இந்திய நெடுஞ்சாலை நிறுவனங்கள் 239
பெரும்பாலும் மாநிலப் பொதுப்பணித் துறை கள். உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் கீழிருந்து வந்தது. சாலை வளர்ச்சிக்காக நாடு முழுதும் நடைபெற்ற வெவ்வேறான வேலைகளில் ஒருங் கிணைப்பு இருக்கவில்லை. நெடுஞ்சாலை நிருவாகம் குறித்து விரிவான கருத்துக்கள் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. மா நடுவண் சாலை நிதி ஏற்கெனவே நிறுவப்பட் டிருந்ததால் தலைமைப் பொறியாளர்களின் நாட்டு முடிவின்படி தேசிய நெடுஞ்சாலைகளின் பொருளாதாரப் பொறுப்புக்களனைத்தையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்வதென ஒப்புக்கொள்ளப் பட்டது. பின்னர் உடனடியாக வரைபடங்கள், வடி வமைப்புகள் மதிப்பீடுகள் ஆகியவைகளைத் தயாரித்து நாடு முழுதும் ஒருங்கிணைந்து செயல் படுவது எங்ஙனம் என்ற கேள்வி எழுந்தது. இதற் காகச் சாலை வாரியம் நிறுவப்பட்டு நாட்டின் சாலை வேலைகள் தொடர்பான திட்டவளர்ச்சி ஒருங் கிணைந்து செயல்படுதல் ஆகியவை கவனிக்கப் பட்டன. இளநிலை உதவி அலுவலர்களுடன் ஒரு தலைவர், உறுப்பினர்; சாலை வளர்ச்சிக்கான போக்குவரத்திற்கான உறுப்பினர், பொருளாதார உறுப்பினர், ஒரு செயலர் ஆகியோருடன் இவ் வாரியம் நிறுவப்பட்டது. அதே ஆண்டிலேயே (1943) குவாலியரில் நடைபெற்ற இந்தியச்சாலைகள் காங் கிரசால் இந்தப் பரிந்துரைகள் ஏற்கனவே வழங்கப் பட்டிருந்தன. இவ்வாரியத்தை வழிநடத்திச் செல்வ ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்பட வேண்டு மெனவும் முன்மொழியப்பட்டிருந்தது. இக்குழு வணிக நலன், இராணுவம், இரயில்வே வாரியம், இந்திய அரசின் வேளாண்மை, பொருளாதார ஆலோசகர்கள், இந்தியச்சாலைப் போக்குவரத்து வளர்ச்சிக் குழு, இந்தியச்சாலைகள் கழகம், சாலைப் போக்குவரத்து நலன் மத்திய அரசின் திட்டங்களுக் கான பேராளர்கள் ஆகியோர்களைக் கொண்டிருக்க வேண்டுமெனவும் பரிந்துரைக்கப்பட்டது. சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் சாலைகள் பிரிவு உருவாக்கம். சாலை வாரியம் அமைக்கப்பட வேண்டு மென்ற இம்மாநாட்டின் பரிந்துரைகளை இந்நாள் வரையில் செயல்படுத்த முடியவில்லை. ஆனால் போக்குவரத்து அமைச்சகத்தில் சாலைகள் பிரிவு ஒன்று உடனடியாக உருவாக்கப்பட்டது. வளர்ச்சி ஆலோசனைப் பொறியாளரைத் தலைவ வராகவும் அவரின் கீழ் தொழில் நுட்பம் நிருவாகம் தொடர்பான ஏராளமான அலுவலர்களையும் கொண்டு இப்பிரிவு துவக்கப்பட்டது. திட்டமிடல் வளர்ச்சி ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகியவையே இப்பிரிலின் முக்கியமான வேலைகளாகும். இக்கழகத்தின் ஆதிக்க வரம்பிலுள்ள பணிகள், தேசிய நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலை இந்திய நெடுஞ்சாலை நிறுவனங்கள் 239 களைத் தவிர மத்திய அரசு நிதி உதவிபெறும் சாலைகள், யூனியன் பிரதேசங்களின் பால வேலை கள், மாநிலங்களுக்கிடையிலான சாலைகள், திட்டக் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதாரச் சிறப்பு வாய்ந்த சாலைகள், சாலை மற்றும் பால செந்தாங்களை உருவாக்குதல், மத்திய சாலை நிதியை நிருவகித்தல், மத்திய அரசினால் முழுமையாகவோ பகுதியாகவோ நிதி உதவிபெற்று நடைபெறும் சாலை வேலைகளை நிருவகித்தல், சாலைப் புள்ளி விவரங்களைச் சேகரித்தல் ஆகியவையாகும். மத்திய போக்குவரத்து அமைச்சகத்தில் தோற்று விக்கப்பட்ட சாலைப் பிரிவு நீங்கலாக ஒருங்கிணைப்பு மற்றும் ஆய்வுக்கழகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. பல மாநிலங்களில் மத்திய அரசின் நிதி உதவியுடன் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை வேலைகளைக் கவனிக்க, தகுந்த அலுவலர்களைப் பேராளர்களாக இக்கழகம் அனுப்புகிறது. இந்தியச் சாலைகள் காங்கிரசின் ருபத்தைந் தாம் ஆண்டு மாநாட்டில் இரயில்வே வாரியத்தைப் போலவே சாலைகள் வாரியமும் ஏற்படுத்தப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டது. மாநில நெடுஞ்சாலைகளின் நிருவாகம். இம்மாநாடு களின் பரிந்துரைகளின் கீழ், மாநில அரசுகள் தங் களின் எல்லைக்குட்பட்ட சாலைகளின் பொறுப் பினை ஏற்றுக் கொள்ள வேண்டும். 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதிக்குப் பின்னர், மாநில நெடுஞ்சாலைகள், முதன்மை மாவட்டச் சாலைகள், சிறிய மாவட்டச் சாலைகள், கிராமச் சாவைகள், வனத்துறை, நீர்ப்பாசனததுறைகளின் கீழ்வரும் சாலைகள் ஆகியவற்றின் பொறுப்புகள் முழுவதையும் மாநிலங்களே ஏற்றுக்கொண்டன. உள்ளாட்சி அமைப்புகளின் கீழிருந்த சாலைகளையும் மாநிலப்பொதுப்பணித்துறைகளே எடுத்துக் கொள்ள வேண்டுமென்று இம் மாநாடுதான் பரிந்துரை செய் தது. குறைவான வளங்களைக் கொண்டிருந்ததாலும் தொழில்நுட்ப அறிவுப் பற்றாக் குறையாலும் இந்த உள்ளாட்சி அமைப்புகள் போக்குவரத்துத் தேவை களுக்கு ஈடுகொடுக்க முடியாதென உணரப்பட்டது. சில மாநிலங்கள் இம்மாநாட்டு முடிவைச் படுத்தத்தொடங்கி மாவட்ட வாரியச் சாலைகளைத் தம் பொறுப்பில் எடுத்துக் கொண்டன. செயல் மாநிலப் பொதுப்பணித் துறைகள் தலைமைப் பொறியாளர்களின் தலைமையில் அமைக்கப்பட்டு, ஒரு பகுதியில் பல வட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவ்வட்டங்கள் மேற்பார்வைப்பொறியாளர்களின் கீழ் இயங்குகின்றன. இவ்வட்டங்கள் மேலும் பல கோட்டங்களாகச் செயல்பொறியாளர்களின் கீழ் பிரிக்கப்பட்டன. இக்கோட்டங்கள் உதவிப்பொறி யாளர்களின் கீழ் இயங்கும் மேலும் பல துணைக்