286 இமைக்கட்டிகள்
286 இமைக்கட்டிகள் கொள்ளவேண்டும். இமை விழி ஒட்டு அதிகமாக இருந்தால் அறுவை பலன் தாராது. ரா. கலைக்கோடன் இமைக் கட்டிகள் இமையின் வெளிப்புறத்தைத் தோல் மூடியுள்ளது. உட்புறத்தே விழி வெண்படலம் உள்ளது. இமையின் விளிம்பில் மயிர்க்கால்கள் உள்ளன. இவை தவிர வியர்வைச் சுரப்பிகள், எண்ணெய்ச் சுரப்பிகள், துணைக் கண்ணீர்ச் சுரப்பிகள், இமை இயக்கும் தசைகள், இமைத்தட்டு (tarsal plate) இரத்தக் குழாய் சள், மெல்லிய நரம்புகள், மென்மைக் கொழுப்புத் பிணைந்து திசுக்கள் பின்னிப் முதலியனவும் கண்ணைக் காக்கின்றன. கட்டிகளின் வகைகள். இமைக் கட்டிகளை நோய்க்கிருமிகளால் உண்டாகும் கட்டிகள் என்றும், வேறு வகைக் கட்டிகள் என்றும் இருவகைப்படுத் தலாம். இமை வெளிக்கட்டி (hordeolum externum), இமை உள் கட்டி (hordeolum internum), மெய் போமியன் சுரப்பிக்கட்டி(meibomian gland),இமைச் சீழ்க்கட்டி (lidabscess) கடின உண்ணிகள் (warts), பால் பருக்கள் (molluscum contagiosum ) போன்றவை நோய்க் கிருமிகளால் உண்டாகும் கட்டிகளாகும். மாகிச் காலின் வேரில் இமைவெளிக்கட்டி. பொதுவாக இது உடலில் எதிர்ப்பு ஆற்றல் குறைந்த எல்லா வயதினரையும் ஸ்டஃபிலோகாக்கஸ் என்னும் தாக்குவதாகும். நோய்க் கிருமிகளே இதற்குக் காரணம். இமையின் சீஸ், மால் சுரப்பிகளில் அழற்சி ஏற்பட்டு, அது கடின சீழ்க்கட்டியாகிவிடுகிறது. இமையின் மயிர்க் சீழ்கட்டிக் கொள்வதால் மிகுந்த வலியுண்டாகிறது. இதனால் இமையும் வீங்கிவிடு கிறது. வீரிய நுண் கிருமிகளின் தாக்குதலால் உண் டாகும் கட்டிகள் கண்மூடிவிடும் அளவிற்கு இமை களில் வீக்கம் உண்டாகும். இதற்கு இளஞ்சூடான ஒற்றடம் கொடுக்கலாம். சீழ்கட்டிவிட்டால், அதில் இருக்கும் இமை முடியை எடுத்துவிடவேண்டும். சீழை வெளியேற்றக் கீறிவிடலாம். நுண்ணுயிர்க்கொல்லி மருந்து உட்கொள்ள வேண்டும். இமையிலும் நுண் ணுயிர்க்கொல்லி மருந்தைக் களிம்பாகத் தடவலாம். இது இமை உள்கட்டி. மெய்போமியச் சுரப்பியில் சீழ் கட்டிக்கொள்வதால் உண்டாகின்றது. இச் சுரப்பி சற்றுப் பெரியதாக இருப்பதாலும், இமைத் தட்டின் இடையில் அமைந்திருப்பதாலும் நோயின் அறிகுறிகள் அதிகமாக இருக்கும். இமைத் தட்டுக் படம் 1. இமை வெளிக்கட்டி