260 இந்திய வனவிலங்கு
260 இந்திய வனவிலங்கு வாரியம் அரசு ஊழியர்களும், வன வளத்திலும் வன விலங்குகளிலும் ஈடுபாடுள்ள அரசு ஊழியரல்லாத வர்களும் இந்திய வனவிலங்கு வாரியத்தில் இடம் பெற்றுள்ளனர். இந்த அமைப்பில் ஒரு தலைவரும், இரண்டு துணைத் தலைவர்களும், ஒரு தாளாளரும். வடக்கு தெற்கு கிழக்கு மேற்குப் பகுதிகளுக்கு என நான்கு மண்டலச் சார்பாளர்களும், இந்திய விலங்கியல் அளவாய்வின் இயக்குநர், இந்தியத் தாவர அளவாய்வு இயக்குநர்களுடன் பல மாநிலத் தலைமை வனப்பாதுகாவலர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இயற்கை வனப்பில் ஈடுபாடுடைய கழகங் கள், வனவிலங்குப் பாதுகாப்புக் கழகங்கள், பறவை யியல் கழகங்களின் சார்பாளர்களும் இவ்வாரியத்தின் உறுப்பினராக உள்ளனர். இந்திய வனவிலங்கு வாரி யத்தில் பறவைகள், விலங்குகள் தாவரங்களுக்கெனத் தனித்தனிப் பிரிவுகள் உள்ளன. இவற்றின் விரிவான பரிந்துரைகள் இந்திய வனவிலங்கு வாரியத்திலிருந்து தொடர்புடையவர்களுக்கு அனுப்பப்படும். தற் பொழுது, இந்தியப் பிரதமர் இந்திய வனவிலங்கு வாரியத்தின் தலைவராக உள்ளார். உறுப்பினர் களின் பதவிக் காலம் நான்காண்டுகளுக்கு ஒரு முறை தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்படுகிறது. இவ்வாரியம் வனவிலங்குப் பாதுகாப்பு நடவடிக் கைகளைக் குறித்து அரசுக்கு ஆலோசனை கூறி இயங்கி வருகிறது. ஆண்டுக்கொருமுறை வாரியக் கூட்டமும் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகக் குழுக்கூட்டமும் நடைபெறும். வாரியத்தின் கூட்டம் சுழற்சி முறையில் நான்கு மண்டலங்களில் ஏதாவது ஒரு மண்டலத்திலோ மைய அலுவலகத்திலோ நடை பெறும். மாநிலங்களில் மாநில வனவிலங்கு ஆலோசனை வாரியம் ஏற்படுத்தப்பட்டு, மைய அரசின் முக்கிய பரிந்துரைகளும் முடிவுகளும் நிறை வேற்றப்படுகின்றன. இந்திய வனவிலங்கு வாரியத்தின் பணிகள். வன விலங்குகளைப் பாதுகாக்கச் சட்டப்பூர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் தேவையான நடவடிக்கை எடுத்தல்; தட்பவெப்ப நிலைக்கு ஏற்பவும் சூழ் நிலைக்கேற்பவும் உயிரினங்களைப் பாதுகாப் பதற்கும் வரைமுறையின்றி உயிரினங்கள் கொல்லப் படுவதைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்தல்; தேசியப் பூங்காக்கள் வனவிலங்குப் புகலரண்கள் விலங்குக் காட்சியகங்கள் பூங்காக்கள் போன்ற வற்றை அமைக்கப் பரிந்துரைகள் செய்தல், ஆ ஆலோசனை கூறுதல்; இயற்கைச் சூழ்நிலைக் கேற்பவும், மக்களின் வாழும் நிலைக்கு ஏற்பவும் வன விலங்குகளைப் பாதுகாக்கப் பொதுமக்களின் ஆர்வத்தைத் தூண்டுதல்;வனவிலங்குகளை உயிருடன் ஏற்றுமதி செய்வது தொடர்பாகவும் வனவிலங்கு களின் தோல் மயிர் இறக்கை ஆகியவற்றை ஏற்றுமதி செய்வது தொடர்பாகவும் அரசிறகு அவ்வப்பொழுது ஆலோசனை வழங்குதல்; உயிருடன் பிடிக்கப்பட்ட