246 இந்தியப் பெருங்கடல்
246 இந்தியப் பெருங்கடல் காணப்படுகிறது. வடகிழக்குப் பகுதிகளில் இவ் 34 பகுதியாகவும் சில சமயங் வுவர்ப்புத்தன்மை களில் 32 ஆகவும் குறைந்து காணப்படுகின்றது. இம்மாதிரியான குறைவு பல ஆறுகள் இப்பெருங் ஏற்பட்டுள்ளது வடிவதால் கடலின் பகுதியில் எனக் கருதுகிறார்கள். அண்டார்ட்டிக்காப் பகுதி யில் 40° அகலாங்கிற்குத் தெற்கே இவ்வுவர்ப்புத் பனிமலைகளின் அரிமானத்திற்குட்பட்டு தன்மை உருகுவதால், 1000த்தில் 33, 5 பகுதியாகக் குறைந்து காணப்படுகிறது. இப்பெருங்கடலின் மேற்பரப்பு நீரின் அடர்த்தி, இங்கு நிலவும் வெப்பத்தால் அடிக்கடி மாறுபட்டுக் காணப்படுகிறது. இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியிலுள்ள வங்காளவிரிகுடாப் பகுதியில் இந்நீர்ப் பரப்பின் அடர்த்தி மிகக் குறைவாகக் கனசதுர சென்டி மீட்டருக்கு 1.022 அளவிற்கும், அரபிக்கட லின் மேற்குப் புறத்தில் மிக அதிகமாக 1.025 அள விற்கும் காணப்படுகிறது. இப் பெருங்கடலின் தென் பகுதியில் நில நடுவரையின் பகுதியில் 1.023 இலிருந்து சிறிது சிறிதாக அண்டார்ட்டிக்கை நோக்கிச் செல்லச் செல்ல கூடிக்கொண்டே அண்டார்ட்டிக்கில் 1. 027 என்றாகிறது. சென்று நீர்ப்பரிமாணத்தின் செங்குத்துக் கட்டமைப்பு, கடல் நீரில் வெப்பமும் உவர்ப்புத்தன்மையும் குறையக் குறைய அடர்த்தி மிகுதலையும், ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அடர்த்தி குறைதலையும் காண்பது வழக்க மாயுள்ளன. இந்தியப் பெருங்கடலின் அண்டார்ட் டிக்கா பகுதியில் வெப்பம் மேற்கூறிய முறையைப் பின்பற்றுவதில்லை. அதற்குப் பதிலாக மிதவெப்பப் பகுதியில் உருவான வெதுவெதுப்பான நீர்த்தளம் 450 மீட்டரிலிருந்து 270 மீட்டர் ஆழத்திற்குள்ளான பகுதியில் காணப்படுகிறது. குறைவான உவர்ப்புத் தன்மையைப் பெற்ற அண்டார்ட்டிக்கிலிருந்து வரும் இவ்வகையான நீர்த் தளம் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறது. பனிக்கட்டி. இந்தியப் பெருங்கடலின் தென்பகுதி யிலுள்ள அண்டராட்டிக் பெருங்கடலில் பனி உரு வாகின்றது. இக்கடல் கரை விளிம்புகளில் 2மீட்டரி லிருந்து 3.5மீட்டர் வரை தடிமானம் பெற்ற பனிப் பாறை உருவாகிறது. கரையிலிருந்து இப்பனிப் பாறைகள் பல மைல்களுக்கு, கடலுள் பரவிக்காணப் படுகிறது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இங்கு வீசும் வலிமையான புயல்காற்றாலும் உருகுநிலை கோடைக்காலமாதலாலும் இப்பனிப் பாறைகள் உடைந்து பெரும் கட்டிகளாகக் கடலுள் பல நூற் றுக் கணக்கான கி.