இமைகள் 291
படலாம். முறையற்று வளர்ந்த சிறு இரத்தக் குழாய் கள் மேடாகத் தோலின் மேற்பகுதியில் காணப் படும் இவை இளஞ்சிவப்பு நிறமும் மென்மைத் தன்மையும் உடையவை. இவற்றின் துணைக் கட்டி கள் உடலின் பிற பகுதிகளிலோ சிறு மூளையிலோ காணப்படலாம். சில சமயங்களில் சிறு மூளைப் பாதிப்பை எக்ஸ் கதிர் படத்தின் மூலம் அறுதி யிட்டுச் சொல்லலாம். இரயில் தண்டவாளம் போன்ற இரட்டை வெள்ளைக் கோடுகள் காணப்படலாம். இவ்வகைக் கட்டிகள் எவ்வித மருத்துவமு மின்றியே, குழந்தை வளர வளர மறையலாம். ஊசி மூலம் கார்ட்டிகோஸ்ட்டீராய்டு மருந்து ஏற்றி யும், எக்ஸ் கதிர் கொண்டும் நலப்படுத்தலாம். இரத்தக் குழாய்க் கட்டிகளில் புற்றுநோய் வகைக் கட்டிகளும் உள்ளன. நரம்புத் திசுக் கட்டிகள். இவ்வகைக் கட்டிகள் பிறவியிலேயோ பாரம்பரிய பாதிப்பாகவோ வரலாம். இவை உடல் முழுதும் காணப்படும் சிறு சிறு கட்டி களாக (வான்ரெக்ளிங் காஸன்ஸ் நோய்) இருக்கும். கண் இமைகளையும் பாதிக்கலாம். இவை நரம்பின் மையப் பகுதியில் இருந்தோ நரம்பில் வெளியுறையில் இருந்தோ உண்டாகும். இவ்வகைக் கட்டிகள் பெரியவை வளர்ந்து, இமையில் இருந்து கனிகள் தொங்குவன போலக் காணப்படலாம். அறுவை மருத்துவம் செய்து இவ்வகைக் கட்டி களை முழுமையாக எடுத்து விடலாம். இவ்வகையில் புற்றுநோய்த் தன்மையுள்ள கட்டிகளும் வரலாம். இவற்றிற்கு அறுவை மருத்துவத்துடன், எக்ஸ் கதிர் மருத்துவமும் அளிக்க வேண்டும். நிறமிக் கட்டிகள். சாதாரணமாக காணக்கூடிய மச்சத்தில் இருந்து இவ்வகைக் கட்டிகள் உண்டா கலாம். புற்றற்ற மச்சக்கட்டிகளை அறுவை மருத் துவம் செய்து நீக்கிவிடலாம். மச்சப் புற்றுக்களின் தனித்தன்மை யாதெனில் மிகச்சிறிய கட்டிகூட உடலின் பின்பகுதிகளில் மிகப் பெரிய இடமாற்றம் சார்ந்த கட்டிகளை உண்டாக்க லாம். ஆரம்பத்திலேயே அகன்ற அறுவை மருத்துவ மும், எக்ஸ் கதிர் மருத்துவமும் செய்தல் வேண்டும். இடமாற்றம் சார்ந்த கட்டிகள். இவை உடலின் ஒரு பகுதியில் உள்ள முதன்மைக் கட்டியின் (primary tumor) காரணமாக உடலின் வேறு பகுதியில் வரக் கூடும். இரைப்பை, மூச்சுக்குழாய், மூச்சுக்குழாய், பெருங்குடல், தைராய்டு, மார்பகம் முதலிய உறுப்புகளில் உண்டா கும் புற்றுக் கட்டிகளில் இருந்து கண் இமையில் இடமாற்றம் சார்ந்த சார்ந்த கட்டிகள் உண்டாகலாம். அறுவை மருத்துவமும், எக்ஸ் கதிர் மருத்துவமும் செய்து இக்கட்டிகளை அகற்ற வேண்டும். இவ்வகைக் கட்டிகளுக்கு மருத்துவம் செய்தாலும் நிறைவளிக்கக் அ.க.4-19அ இமைகள் 291 கூடிய பலனை அளிப்பதில்லை. முதன்மைக் கட்டிக்கும் மருத்துவம் செய்தல் வேண்டும். பிறவிக் கட்டிகள். இவ்வகைக் கட்டிகள் பிறவிக் கோளாறு காரணமாக வரக்கூடியவை. கரு படிப்படி வளர்ச்சியடைந்து உறுப்புகள் ஒன்றோடொன்று சில குறிப்பிட்ட கோடுகளில் இணையத் தவறும் போது இத்தகைய குறைபாடுகள் ஏற்படுகின்றன. இத்தகைய கட்டிகள் பிறக்கும்போதே காணப்பட லாம் அல்லது பிறந்த பிறகு சிறிது சிறிதாக வளர்ந் தும் புலப்படலாம். டெர்மாய்டு (dermoid), டெர்ரட் டோமா(terratoma) என்பவை இவ்வகைக் கட்டி களைச் சார்ந்தவை. அறுவை மருத்துவத்தின் மூலம் இவற்றை அகற்ற வேண்டும். இக் உட்பகுதியில் பல்வேறு காணலாம். கட்டிகளின் திசுக்களின் பகுதிகளைக் இரா. கலைக்கோவன் நூலோதி. Miller, Stephen, J.H., Parsons Disea- ses of the Eye, Seventeenth Edition, Churchill Livingstone, 1984. இமைகள் கண்களைப் பாதுகாக்க இமைகள் அமைந்துள்ளன. இந்த இமைகளின் உடற்கூற்றியல் படி இவை உடலின் உள்பாகங்களைக் காக்கும் மேல் தோலின் மாறுபட்ட தோல் அமைப்புகளே என்பது விளங்கும். இவை மண்டை ஓட்டின் கண் குழிகளை மூடுவதற் கும், கண்களைக் காப்பதற்கும் ஏற்பட்ட அமைப்பு பள்ளங்கள், களாகும். ஆகவே இவை இமைப் கண் குழிகளைக் காக்கும் உள்பகுதியாகவும், கண் களைக் காக்கும் வெளிப்பகுதியாகவும் பிரிகின்றன. இந்த இமைப் பள்ளங்கள் இமைகள் மேல்நோக்கி இருக்கும்பொழுது நன்றாக ஒருவரின் இமைகளைக் காணக்கூடும். இந்த இருபிரிவினால்தான் வயதான வரின் கண்களைக் காணும்போது கண்களைச் சுற்றி உப்பலாக இருக்கும். அவை கூடுமடிப்புகள் (orbital folds) எனப்படும். மேல் இமையும், கீழ் இமையும் திறக்கும்போது தான் கண்ணின் உள்பாகங்களைக் காண முடி கிறது. இமைகள் மூடி இருக்கும்போது இந்த வழி ஒரு சிறிய வெடிப்புப்போல இருந்தால் இமைகள் திறந்திருக்கும்போது இந்த வழி ஒரு பிறைச்சந்திரன் போன்ற அமைப்பில் இருக்கும். இந்த வழியின் இரு முடிவுகளும் இமைக்கோணங்கள் ஆகும். இவற்றின் உள்கோணங்கள் மூக்கின் அருகில் உள்ள இமைகளின் உள்பக்கத்தில் உள்ள கண்ணீர்ப் பள் ளங்களைக் (lacus lacrimalis) காக்கின்றன. இந்தப்