பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 இந்திய மாடுகள்‌

258 இந்திய மாடுகள் இவர்கள் இம் மாட்டை வளர்ப்பதிலும் விருத்தி செய்வதிலும் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். காளை வெண்மையும் இலேசான கருமையும் கலந்த நிறமுடையது. கரு விழிகளும், பரந்த முகமும், அகன்ற மார்பும் கொண்டு, முகத்தில் பொறுமையும். அழகும் வாய்ந்த கம்பீரமான தோற்றமுடையது கொம்புகள் கனத்தும் மொட்டையாகவுமிருக்கும். தாடித்தோலும் நீர்த்தாரைத் தோலும் உழ பல சுருக்குகள் கொண்டு தடித்திருக்கும். ஏறக்குறைய 150 செ.மீ. உயரமும், ஆயிரத்து இருநூறு பவுண்டு எடை டயும் உடையது. இம்மாடு கனத்த வண்டி களை இழுத்து, மெதுவாக, நீண்ட தொலைவு எளி தாகச் செல்லக்கூடியது. உழவில், முக்கியமாகப் பருத்தி விளையும் கரிசல் நிலத்தை உ ணை யற்றது. பசு தன் முகத்திலே தாயின் கருணையைக் கொண்ட ஓர் அழகிய வெண்ணிறமுடையமாடு.சுமார் 140செ.மீ. உயரமும். 950பவுண்டு எடையுமுடையது. நாள் ஒன்றுக்கு 6-6 லிட்டர் பால் கொடுக்கும். கன்று போட்டுச் சுமார் 10 அல்லது 11 மாதங்களுக் குப் பால் கொடுக்கும். இதை விருத்தி செய்தால் எளிதில் 8-10 லிட்டர் பால் கொடுக்கக் கூடும். சென்னை நகருக்குப் பால் தரும் பலவகை மாடு களுள், ஒங்கோல் மாடுகளே மிகுதி. சென்னைக்கு அருகிலுள்ள திருவொற்றியூரில் இம்மாடுகளின் விற் பனைக்காகவே ஒரு சந்தை ஏற்பட்டு, ஆண்டு முழுதும் நடந்து வருகின்றது. பால் வற்றிய காலத் தில் பசுக்களைச் சென்னையில் வைத்துக் காப்பாற்று வது இயலாமலிருப்பதால், 100க்கு 60 இளம் பசுக் கள் அடிமாடாகச் சென்னையில் விற்கப்படுகின்றன என்பதை அறிந்து அரசு காம்பாக்கமென்னும் இடத் தில் ஒரு பண்ணையை அமைத்துப் பால் வற்றிய பசுக்களை ஏற்றுக் கொண்டு ஆதரித்துக் போட்டதும் உரிமையாளரிடம் மாடுகளைத் திருப்பி அனுப்பிவிடுகிறது. இதற்கு மிகக் குறைந்த கட்ட ணமே வாங்குகிறது. கன்று காங்கேய மாடு. இவ்வகை மாட்டின் பிறப்பிடம் கோயமுத்தூர் மாவட்டத்தில் தாராபுரம் வட்டத் தைச் சேர்ந்த காங்கேயமாகும். அங்கு இவ்வினத் தின் உயர்தர மாடுகளைக் காணலாம். அவ்வூரின் பெயரே இவற்றிற்கு அமைந்துள்ளது.அசல் காங்கேய மாடுகளைக் காணப் பழைய கோட்டைப் பட்டயக் காரரிடம் சென்று பார்க்கலாம். இவ்வகை மாட்டை உற்பத்தி செய்தவர்கள் அவருடைய முன்னோர் களென்றே சொல்லவேண்டும். காலஞ்சென்ற நல்ல தம்பிச் சர்க்கரை மன்றாடியார் இவ்வகையான மாடு களை நன்கு விருத்தி செய்தார். இம் மாடு ஓங்கோல் மாட்டைப்போல் இருதிறப் பயன் கொண்டதென்று சொல்ல இயலாது. இது வேலைக்கு மட்டும் சிறந்தது. ஆனால் இம்மாட்டின் பாலையும் அதிகரிக்கக் கூடுமென்பது அறிவியல் ஆராய்ச்சியின் முடிவாகும். இவ்வகைக் காளைமாட்டின் அழகு