296 இமைத்தைப்பு
296 இமைத்தைப்பு knife) ஒன்று,ஜேயாலிசின் இடுக்கி (Jayle's forceps) கத் தரிக்கோல், அழுத்த இடுக்கிகள் எண். 1.கறுப்புப்பட்டு மெத்தைத் தையல் நூல் கோக்கப் பெற்ற கண்ணற்ற ஊசிகள் நான்கு, ஊசிப் பிடிப்பான் (needle holder) உறிஞ்சுகுழல் (sucker), இரப்பர்த் துண்டுகள். அறுவை செய்முறை. அறுவைக்குரிய பகுதியிலுள்ள இமைமுடி சார்ந்த தோல்பகுதியில் முதலில் ஜென்சன் கத்தரிப்பூ வண்ணமையால் வெட்டி எடுக்க வேண்டிய தோலின் அளவை எல்லையிட்டுக் கொள்ள வேண்டும். ஒரு பிளாஸ்டிக் கொக்கியைப் பக்கக் கடைக் கண்ணிலிருந்து ஆறு மில்லி மீட்டர் தொலை வில், கீழிமையின் விளிம்பில் நுழைக்க வேண்டும்.பிறகு கீழிமையிலிருந்து அறுக்கத் தொடங்க வேண்டும். இமை விளிம்பிலுள்ள சாம்பல் கோட்டைப் பிளந்து பக்கக் கடைக்கண்ணைச் சுற்றியுள்ள இமைமுடி சார்ந்த தோல்பகுதியை மூன்று மில்லி மீட்டர் அகல முள்ள ஒரு வளைவான துண்டுபோல அறுத்தெடுக்க வேண்டும். மேலிமையிலும் இதேபோல் இதேபோல் அறுக்க வேண்டும். செங்குத்தாக அறுப்பதற்கு மாறாக, முக்கோண வடிவிலான தோல் துண்டு வெட்டியெடுக்கப்படும். படம் 1. இடக்கண்ணில் பக்கக் கடைக்கண் இமைத் தைப்பு அறுவை செய்யப்பட்டுள்ளதைக் காட்டும் படம். கீழிமையில் தோல் நீக்கப் பெற்ற பகுதி, மேலிமை யின் பகுதியை விட, மையப்பகுதிக்கு நெருக்கமாக இரண்டு மில்லிமீட்டர் அளவுக்கு நீட்டப்படும். இந்தக் கீழ் அறுப்பின் இமையஞ்சார்ந்த முனையி லிருந்து தோலில் நான்கு மில்லிமீட்டர் நீளத்துக்குச் செங்குத்தாக அறுக்கப்படும். சிலசமயம் இவ்வறுப்பு செம்மைப்படுத்தப்பட்டு படம் 2. இடக்கண்ணில் பக்கக் கடைக்கண் இமை தைப்பு அறுவை சிறு மாற்றமுடன் செய்யப்பட்டுள்ளதை காட்டும் படம். முக்கோண வடிவிலான தோல்துண்டு வெட்டியெடுக்கப்பட்டு உள்ளதைக் காண்க. ஒரு பெரிய முக்கோணத் தோல் தொங்கல் போன்ற அமைப்பு முறையை உருவாக்க வாய்ப்பாகக் கீழிமை யின் அறுப்பிலுள்ள தோலின் கீழ்ப்பகுதியை அடி யறுத்தழிக்க வேண்டும். குருதிக் கசிவற்ற நிலையை (haemostasis) உருவாக்க வேண்டும். எண். 1 கறுப்புப் பட்டு மெத்தைத் தையல் நூலை இரப்பர்த் துண்டில் நுழைத்துத் தோலின் வழியாகத் தோல் சுற்றப்பட்ட பகுதியின் மையப்பகுதியில் செலுத்திப் பின் கீழ்த்தோல் தொங்கல் வழியே இழுத்து முடிய வேண்டும். று நரம்புச் செயலிழப்பால் வெளிப்புறம் திரும்பிய இமைக் குச் செய்யப்படும் பக்கக் கடைக்கண் இமைத்தைப்பு. உணர்விழப்பு மருத்துவம், கருவிகள் எல்லாம் மேற் கண்ட அறுவை மருத்துவத்தைப் போலவே அமைதல் வேண்டும். அறுவை செயல்முறையில் மட்டும் சிறு மாறுதல் உண்டு. இந்த வகை அறுவையில் மேல், கீழ் இமைகளின் விளிம்புகள்,பக்கக் கடைக்கண்ணிலிருந்து ஆறு மில்லிமீட்டர் நீளத்துக்கும், இமை விளிம் பிலிருந்து ஆறு மில்லிமீட்டர் ஆழத்துக்கும், சாம்பல் கோட்டில் பிளக்கப்படும். கீழிமையைச் சற்றுத் தூக்கவும், மேலிமையிடமிருந்து சிறிது உதவியைப் பெறவும் இப்பக்கக் கடைக்கண் இமைத்தைப்பு