பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 இந்திய வான்வழிப்‌ போக்குவரத்து வரலாறு

262 இந்திய வான்வழிப் போக்குவரத்து வரலாறு ஆம்ஸ்டர்டாம் தீவிலிருந்து வடதுருவத்திற்குச் சென்று திரும்ப ஆகும் 1600 மைல் தொலைவை ஏறத்தாழ 16 மணி நேரங்களில் கடந்ததன் மூலமாக 1926 ஆம் ஆண்டில் வடதுருவம். ஆகாயம் மூலம் வெற்றி கண்டது. அமெரிக்காவைச் சேர்ந்த போஸ்ட் (Post) மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேட்டி (Gatty) ஆகிய இருவரும் 1930 ஆம் ஆண்டில் ஒன்பது தினங்களில் உலகைச் சுற்றி வந்தது மற்றொரு குறிப்பிடத்தக்க செயலாகும். பின்னர் இம்பீரியல் வான்வழிக் (Imperial Airways) கழகம் ஐந்துமுறை அட்லாண்டிக் மாகடலை இருவழியில் கடந்ததன் மூலம் முறைப்படியான அட்லாண்டிக் மாகடலின் குறுக்காகக் கடிதம் மற்றும் பயணிகள் போக்கு வரத்து ஏற்படவழி ஏற்பட்டது. 1924 ஆம் ஆண்டில் கண்டங்களுக்கிடையிலான வழித்தடங்களில் இரவு நேரப் பயணங்கள் துவங்கின. விமானத்திலிருந்து நிலத்திற்கான ரேடியோ தொடர்பு முதன்முதலில் 1929 ஆம் ஆண்டில் ஏற்பட்டதிலிருந்து விமானப் பயணம் குறிப்பிடத்தக்க பாதுகாப்புடன் விளங்கியது. ஆகாய விமானம், விமானம் ஓட்டுதல் ஆகிய வற்றின் தொழில்நுட்ப வளர்ச்சியில் இரண்டாம் உலகப்போரின் தாக்கம் பெரும்பங்கு வகித்தது. போருக்கு முன்னர், பயணிகள் மற்றும் பொருள் களுக்கான வான்வழிப் போக்குவரத்து ஓர் எளிய வழக்கமான நிலையை அடைந்திருக்கவில்லை. அமைதியான காலங்களில் இருபத்தைந்து ஆண்டு களில் நிகழ்ந்திருக்கக் கூடிய வளர்ச்சியைப் போரா னது வெறும் ஆறு ஆண்டுகளில் நிகழச் செய்தது. போரில் ஈடுபட்ட நாடுகளால் பயணிகள் மற்றும் பொருள்களைக் கொண்டு செல்லும் ஒரு விரிவான வலைப்பின்னல் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப் பட்டன. மதிப்பு, சிக்கன நடவடிக்கைகளில் அவை கருத்தைச் செலுத்தாமல் விரைவில் மட்டும் கல னத்தைச் செலுத்தின. போருக்குப் பின்னர், குண்டு வீச்சு விமானங்களான டூக்ளஸ் DC-4 (Douglas DC-4), போயிங் ஸ்டான்ட்டோ குரூய்ஸ்ர் (Boeing Stanto Cruiser), லாக்ஹீட் நிறுவுதல்கள் (Lockheed Installations) முதலானவை வாணிக விமானங்களாக மாற்றப்பட்டன. பின்னர் 1944 ஆம் ஆண்டில் 52 நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகள் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் கூடி அனைத்துலகப் பயணி விமானம் ஓட்டுதல் (International Civil Aviation) தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்தனர். அதன் முடிவாக ஒரு அனைத்துலகப் பொது விமான ஓட்டு தல் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டுப் பரிந் துரைகளின்படி 1947 ஆம் ஆண்டில் அனைத்துலகப் பயணி விமானம் ஓட்டும் கழகம் (International Civil Aviation Organisation - I.C.A.O.) நிறுவப்பட்டது. இக்கழகம் அதே ஆண்டில் ஐக்கிய நாடுகள் கழகத் துடன் தொடர்புடையதாக ஆனது. பின்னர், விமானத்தின் விரைவு. வடிவமைப்பு, விமானம் செலுத்த உதவும் கருவிகள் மற்றும் இறங்கும் வசதிகள் ஆகியவற்றின் வளர்ச்சி ஒரே சீராக இருந்தது. தாரை உந்து விமானங்கள் (Jet Planes) மற்றும் மிகைஒலித் தாரை உந்து விமானங்கள் பல வசதிகளைக் கொண்டு வந்தன. மேலும் அவற்றில் உண்டாகக்கூடிய அதிவிரைவு மற்றும் அதிக எடை பற்றிய சிக்கல்களையும் அறிமுகப்படுத்தின. 1903 ஆம் ஆண்டில் ஒரு மணிநேரத்திற்கு 20 மைல் என்றிருந்த வேகம் சீராக அதிகரித்துக் கொண்டே சென்றது. 1919 ஆம் ஆண்டில் வேகம் மணிக்கு 137 மைலை அடைந்தது. 1913 ஆம் ஆண் டிற்குப் பிறகு சிற்சில நேரங்களில் அதிவிரைவாகப் பறக்கும் போட்டி நிகழத் துவங்கியது. பலமுறை பிரிட்டனைச் சார்த்த விமான ஓட்டிகள் இப்போட்டி களில் வெற்றி பெற்றனர். சராசரி பெரும விரைவு 1929 ஆம் ஆண்டில் மணிக்கு 338 மைலும், 1931 ஆம் ஆண்டில் மணிக்கு 388 மைலும், 1944 ஆம் ஆண்டில் மணிக்கு 440 மைலும் ஆக அதிகரித்தது. அதன் பின்னர் விமானங்களின் விரைவு வெகு விரைவாக வகை அட்டவணை விமானத்தின் ஆண்டு சராசரி வேகம் (மணிக்குகி.மீ.இல்) குறிப்பு 1935 300 1942 335 DC-3 DC-4 மற்றும் சுழலி அறிமுகமாதல். கான்ஸ்ட்ட (லேசன் 1049 (Constellation ) 1947 480 DC-C 1951 490 காமெட் 1951 770 சுழலித்தாரைகள் (Comet) DC-8 6958 போயிங் 707 போயிங் 720 கன்வெய்ர் 990 (Convair 990) மிகை ஒலி விமானங்கள் 1959 910 1961 960 சோவியத் நாட்டின் மிக் விமானங்கள் 1964 1130 ஒலியைவிடக் கூடுதலான வேகம் 2500 ஒலியைவிடக் கூடுதலான வேகம்