து செயல்படுதல், ஒழுங்க மைவு ஆகியவற்றிற்கு மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்து ஆணையம் பொறுப்பாகும். இவ் மேற்கொண்ட முயற்சிகளால் ஏறத் வாணையம் தாழ அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங் கள் பொருள் மற்றும் பயணிகள் போக்குவரத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒருமுனைவரி விதிப்பின் மூல மாக இவ்வாணையம் மண்டல அனுமதித் திட்டங் களைச் செயல்படுத்தி அதன் மூலம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் தடையில்லாத சரக்குப் போக்கு வரத்து நிகழ ஏற்பாடு செய்துள்ளது. விபத்திற்குட்பட்டவர்களுக்கு ஆறுதல் நிதி. 1939 ஆம் ஆண்டின் தானியங்கு ஊர்திச்சட்டம் 1982 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருத்திய யமைக்கப் பட்டது. இதன்படி ஓர் ஆறுதல் நிதி ஆணையம் (solation fund authority) மற்றும் ஓர் ஆறுதல் நிதி, கப்பல் மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது. தொடக்கத்தில் ஒரு கோடி ரூபாயை வைத்து ஆறுதல் நிதி அமைக்கப்பட்டது. இதில் ஆண்டு தோறும் பொதுக்காப்பீட்டுக் கழகம் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் காப்பீட்டுக்கழகம் 70 விழுக்காடும், மத்திய அரசு 15 விழுக்காடும், மீதி 15 விழுக்காடு மாநில அரசுகளாலும் கொடுக்கப்பட வேண்டும். இந்நிதி தாக்கியபின் ஓடும் (hit and run } தானியங்கி விபத்துக்களில், பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆறுதலுக்காக இழப்பீடுகளாக வழங்கப் படும். அதாவது, கணிசமான முயற்சிக்குப் பிறகும் தானியங்கி ஊர்தியின் அடையாளத்தைத் தெரிந்து கொள்ள முடியாமற் போகும் தானியங்கு ஊர்தி யால் ஏற்படுத்திய விபத்துக்கள் என்று இடித்து விட்டு சென்று விடும் விபத்தை வரைமுறைப்படுத்தி யுள்ளனர். 1984 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் வரை,ரூ. 30.83 இலட்சம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்திற்குக் கொடுக்கப்பட்டுள் ளது. மேலும் ரூ.11.80 இலட்சம் 1984-85 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் நிரு வாகங்களிலிருந்து கிடைத்த செய்திகளின்படி 215 விபத்து நிகழச்சிகள் முழுதுமாகத் தீர்க்கப்பட்டு ஆறுதல் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆறுதல் கேட்டு வரும் விண்ணப்பங்கள் விரைவாக ஆராயப் பட்டுத் தீர்த்து வைக்கப்படுகின்றன. - இந்திய நெடுஞ்சாலை நிறுவனங்கள் மு.புகழேந்தி 1943-ஆம் ஆண்டில் நாக்பூரில் நடைபெற்ற தலை மைப் பொறியாளர்களின் மாநாடு பரிந்துரைக்கும் வரை இந்தியாவில் நெடுஞ்சாலைகளின் நிருவாகம்