மீ. தொலைவிற்குக் கூட மிதந்து வருவதைக் காணலாம். ஒத இடைவெளி. இந்தியப் பெருங்கடலின் திறந்த வெளி வளாகங்களில் இவ்வோத இடைவெளி குறை வாகக் காணப்படுகிறது. இப்பகுதியில் 5மீ. முதல் 1.5மீ. வரை கொண்ட ஓதம் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக வடக்கு இதே ஆஸ்திரேலியாவின் வளைகுடாவில் ஓதவேறுபாடு 6மீ. முதல் 9மீ. வரை காணப்படுகிறது. போல் அரபிக்கடலில் முக்கியமாக குஜராத் மாநிலப் பகுதியிலும் வங்காள விரிகுடாவில், சுந்தரவனக் காட்டுப் பகுதியிலும் மிக அதிக ஓத வேறுபாடு உள்ளதாகக் கண்டுள்ளார்கள். நீரோட்டங்கள். இப்பெருங்கடலின் புற நீரோட் டங்கள் அவ்வப் பொழுது ஏற்படும் காற்றுச் சுழற் சியால் நிர்ணயிக்கப்படுகிறது. பருவக் காற்று மாற் றங்களால் பருவத்திற்குப் பருவம் நீரோட்டங்கள் 105° அகலாங்கிற்கு வடக்கே உள்ள பகுதியில் அரபிக் கடலில் வலஞ்சுழிச் சுழல் நீரோட்டம் ஏற் படுகிறது. இது சராசரரி வேகம் 1 நொடிக்கு 30 அங்குலம் முதல் 50 அங்குலம் வரை கொண்டுள்ளது. கோடைக் காலத்தில் இச்சுழற்சி முற்றிலும் எதிர் மாற்றம் கொண்டு காணப்படுகிறது. கோடைக் காலத்தில் தென்மேற்குப் பருவக்காற்றால் மேற்கி லிருந்து கிழக்காகக் காற்றின் வேகம் 1 நொடிக்கு 40 செ.மீ. காணப்படுகிறது. வங்காளவிரிகுடா வில் நொடிக்கு 20இலிருந்து 30 செ.மீ. வரையும் இடஞ்சுழி நீரோட்டம் எல்லாக் காலத்திலும் காணப் படுகிறது. குளிர் காலங்களில் இப்பருவக் காற்று முற்றிலும் மாற்றம் அடைந்து மேற்கு வட மேற்காக வீசுகிறது. இயற்கை வளங்கள், கனிமங்கள். இந்தியப் பெருங் கடல் அடியில் ஏராளமான கனிமங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கண்டத்திட்டுகளில் இயற்கை வாயுவும், பாறை எண்ணெய்ப் படிவுகளும் காணப் படுகின்றன. எடுத்துக்காட்டாகப் பெர்ஷியன் வளை குடா, செங்கடல், பாஸ் நீரோட்டப்பாதை, மேற்கு ஆஸ்திரேலியா, இந்தியாவின் மேற்கு கிழக்குக் கண்டத்திட்டுகள் முதலியனவாகும். தென்மேற்கு ஆஸ்திரேலியாக் கடற்கரையில் காணப்படும் சிலிக்கான், மூட்டைல் மணற்படிவுகள், இந்தியாவில் காணப்படும் மோனசைட், இல் மனைட், மேக்னடைட் போன்ற மணற்படிவுகள் அகுலாஸ் கரையில் காணப்படும் வைரம், பாஸ்போ ரைட் முடிச்சுகள், பவளப் பாறைகள் முதலியவற் றைக் குறிப்பிடலாம். இரும்பு, செம்பு, மாங்கனீசு மற்றும் பல உலோகத்தை உட்கூறாகக் கொண்ட படிவுகள் செங்கடல் பகுதிகளில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. நடுக்கடல் முகட்டில் அதிக அளவு குரோமைட்டுப் படிவுகளும் சல்பைடு படிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆழ்கடற்பகுதியில் குறிப்பாக இந்திய மையமாபெருங்கடல் பகுதியில் அதிக அளவு மாங்கனீசு முடிச்சுப் படிவுகள் கண்டு, பிடிக்கப்பட்டுள்ளன. மலேசியா இந்தோனேசியா