இந்திய வனவிலங்கு 259
கொண்டது. கருமையும் வெண்மையும் கலந்த ஒரு வகையான சாம்பல் நிறமுள்ளது. 125 செ.மீ. உயரம் உள்ளது. ஹள்ளிக்கார் மாடுகளைவிடப் பருத்த உடலையும் தடித்த எலும்புகளையும் உடையது. நீண்ட கொம்புகளை உடையது. பசு நாள் ஒன்றுக்கு 14-2 லிட்டர்தான் பால் கொடுக்கும். கர்நாடக அரசு அஜ்ஜம்பூர் என்னும் ஊரில் ஒரு பண்ணையை அமைத்து இதைப் பெருக்கி வருகிறது. புலிக்குளம் அல்லது சல்லிக்கட்டு மாடு. இது மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களில் வளர்க்கப்படும் மாடு, உடல் இலக்கணங்களில் காங்கேயம் மாடு களில் மட்டமானதைப் போலிருக்கும். அதிகச் சுறு சுறுப்பும் மானவுணர்வும் உள்ள மாடு. பெரும்பா லும் கருமயிலை நிறத்துடனிருக்கும். இதைத் தைப் பொங்கல் நாள்களில் மாடுபிடி விழாவில் சல்லிக் கட்டு மாடென்ற பெயருடன் ஓடவிட்டு விளை யாட்டுப் பார்ப்பார்கள். உம்பளச்சேரி மாடு. இது தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உம்பளச்சேரி என்னுமிடத்திலிருந்து இப்பெயர் பெற்றது. இதன் பிறப்பிடம் தொடக்கத்தில் இவ்வூரைச் சுற்றியுள்ள பகுதியே. காங்கேயம் மாட்டில் முக்கால் திட்டமும் அதைப் போலவே எல்லா உடல் லக்கணங்களும் அமைந்தது. ஆனால் நான்கு கால்களிலும் வெண்மை நிறம், நெற்றியில் வெண்மை, வால் மயிரிலும் லெண்மை நிறம் கொண்டது. பெரும் பாலும் இம்மாட்டின் கொம்புகளைத் தீய்த்து விடுகிறார்கள். காதுகளையும் துண்டித்து விடு கிறார்கள். இது மானவுணர்வும் சுறுசுறுப்பும் வாய்ந்த மாடு. இதைப் பழக்குவது எளிதன்று. கடிப் பதும் உதைப்பதும் இதன் இயற்கை. அந்த மாவட்டத் தில் உழவுக்கு மட்டமானதும் அதிகச் சுறுசுறுப் புற்றதுமான மாடு வேண்டியிருப்பதால், இந்த வகை மாடு அங்கு அதிகம் சிறப்புற்றிருக்கிறது. இதற்குத் தீனிச் செலவும் குறைவு. அதிக நாள் உழைப்பதாகக் கூறப்படுகிறது. பசுக்கள் ஒரு நாளைக்கு 4 - 1லிட்டர் பால் கொடுப்பது அரிதாகும். மணப்பாறை மாடு. இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள மணப்பாறையென்னும் ஊருக்குச் சுற்றுப் பக்கங்களிலிருந்து அங்கு நடக்கும் மாட்டுச் சந்தைகளுக்குக் கொண்டுவரப்படும். இது வெண்மை நிறத்துடன் எல்லா வகையிலும் காங்கேயம் மாடு போலிருக்கும். விவசாயத்திற்கு மிகவும் உகந்தது. வண்டியையும் நன்றாக இழுக்கும். காங்கேயம் மாடு களை விட உயரத்தில் சற்று மட்டமாயிருக்கும். பருகூர் மாடு. இது கோவை மாவட்டத்தில் பவானி வட்டத்திலுள்ள பருகூர் மலைக் காடுகளில் வளர்க்கப்பட்டு வருகிறது. இது ஹள்ளிக்கார் மாட் டிற்கும், நாட்டு மாட்டிற்கும் பிறந்த கலப்பினமாக அ.