பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 இமைச் சீரமைப்பு

294 இமைச் சீரமைப்பு அறுவை செய்முறை. அறுவையின் போது இமை விளிம்புகளின் நடுவில் உள்ள தோலில் மெத்தைத் தையல் போட்டு இமைகளை மூடி வைக்க வேண்டும். பொட்டுப் பகுதி கடைக்கண்ணிலுள்ள விழிவெளி இழைய ஓட்டைப்பிரிக்கவும், குறையுடைய இமைத் தட்டின் பக்கவாட்டுப் பகுதி, இமைக்குழி விளிம்பின் பக்கவாட்டுப் பகுதி ஆகியவற்றை வெளிப்படுத்த வும் போட வேண்டிய கீறலைப் படம்(1)இல் காண்க. படம் 1. தோலையும் தசையையும் ஒதுக்க உதவும் கீறல்கள் தோலும் தசைப்பகுதியும் இமைத் தட்டற்ற விழி வெளி இழைமத்திலிருந்து பிரிக்கப்பட்டு, குரோமிக் கேட்கட் தையல்களால் கடைக்கண் பகுதியிலிருந்து விலக்கப்பட்டுப் பின்னோக்கி இழுத்து வைக்கப்படும். பக்கவாட்டு விழிக்குழி விளிம்பின் மேலுள்ள, வளைவு அறுப்புக் கோட்டின் வழியே, குரோமிக் கேட்கட் இழுப்புத்தையல்கள் நுழைத்து படும். (படம் 2 காண்க) வைக்கப் இமைத் தட்டுகளிலும், இமைக்குழி விளிம்பிலும் துளையிடல். ஒவ்வொரு இமைத்தட்டின் பக்க வாட்டுப் பகுதியின் மேற்பரப்பும், வளைந்த கத்தரிக் கோலைக் கண் கோளத் தசையின் (orbicularis oculi muscle) அடிப்பரப்பில் நுழைத்துப் பயன்படுத் துவதன் மூலம் சுத்தம் செய்யப்படும். இச்செயலின் போது இமை தூக்கித் தசையின் (levator palpebrae superioris) நாணுக்கு ஊறு நேராதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். இரண்டு இமைகளிலுமுள்ள இமைத்தட்டுகளின் பக்கவாட்டு விளிம்பு ஒரு தூக்கியால் உயர்த்தப் பட்டு உடலியல் நீர்மக் கலவை (physiological solu- tion), இமைப்பகுதி விழிவெளி இழைமத்துக்கும், இமைத்தட்டின் அடிப்பகுதிக்கும் இடைப்பட்ட பகு தியில் ஊசியால் செலுத்தப்படும். இதனால் இமைத் தட்டுடன் நெருக்கமாய் இணைக்கப்பட்டிருக்கும் படம் 2. இழுப்புத் தையல்களின் அமைப்பும் மடிப்பு வளையங்கள் ணைக்கப்பட்ட நிலையும் L விழிவெளி இழைமம் அதிலிருந்து 5 மி.மீ. மையக் கோடு சார்ந்து நிலைக்குத் தள்ளப்படும். இதன் பிறகு ஒவ்வொரு இமைத்தட்டிலும் அதன் பக்கவாட்டு விளிம்பிலிருந்து 3 மி.மீ. தொலைவில் செங்குத்துத் துளை செய்தல் வேண்டும். பக்கவாட்டு விழிக்குழி விளிம்பிலிருந்து 3 மி.மீ. புறந்தள்ளி விழிக்குழியின் எலும்பு உறை (perios- teum) 15 மி.மீட்டருக்குக் கீறப்பட்டு மெல்ல உரிக் கப்படும். விழிக்குழி விலக்கி(orbital retractor)ஒன்றை எலும்புக்கும், எலும்பு உறைக்கும் இடையில் நுழைத்து மையப்பகுதியை நோக்கி இழுத்து, கண்ணைப் பாது காக்கும்படிப் பொருத்த வேண்டும். பல் துளைப் பானால் 8 மி.மீ. நீளமுள்ள முட்டை வடிவத் துளை யொன்றை, விழிக்குழி விளிம்பிற்கு 3 மி.மீ. பின் னால், பொட்டுக் கடைக்கண்ணுக்கு நேராய் இருப் பது போல் செய்ய வேண்டும். லேட்டா தசைப்பட்டை மடிப்பு வளையங்கள் (fascia late loops) 4-5 மி.மீ அகலமும், இமைத்தட்டுத் துளை வழியே நுழைந்து இமைக்குழி விளிம்புத் துளை வழியே, ஒரு மடிப்பு வளையம் போல வரக கூடிய அளவு போதுமான நீளமும் உள்ள நிலையில் லேட்டா தசைப் பட்டைத் துண்டுகள் வெட்டப் படும். இந்த துண்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இமைத்தட்டை உருவாக்கப் பயன்படும். இத்துண் டின் இரு முனைகளுள் ஒன்று. இமைத் தட்டின்