கண்ணைக் கவரும். அதிகப் பருமனும் உயரமுமின்றிக் கட்டான உடலுடன், வலிமையும் வீரியமும் வாய்ந்து, அதிக சுறுசுறுப்பாக இருக்கும். உடல் வெண்ணிறம் கொண் டும், திமில், முகம், கால்கள் மெல்லிய கருமைகலந்தும், நீலமேக நிறத்துடனும், ஊடுருவிச் செல்லும் பார் வையுடனும் கம்பீரமாகக் காணப்படும். வெண்ணிறமாகவும், தாடித்தோலும், நீர்த் தாரைத்தோலும் மென்மை யாகவும், அதிகம் தொங்காமலும் இருக்கும். பரந்த முகத்தையும், 40 செ.மீ. வரை நீளமுள்ள கொம்பு களையும் உடையது. சாதாரணமாக 25 செ.மீ. உயரமும் 1,000 பவுண்டு எடையுமுடையது. 10-12 ஆண்டுகளுக்குக் குறையாமல் உழைக்கும் ஆற்றல் வாய்ந்தது. பசு மெல்லிய கருமை கலந்துமிருக்கும். நாளொன்றுக்கு 3 லிட்டர் பால் கொடுக்கும். 8 மாதங்களுக்குப் பால் கறக்கும். கன்று பிறக்கும் போது சிவந்த நிறத்துடனிருக்கும்; பிறகு 3,4 மாதங்களுக்கெல்லாம் நிறம் மாறும். கெட்டியான தரையிலுங்கூட நன்கு வேலை செய்யும். தென்னாட்டில் பல மாவட்டங்களில் விவசாயத் திற்கும், நாட்டு மாடுகளை விருத்தி செய்வதற்கும் இந்த இனத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஹள்ளிக்கார் மாடு. இது மைசூர் மேட்டுப் பகுதி யைச் சேர்ந்தது. மைசூர் மாடென்று சாதாரண மாகப் பெயர் வழங்கும்; ஆயினும் சித்தூர், அனந் தப்பூர், சேலம் முதலிய மாவட்டங்களிலும் வளர்க் கப்பட்டு வருகின்றது. இதன் உடல் நீண்டு தசை யற்றுக் கட்டுடனிருக்கும். முகம் நீளமாக இருக்கும். நெற்றியின் நடுவிலே மேலிருந்து கீழ் நோக்கிச் செல் லும் சிறிய பள்ளமுண்டு. பள்ளத்தின் மேற்பாக முடி விலே ஒரு குமிழியுண்டு. கொம்புகள் அதிகம் நீண்டி ருக்கும். கால்கள் பலமும் வேகமும் வாய்ந்த பரும னின்றியிருக்கும். சுமார் 125 செ.மீ. உயரமுள்ளது. பல நிறங்களுடன் இருக்கும். தசைநிறமுடைய மாடும், முகத்திலும் கழுத்திலும் வெள்ளையும் கருமையும் கலந்த மாடும் உண்டு. சாதாரணமாகக் கருமயிலை நிறமே அதிகம் காணப்படும். இம்மாடு வேலைக்கு கந்தது. ஆகவே பல மாவட்டங்களில் இதை வண்டிக்குப் பயன்படுத்துவதைக் காணலாம். பசு ஒரு நாளைக்கு 11 - 2 லிட்டர் பால் கொடுப்பது அரிது. இவற்றிலும் பாலை அதிகப்படுத்தக் கூடு மென்று ஓசூர்ப் பண்ணையினர் கருதுகின்றனர். அமிர்தமஹால் மாடு. இதை கர்நாடக மாநிலத் தைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. பல மைசூர் அரசர்களால் ஆதரிக்கப்பட்டுப் போர்க் களங்களில் பீரங்கி வண்டிகளையும், மற்ற வண்டி களையும் இழுத்து வந்தது. இது எதிர்க்கும் புலி களையும் கொன்று வெற்றி பெற்ற மாடென்று பெயர் பெற்றிருக்கிறது. ஆகையால் வலிமைக்கும், நடைக்கும் பெயர் பெற்றது. மிகுந்த மான உணர்ச்சி