க.4-17அ இந்திய வனவிலங்கு வாரியம் 259 இருக்கலாம். இதன் நிறம் சிவப்பும் வெள்ளையும் கலந்தது. முகத்திலும் உடலிலும் ஹள்ளிக்கார் மாட்டை ஒத்திருக்கும். சுறுசுறுப்புள்ள மாடு. வண்டி யில் வெகு விரைவாகப் போகக்கூடியது. இதைப் இது எவ்வளவு பழக்குவதும் எளிதன்று. செய்தாலும் களைத்துப் போகாது. வேலை ஆலம்பாடி மாடு. இது சேலம் மாவட்டத்தில் ஓசூர், தர்மபுரி வட்டங்களில் வளர்க்கப்பட்டு வரு சேலம் கிறது. இது மைசூர் மாட்டின் கலப்பு. மாவட்டத்திற்கும், மைசூருக்கும் இடையில் ஓடும் காவிரியாற்றங்கரையிலுள்ள காடுகளில் தொடக் கத்தில் வளர்க்கப்பட்டதால் அங்கிருந்த ஆலம்பாடி என்னும் ஒரு சிற்றூரின் பெயரைப் பெற்றது. இம் மாடு இப்போது கோயம்புத்தூர் மாவட்டத்திலும், மைசூரில் சில பாகங்களிலும் வளர்க்கப்பட்டு வரு கிறது. இது ஹள்ளிக்கார் மாட்டைவிடப் பருத்தும், கனத்த கொம்புகளுடனும், நீண்ட காதுகளுடனும், முன்னே தள்ளிக் கொண்டிருக்கும் நெற்றியுடனும் காணப்படும். வண்டிக்கும் உழவுக்கும் ஏற்றது. புங்கனூர் மாடு. இது சித்தூர் மாவட்டத்திலுள்ள புங்கனூர் என்னும் பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த அதிக மட்டமான மாடாக இருந்தாலும், நாள் ஒன்றுக்கு 4-8 லிட்டர் பால் கொடுத்து வந்தது. இதற்குத் தீனிச்செலவு குறைவு. ஆகையால், இம் மாடு பல திக்குகளிலும் விற்கப்பட்டதால் இப்போது முற்றிலும் மறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய வனவிலங்கு வாரியம் இந்திய வனவிலங்கு வாரியம் (Indian Wildlife Board) இந்திய அரசிற்கு வனவிலங்குகள் பற்றி ஆலோசனை வழங்கும் அமைப்பாக உள்ளது. இந்திய வன விலங்குகளைப் பாதுகாப்பதற்காக 1950 ஆம் ஆண்டில் இந்தியத் தலைமை வன ஆய்வாளரைத் தற் காலிகத் தலைவராகக் கொண்ட ஒரு குழு ஏற்படுத் தப்பட்டது இக்குழுவின் பரிந்துரைகளுக்கேற்ப 23 பேர் அடங்கிய மைய வனவிலங்கு வாரியம் 1952 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது; இந்திய விலங் கியல் அளவாய்வின் இயக்குநராகப் பணியாற்றிய டாக்டர் எஸ்.எல். ஹோரா (S.L. Hora) அதன் முதல் கௌரவச் செயலராக நியமிக்கப்பட்டார். அன்றாட நிகழ்ச்சிகளைத் தீர்மானிப்பதற்கும், குழுவின் சார்பில் அதன் முடிவுகளைச் செயல்படுத் தவும் அதே ஆண்டின் முடிவில் மைசூரில் நடந்த முதல் கூட்டத்தில் இவ் வாரியம் ஒரு செயற்குழுவை ஏற்படுத்தியது. பின்னர் அரசின் ஆதரவு கருதி இந்திய வளவிலங்கு வாரியம் என்று மாற்றியமைக் கப்பட்டதுடன் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய எழுபதாக உயர்த்தப்பட்டது.