பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இமைக்கட்டிகள்‌ 287

கட்டியில் ஏற்படும் அழற்சி மிகக்கடுமையாகும்போது அது இமை உள்கட்டி என்று அழைக்கப்படுகிறது. இமையின் உட்புறமானது, வெளியில் தோன்று மாறு இமையை மடக்கிப் பார்த்தால் சீழ்கட்டி யிருப்பது, மஞ்சள் நிறப் பொட்டு போலக் காணப் சுரப்பியின் நாளம் வழி படும். இக்கட்டியானது, யாகவோ இமையின் விழிவெண் படலத்தின் வழி யாகவோ உடையக் கூடும். சில வேளை இமையின் வெளித்தோல் வழியாகவும் உடையும். நுண்ணுயிர்க் கொல்லி மருந்து உட்கொள்வதாலும் களிம்பாக இமையில் தடவுவதாலும் இது நலமாகும். மெய்போமியன் கட்டி. இது மெய்போமியன் சுரப் பியில் நாட்பட்ட அழற்சியால் ஏற்படுகிறது. இமை விளிம்பிலிருந்து தள்ளி, பட்டாணி போல் காணப் படும். சுட்டியைக் கீறி உள்ளிருக்கும் சீழை நன்றாகச் சுரண்டி அப்புறப்படுத்தி நுண்ணுயிர்க் கொல்லி மருந்திட்டுக் கட்ட வேண்டும். கருவுற்றிருக்கும் பெண்களுக்கு உடலின் மற்ற சுரப்பிகளைப் போலவே மெய்போமியன் சுரப்பியும் அதிகமாகச் சுரக்கும் தன்மை அடைகிறது. இவர்களுக்கு இவ்வகைக் கட்டிகள் அடிக்கடி தோன்றினாலும் மகப்பேற்றுக் குப் பின் தாமாகவே மறைந்துவிடும். இமைச்சீழ்க்கட்டி. இமையில் ஏற்படும் காயத் தாலோ, உடலின் வேறு பகுதியில் உள்ள சீழ்க்கட்டி இமைக்கட்டிகள் 287 களில் உள்ள நோய்க் கிருமிகள் இரத்த ஓட்டத்தினால் இமைக்குக் கொண்டு வரப்படுவதாலோ இது ஏற் படலாம். சண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற் படும் அழற்சியின் காரணமாகவும் உண்டாகலாம். மை அழற்சி இதனால் மிகுந்த வலியும் காய்ச்சலும், இமையில் வீக்கமும் உண்டாகும். கட்டியைக் கீறிச் சீழை வெளிப்படுத்தி, நுண்ணுயிர்க் கொல்லி மருந்து உட் கொள்ளுதல் இந்நோயைக் குணப்படுத்தும் முறை யாகும். சீழை வெளிப்படுத்த இமை விளிம்புக்கு இணையாகக் கீற வேண்டும். நோய்க் கிருமிகளால் உண்டா டாகும் மேற்கூறிய கட்டிகள் ஏற்படும்போது. நோயாளிகளுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா என்று அறிந்து கொள்ளுதல் நல்லது. அப்படியிருந்தால் நீரிழிவு நோய்க்கான மருத்துவமும் தொடங்க வேண்டும். அண்மைப்பார்வை, தொலைப்பார்வை போன்ற பார்வைக் கோளாறுகளாலும், தூய்மையற்ற சுற்றுப் புறச் சூழலாலும், பழக்க வழக்கங்களாலும் இமைக் கட்டிகள் உண்டாகலாம். அவற்றை அறிந்து களைதல் வேண்டும். காண்க, இமைச்சீழ்க்கட்டி. கடின உண்ணிகள். இவை வைரஸ் என்ற மிக நுண்ணிய கிருமிகளால் பரவக் கூடிய தொற்று நோய்க் கட்டிகளாகும். இவற்றை அறுவை மருத்து வம் செய்து நீக்கிவிடவேண்டும். பிறகு அந்த இடத் தில் அயோடின் தடவ வேண்டும். படம் 2. இடக்கண்ணின்மேல் இமையின் உட்பகுதியில் கட்டி உள்ளது