விலங்குகள் பறவைகளுக்கு ஏற்படும் இன்னல்களைக் கட்டுப்படுத்துதல்; வனவிலங்குக் கழகங்கள் தொடங் குவதை ஊக்குவித்து உதவி செய்வதுடன் அவைய னைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட அவற்றை ணைக்கும் ஒரு மைய நிறுவனமாகச் செயல்படுதல்; வாரியத்தின் வரையறுக்கப்பட்ட செயல் முறை களுக்கு ஏற்ப அரசிற்கு ஆலோசனைகளையும் ஏற்புடைய பரிந்துரைகளையும் வழங்குதல்; இத் தகைய பணிகளைத் தனித்தோ பிற கழகங்களுடன் இணைந்தோ செயல்படுத்துவதோடு இந்திய அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப வனவிலங்குகளைப் பாது காப்பதற்குத் தேவையான செயல்களில் ஈடுபடுதல் என்பன குறிப்பிடத்தக்கவை. இந்திய வனவிலங்கு வாரியம், நிலையான குழு ஒன்றை அமைத்து அதன் செயல்களுடன் தொடர் புடைய பல பணிகளைக் கண்காணிக்கிறது. வாரி யத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றவும், மத்திய மாநில அரசுகளுக்கு இத்துறையில் உதவி செய்யவும் ஆலோசனைகள் கூறி மேற்பார்வையிட்டுக் கண் காணிக்கிறது. வாரியத்தின் பணிகளைத் தேவைக் கேற்பச் செயல்படுத்துகிறது. நிர்வாகக் குழு, துணை நிர்வாகக் குழு ஆகியவற்றை விதிமுறைகளுக்கு ஏற்ப அமைத்தும் சிறப்புக் குழுக்களை அமைத்தும் வாரி யத்தின் பணிகளைப் பங்கிட்டுச் செம்மையாகச் செயல்படுத்துகிறது. இவ்வாரியம் தனிக்குழுக்களை அமைத்துச் சில முக்கிய வேலைகளைக் கண்காணிக் கிறது. மிகுந்த திறமையுடன் பணியாற்றி அதன் பொறுப்புக்களை நிறைவு செய்கிறது. இந்திய வன விலங்கு வாரியத்தின் சாதனைகளாகக் பின்வருவன வற்றைக் குறிப்பிடலாம். 1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய வன விலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் வனவிலங் கினங்களை, குறிப்பாக அருகி வரும் விலங்கினங்களை அட்டவணைப்படுத்திப் பாதுகாப்பு அளித்துள்ளது. அட்டவணைப்படுத்தப்பட்ட விலங்கினங்களின் பட்டியல்கள் காலத்திற்கேற்ப மாற்றப்படுகின்றன. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற மாநிலங்கள் அனைத்தும் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தைக் கடைப்பிடிக்கின்றன. அண்மைக்காலத்திய புதிய கருத் துக்களின் பிரதிபலிப்பாகத் திறந்த வெளி விலங்கியல் பூங்கா ஒன்று 1955 ஆம் ஆண்டு டெல்லியில் அமைக் கப்பட்டது. பாதுகாக்கப்படும் புகலரண்களின் (sanctuaries) எண்ணிக்கை 33 இலிருந்து 256 ஆக உயர்த்தப்பட்டது. இவற்றில் 45 தேசியப் பூங்காக் களும் 211 புகலரண்களும் அடங்கும். 1976 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த 42 ஆவது அரசியல் சட்டச் சீர்திருத்த மசோதாவின் அடிப்படை யில் வனங்களும், வனவிலங்குகளும், பறவைகளும் பாதுகாக்கப்படுகின்றன. மத்திய அரசு, வனவிலங்கு களைப் பாதுகாப்பதுடன் தனது அதிகாரத்தைப்