இமாஃப் தொட்டி 277
கரிமப் பொருளே இம்ப் சோனைட்டு என அழைக்கப் படுகின்றது என்ற கருத்தும் நிலவுகிறது. இம்ப் சோனைட்டின் அதிக அளவு வெனடியம் உட்கூறில் உள்ளது எனக் கண்டுபிடித்துள்ளனர். இம்ப் சோனைட்டு எல்லாப் பண்பிலும் ஆல்பர்ட்டைட்டை ஒத்துக் காணப்படுகிறது. ஆனால் இம்ப்சோனைட்டு டர்பன்ட்டைனில் கரையாப் பண்பைப் பெற்றுள்ளது. உலகில் அரகானஸ், நிவாடா, மிச்சிகன், பெரு, அர்ஜன்டினா, பிரேசில், ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் இக்கனிமம் கிடைக்கிறது. ஒக்லா (Okla), இலாஃபுளேர் (Laflore) என்ற இடங்களில் காணப் படும். இம்ப்சோனைட்டுப் படிவுகள் 10 அடி அகலமுள்ள நரம்பிழைகளாகக் காணப்படுகின்றன. இம்பூறல் (சித்தமருத்துவம்) சு.ச. இது ஒரு பருவச் சிறு சிறு செடியாகும். இதற்குச் சிறுவேர், இம்புறாவேர், எம்பூறல் என்ற தமிழ்ப் பெயர்களும் உண்டு. இம்மூலிகையின் தாவரப் பெயர் ஓல்டன்வேண்டியா அம்பெல்லேட்டா (Oldenlandia umbellata Linn). இது ரூபியேசியே (Rubiaceac) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தியாவில் ஒரிசா, வங்காளம், தக்காண பீடபூமி, தென் னிந்தியா ஆகிய இடங்களில் சாதாரணமாக வளர் கின்றது. இம் மூலிகையின் இலை, வேர், வேர்ப்பட்டை சமூலம் ஆகியவை மருத்துவத்திற்காகப் பயன்படு கின்றன. சுவை இனிப்பு ; தன்மை - சீதம்; பிரிவு- இனிப்பு. கோழை அகற்றியாகவும், இரத்தப்பெருக்கு அடக்கியாகவும், பித்தநீர்ப் பெருக்கியாகவும் இம் மூலிகை பயன்படுகின்றது. தொண்டையில் கோழை கட்டல், உடலின் அழல், அழல் சுரம், இரத்த வாந்தி, இருமல், ஈளை, இரைப்பு, வயிற்றிரைச்சல், விக்கல் முதலிய நோய்களுக்கு இம்மூலிகை கொடுக்கப்படு கிறது. இலையின் பொடியை இரண்டு பங்கு அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட இரைப்பு கள் குணமாகும். இரா.ஜெகதீசன் I.C.S., நூலோதி. முருகேச முதலியார், க.ச., குணபாடம், (மூலிகை வகுப்பு), தமிழக அரசு வெளியீடு, சென்னை, 1969; Kirtikar, K. R., Basu, B. D. & Indian Medicinal Plants, M/S. Bishen Singh, Mahen- dra Pal Singh, Dehradun, 1935; Chopra, R.N., Nayar, S.L. & Chopra, I.C., Glossary of Indian Medicinal Plants, C.S.I.R., New Delhi, Gamble, J S., Flora of Presidency of Madras, Bota- nical Surgery of India, Calcutta, 1967. 1956; இமாஃப் தொட்டி இமாஃப் தொட்டி 277 கழிவுப் பொருள்களைப் பதப்படுத்தும் நிலையத்தில் உள்ள ஒரு கட்டகமே இது. சிறு நகரங்களுக்கும் சிறுசிறு குடியிருப்புகளுக்கும் இது ஏற்றது. கார்ல் இமாஃப் (Kari Imoff) என்னும் ஜெர்மானியப் பொறி யாளரால் வடிவமைக்கப் பெற்று 1907 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு பதிவுரிமை வடிவமைப்பாக (patented design) வெளியிடப்பட்டது. தற்போது பதிவுரிமைக் காலவரம்பு முடிந்துவிட்டது. கட்டகம். இமாஃப் தொட்டியில் இரண்டு முக்கிய அறைகள் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்துள்ளன. மேலே உள்ள படிவிக்கும் அறை, கவிழ்ந்த கூம்பு வடிவில் இருக்கும். இதன் நீள அகில விகிதம் 5:1-3:1 ஆக வரையறுக்கிப்படுகிறது. இதன் உயரம் அகலத் திற்குச் சமமாக உள்ளது. இதில் விழுகின்ற கழிவுப் பொருள்கள் 14 மணி முதல் 41 மணிக்குள் சராசரி 21 மணியளவில் கீழிறங்கும் வகையில் அமைந்திருக்கும். கீழிறங்கும் வேகம் நிமிடத்திற்கு 1 அடிக்கு மேற் படாமல் இருக்கும். தெளிவிக்கும் அறையின் கீழே செரிக்கும் அறை உள்ளது. இரண்டையும் ஒரு துளை இணைக்கிறது. இத்துளையின் அளவு 15 செ.மீ.க்குக் குறையாமல் இருக்க வேண்டும். இது திண்மப்பொருள் கீழிறங்கும் வேகத்தை நிமிடத்திற்கு ஒரு அடிக்கு மேற் படாமல் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. திண்மப் பொருள்களின் விகிதத்தைப் பொறுத்துச் செரிக்கும் அறையின் அடிப்பாகமும் கவிழ்ந்த கூம்பு வடிவாகவே இருக்கும். பெரிய இமாஃப் தொட்டி களில் இது இரண்டு அல்லது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதன் அடிப்பாகமும் சாய்வா அமைந்திருக்கும். ஓர் உயரத்திற்கு இரண்டு கிடை வீதம் சாய்மானம் அமைந்திருக்கும். இவ்வறையை வந்தடையும் சேறு 6 முதல் 12 மாதங்கள் வரை தங்கியிருக்க ஏற்றதாக வடிவமைக்கப்படும். சிறு தொட்டிகளிலும் குளிர் பகுதிகளிலும் சேறு தங்கும் கால அளவு நீண்டும் வெப்ப மிகுந்த பகுதியில் குறைந்தும் இருக்கலாம். செரிக்கும் அறையின் அடிப்பாகத்திலிருந்து சேற் றினை வெளிப்படுத்தும் குழாய் செங்குத்தாகப் பொருத்தப்பட்டிருக்கும். பொதுவாக வார்ப்பிரும் பினாலான குழாய் 15 முதல் 20 செ.மீ. விட்ட முள்ளதாக இருக்கும். இக்குழாயின் அடிப்பாகம் 30 செ.மீ. விட்டத்துடன் அகன்று திறந்திருக்கும்; சேற்றி னைத் தேவையான போது திறந்துவிட வசதியாக க அங்கு ஒரு கட்டுப்பாட்டிதழ் (valve) பொருத்தப்பட் டிருக்கும். இங்கு 2 மீட்டர் வரை நீரியல் அழுத்தம் இருக்கும். சேறு வெளியேற உள் வந்து விழும் கழிவு நீர் அழுத்தமே போதுமானது. செரிமான அறையில்