இந்தியப் பொறியாளர் நிறுவனம் 249
இந்நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வித் தகுதி யினை உடையவராகவோ இருத்தல் வேண்டும். (ஈ) பயிற்சி. இந்நிறுவனத்தினால் அங்கீகரிக்கப் பட்ட கல்வித் தகுதியினைப் பயிற்றுவிக்கும் பொறி யியல் கல்லூரி அல்லது நிறுவனத்தின் முறையான கல்வியின் போது பெறப்படும் பொறியியல் பயிற்சி யினை உடையவராக இருத்தல் வேண்டும். இணை உறுப்பினர்கள். வேறொரு பிரிவிலிருந்து இணை உறுப்பினராக மாறுவதற்கோ தேர்ந்தெடுக் கப்படுவதற்கோ ஒவ்வொருவரும் கீழ்க்கண்ட தகுதி களைப் பெற்றிருக்க வேண்டும். (அ) வயது மாறுதலுக்கான அல்லது தேர்ந் தெடுக்கப்படுவதற்கான விண்ணப்ப நாளில் முப்பது வயதை அடைந்திருக்க வேண்டும். (ஆ) தொழில். ஒரு பொறியியல் கல்லூரி அல்லது தொழில் நுட்ப நிறுவனத்தில் ஆசிரியராகவோ பொறியியல் துறையில் ஒரு பொறுப்பான பதவி யிலோ இருத்தல் வேண்டும். தகுதியில்லாமல் (இ) தேர்வு. பொறியியலில் அறிவியல் அல்லது சமூக அறிவியலில்பட்டம் பெற்ற வராக இருத்தல் வேண்டும். மாணவர்கள். இந்நிறுவனத்தில் மாணவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒவ்வொருவரும் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். 1) இந்நிறுவனத்தினரால் நடத்தப்பெறும் மாண வர்களுக்கான தேர்வில் தேர்வு பெற்றிருக்க வேண் டும். அல்லது இந்நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வித்தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும். 2) விண்ணப்ப நாளில் 16 வயதை அடைந் திருக்க வேண்டும். 3) இணைக்கப்பட்ட உறுப்பினர்களின் பிரிவின் கீழ் பொறியாளர் ஆவதற்காகப் பயிலும் மாணவ ராக இருத்தல் வேண்டும். தொழில் நுட்பவியலாளர்கள். வேறு பிரிவுகளிலிருந்து தொழில் நுட்பவியலாளர்களாக மாறுவதற்கோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ ஒவ்வொருவரும் பின் வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். (அ) வயது. விண்ணப்ப நாளில் 18 வயதை அடைந்திருத்தல் வேண்டும். (ஆ) தேர்வு மற்றும் அனுபவம். பள்ளி இறுதித் தேர் வில் அல்லது அதற்கிணையான தேர்வில் வெற்றி பெற்றவராயிருத்தல் வேண்டும். அதனுடன் ஒரு தொழிற்சாலையில் பொறியியல் பிரிவில் 10 ஆண்டு களுக்குக் குறையாத பட்டறிவு பெற்றிருத்தல் வேண்டும் அல்லது பள்ளியிறுதித் தேர்வு அல்லது இந்தியப் பொறியாளர் நிறுவனம் 249 அதற்கிணையான தேர்வில் வெற்றி பெற்றிருப் பதுடன் ஏற்கப்பட்ட தொழில் நிறுவனத்தில் 3 ஆண்டுகள்தொழிலைக் கற்றுக்கொண்ட (apprentice) பயிற்சி உடையவராய் இருத்தல் வேண்டும் அல்லது இந்திய அரசின் 10+2 கல்வித் திட்டத்தின் தொழில் துறையில் தேறியவராக இருத்தல் வேண்டும். பயனடையும் மற்றும் நன்கொடையளிக்கும் உறுப்பி னர்கள். இந்நிறுவனத்தின் விருப்பத்திற்கேற்ப, இணைய விரும்பும் எந்தவொரு பொது அல்லது உள்ளூர் அமைப்பையோ, பதிவுபெற்ற கழகம் அல்லது நிறுவனத்தையோ, தனியாரையோ பயனடையும் மற்றும் நன்கொடையளிக்கும் உறுப்பினராக இந்நிறுவனம் இணைத்துக் கொள்ளும். பிரிவுகள். இந்நிறுவனம் கல்வித்துறையில் ஏற் றுக்கொள்ளப்பட்ட பின்வரும் பொறியியல் பிரிவு களை அப்பொறியியல் கிளைகளின் வளர்ச்சிக்காகக் கொண்டிருக்கும். அவை பொதுப் பொறியியல் பிரிவு, எந்திரப் பொறியியல் மின் பொறியியல் பிரிவு. சுரங்கம் மற்றும் உலோகவியல் பிரிவு, மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியியல் பிரிவு, வேதியியல் பொறியியல் பிரிவு. சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவு என்பனவாகும். இவற்றுடன் இந்நிறுவனம் பின்வரும் பிரிவு களில் தனித்தகுதிகளைப் பெற்றுள்ள உறுப்பினர் களுக்காகப் பின்வரும் பிரிவுகளையும் நிறுவியது. அவை வேளாண்மைப் பொறியியல், நெசவுப் பொறியியல், வான் விண்வெளிப் (aerospace) பொறி யியல், கடல்கள் கட்டடக்கலைப் பொறியியல், பொறியியல் என்பனவாகும். இவையன்றி, பொறியியல் துறையின் எந்த ஒரு கிளையிலும் தனித் தகுதிகளைப் பெற்றுள்ள அதிக அளவிலான இணைக்கப்பட்ட உறுப்பினர்கள் புதுப் பிரிவுகளை நிறுவும்படி கோரினால் இந்நிறுவனம் அப்பிரிவின் வளர்ச்சிக்காகப் புதுப் பிரிவுகளை உரு வாக்கலாம். ஒரு புதுப்பிரிவு உருவாக்கப்பட்ட ஆண்டுகள் கழித்து, அதில் தேவையான அளவு உறுப்பினர்கள் இல்லையென்று இந்நிறுவனம் கருதி னால், அப்பிரிவை இந்நிறுவனம் நீக்கம் செய்து விடும். மேலும், தனிப்பட்ட ஒரு துறையைச் சிறப் பாக வளர்க்க ஒரு பிரிவிலேயே பலகுழுக்களையும் உருவாக்கும். இப்பிரிவுகளில் 50 பேருக்குக் குறை யாமல் இணைக்கப்பட்ட உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும். தொடக்கத்தில் இணைக்கப்பட்ட உறுப்பி னர்கள் அவர்களுடைய அடிப்படைக் கல்வித் தகுதிக் கேற்ப ஒரு பிரிவில் மட்டும் இந்நிறுவனத்தில் உறுப் பினராகச் சேர்த்துக் கொள்ளப்படுவர். ஆனால். ஒரு பிரிவிற்கு மேல் இணையத் தேவையான தகுதி களைப் பெற்றிருந்தால், ஓர் இணைக்கப்பட்ட