பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 இமை அழற்சி

282 மை அழற்சி கோலின்எஸ்ட்டிரேஸ் எதிர் ஸ்ட்டிக்மின் எனும் மருந்து இந்நச்சு முறிவில் சிறந்த பயன் அளிப்பதாக அறியப்பட்டுள்ளது. பிற மருந்துகளுடன் இடைவினைகள். இவற்றுடன் ஒத்த அமீன் ஆக்சிடேஸ் ஒடுக்கிகளைச் சேர்த்துத் தரும்போது ஆழ் மயக்கம், வலிப்பு ஆகியவை ஏற் படலாம் எனவே இவை இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தக்கூடாது. மைய நரம்பு மண்டலத்தை ஒடுக்கும் மருந்து களுடன் சேர்த்துப் பயன்படுத்தும்போது மைய நரம்பு மண்டலம் மேலும் ஒடுக்கப்படும். இவை குவானதிடின் எனும் இரத்த மிகை அழுத்த எதிர் மருந்தின் இயக்கத்தை எதிர்க்கின்றன. பரிவு நரம்பு அமீன்களின் இரத்த அழுத்த விளைவுகளை மருந்து அதிகரிக்கின்றது. ம் பக்க விளைவுகள். இம்மருந்துகளை உட்கொள் வதால் ஃபினோதயசீன் மருந்துகள் உண்டாக்கு வதைப் போன்ற மஞ்சள்காமாலை ஏற்படலாம். மருந்து உட்கொள்வதை நிறுத்திவிட்டால் மஞ்சள் காமாலை மறைந்து விடுகிறது. இவை சிறுமணியற்ற வெள்ளையணுக்களை மிகுவிப்பதாகவும் கண்டறியப் பட்டுள்ளது. மேலும் சில சமயங்களில் இவை மனச் சோர்வைக் கட்டுப்படாத மனநிலை எழுச்சியாக மாற்றிவிடக் கூடும். உடலில் நடுக்கம், இதயத் துடிப்பில் மாறுபாடு, இதயப் பழுது, உடல் பரு மனாதல், தோல் தடிப்பு, ஆண்குறி எழாத நிலை முதலியவையும் ஏற்படும். . பயன்கள். இரவில் தம்மை அறியாது படுக்கையில் குழந்தைகள் சிறுநீர் கழிப்பதைக் சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது. பொருளற்றது என்று தெரிந்தும் ஒரு செயலைத் தூண்டும் நரம்புக் கோளாறு நோயில் இது ஓரளவு பயனளிக்கக் கூடும். இம்மருந்துகள் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகே மனச் சோர்வைப் போக்குகின்றன. இவை முழுதும் பயனளிக்கின்றனவா இல்லையா என்பதை முடிவு செய்யுமுன் இவற்றைக் குறைந்தது ஆறு வாரங்கள் தொடர்ந்து கொடுத்து வர வேண்டும். மதுப்பழக் கத்தை ஒழிப்பதற்கும், ஒற்றைத் தலைவலி, நரம்பு வலி, நாள்பட்ட வலி ஆகிய நோய்களுக்கும் இம் மருந்து உதவும். சு.நரேந்திரன் நூலோதி. Gilman, A.G., Goodman, L.S and Gilman, A., The pharmacological Basis of Thera- peutics, Sixth Edition, Macmillan Publishing Co. Inc., Newyork, 1980. இமை அழற்சி இது இமை ஓரங்களில் ஏற்படும் நாள்பட்ட வகை அழற்சியாகும். எளிமையான இரத்தச்செறி வாகவோ (hyperaemia) மெய்யான அழற்சியாகவோ தோன்றும். இமை அழற்சி (blepharitis) இருவகைப் படும். செதில் இமை அழற்சி (squamous blepharitis). சிறிய வெள்ளைச் செதில்கள் இமை முடிகளின் இடையில் குவியும்; இமை முடிகள் எளிதாக உதிரும்; உதிரும் முடிகள் சேதமற்ற நிலையில் மீண்டும் வளரும்; செதில்கள் நீக்கப்பட்டால் அவற்றின் அடிப்பகுதி இரத்தம் செறிந்து சிவப்பாக இருக்கும்; குழிப்புண்ணாக இரா. இவ்வழற்சி பெரும்பாலும் வளர்சிதை மாற்றத்துடனும் தலைப்பொடுகு நோயுடன் சேர்ந்தும் காணப்படுகிறது. குழிப்புண் இமை அழற்சி (ulcerative blepharitis), இது தொற்றும் வகை அழற்சியாகும். இதில் மஞ்சள் நிறப் பொருக்குகளால் இமை முடிகள் ஒன்றோ டொன்று ஒட்டிக் கொண்டிருக்கும். இப்பொருக்கு களை நீக்கினால் முடிகளின் அடிப்பகுதியைச் சுற்றி லும் எளிதில் இரத்தம் கசியக் கூடிய குழிப்புண்கள் காணப்படும். இப்பொருக்குகளை நீக்கினால் இமை களின் இயல்பான ஓரப்பகுதிகளைக் காணலாம். அறிகுறிகள். இமை விளிம்புகளில் சிவப்பு, அரிப்பு, எரிச்சல்,நீர் வடிதல், கண் கூச்சம் ஆகியன நோயின் அறிகுறிகள் ஆகும். இக்குழிப்புண் இமை தொடரான பின்விளைவுகள் ஆபத் அழற்சியின் தானவை. முறையாகவும், முனைப்பாகவும் குணப்படுத்தா விட்டால் இந்நோய் மிக நாட்பட்ட நோயாக நீண்டு, விழியொளி இழைம அழற்சியை (chronic conjunctivitis) உண்டாக்கும். குழிப்புண் ஆழமாகி முடிகளின் வேரை நாசப்படுத்தி, முடியிழப்பைத் தோற்றுவிக்கும். இப்படி விழும் முடிகள் மீண்டும் தோன்றாமல் போகலாம். அப்படியே தோன்றி னாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குட்டை யாகச் சிதிலமான முடிகளே (madarosis) தோன்றும். குழிப்புண்கள் ஆறும்போது உண்டாகும் தழும்புகள் சுருங்குவதால் எஞ்சியுள்ள இமை முடிகள் இழுக்கப் பட்டு, தவறான திசையில் முடித் திருப்பம் நிகழ் கிறது. இவ்விளைவால் முடிகள் சிலவேளைகளில் உள் நோக்கலாகப் படிந்து நிறமிலி இழைமத்தை (cornea) உரசித் தொல்லை ஏற்படுத்தலாம். தழும்பு அதிக அளவில் ஏற்படுமானால் அதன் கனத்தைத் தாங்காது இமை விளிம்புப் பெருக்கம் ஏற்பட்டு இமை கீழ்நோக்கித் தொங்க நேரிடலாம். இது ஒரு வகை இமை இறக்கம் (ptylosis). தொடர்ந்த குழிப் புண் அழற்சி கீழிமையைப் பெரிதும் சேதப்படுத்த வல்லது. இந்நோயின் ஆறும் தழும்புகளால் விழி வெளி இழைமம் இமை ஓரங்களில் இழுக்கப்பட்டு, கண்ணின் வெளி நீரோட்ட அமைப்பு முறை பாதிக் கப்படும். இதனாலும், இமை விளிம்பிலுள்ள நீர்த் துளை வெளிநோக்கலாக இழுக்கப்படுவதாலும், .