பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 இமைத்தைப்பு

298 இமைத்தைப்பு செய்வது றால் ஏற்படும் கீறல்கள், உணர்வற்ற இவ்விழை மத்திற்கு ஊறு இந்நோய் நிலைக்கு மற்றொரு காரணமாய் அமைகின்றது. மறைப்பற்ற நிலையால் இந்நோய் சீர்கேடுறுவதும், பாதுகாப்ப தால் நலமுறுவதும் மறிவினை விழித்தல் (reflex blin- king) இல்லாமை இந்நோய்க் காரணங்களுள் ஒன்றாய் அமைவதைச் சுட்டுகின்றன. பல் நிறமிலியிழைமத்தில் நோய்க்குறிகள். இந்நோயின் முக்கிய அறிகுறி நிறமிலியிழைமத்தின் முதல் அடுக்கான சளிச்சவ்வு மேலிழைமத்தில் தோன்றும் செதிள் உதிர் நிலையே யாகும் இது நிலைகளில் தோன்றுகிறது. முதலில் மேற்பரப்பு மங்க லாகும். பிறகு நிறமிலியிழைமத்தின் சளிச்சவ்வு மேலிழைமம், முதலில் மையத்திலும் பின்னர் முழுது மாக உரியத் தொடங்கும். நிறமிலியிழைமத்தின் சுற்றுப்புற ஓரத்தில் குறுகலான பகுதி தவிர, பிற பகுதி மேலிழைமம் முழுதுமாக உரிந்து விழும். நிறமிலியிழைமத்தின் மூன்றாம் அடுக்குப்பொருள் (substantia propria) மேக மூட்டமிட்டாற்போல் மங்கி, மஞ்சள் வண்ணம் கொண்டு, இறுதியில் பெரிய சீழ்ப்புண்ணாக (ulcer) உடையும். இதனால் கண் முன்னறையில் (anterior chamber) சீழ் சேரும். நரம்பு செயலற்றுப் போவதால் இந்நோயில் வலி யுணர்ச்சி இருக்காது. நிறமிலியிழைமத்தைச் சுற்றி மயிரிழைகள் போன்ற மெல்லிய குருதிநாளப் (ciliary புடைப்பு injection) காணப்படும். விரைந்து கவனிக்கப்படாத நிலையில் நிறமிலியிழை இந்நோய் மத்தில் பெரிய ஓட்டை தோன்றும். பார் முடிவில் தோன்றும் அடர்த்தியான நிறமிலியிழைம வெண்மழுப்பம் (dense leucoma) பயனுடைய வையைக் குறைத்து விடும். தழும்பு மீண்டும் உடைவதும், புண்ணாவதும், இயல்பாகத் தொடர்ந்து நடக்கும். சீழ் சேர்வதும் மருத்துவமுறை. சீழ்ப்புண்ணுக்குரிய மருத்துவ முறைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் கண்னை மூடச்செய்து கட்டுக் கட்டுதல் வேண்டும். இமை விளிம்பின் மையஞ்சார்ந்த முனையிலுள்ள, கண்ணீர் செல்லும் துளையை (lacrimal punctum) மூடிவிடுவதால், கண்ணீர் வடிகால் அடைபட்டு, கண்ணில் நீர்த்தன்மை மிகுந்து, இந்நோய் கட்டுப் படுத்தப்படுகிறது. தைப்பு, பெருமளவுக்கும் உதவி னாலும் தையலைப் பிரிக்கும்போது நோய் திரும் புவது தவிர்க்க முடியாததாகிறது. மறைப்பற்ற நிறமிலியிழைம அழற்சி. கண்ணிமைகள் முழுதுமாய் மூடவியலா நிலையிலுள்ள விழிகளில் நிறமிலியிழைமம் மறைப்பற்றுப் போவதால் அழற்சி தோன்றுகிறது. து பல நோய்க்காரணங்களால் தோன்றுகிறது. நோய்க்காரணங்கள். கண் குழிக்கட்டிகள் (orbital கண் கோளத்தசையின் செயலிழப்பு tumours), இயல்புக்கு மாறான விழிப்பிதுக்கத்தால் நேரும் கண் தசைகளின் செயலிழப்பு மறிவினை விழித்தல் இல்லாமை என்பன நோய்க்காரணங்களாகும். இக் காரணங்களுள் முதல் மூன்றிலும் கண் தன்னிடத்தி லிருந்து வெளித்தள்ளப்பட்ட நிலையை அடைவதால், இமைகள் கண்களை முழுதுமாய் மூடவியலா நிலை ஏற்பட்டு நிறமிலியிழைமம் மறைப்பற்றுப் போய் அழற்சிக்குள்ளாகிறது. நோய்க்குறிகள். நிறமிலியிழைமத்தின் மேல் அடுக்கான சளிச்சவ்வு மேலிழைமம் மறைப்பற்ற நிலையால் உலர்ந்து போகும்; மூன்றாம் அடுக்குப் பொருள் மங்கலாகும்; உலரும் மேலிழைமம் உதிர் வதால், நிறமிலியிழைமம் நுண்ணுயிர்க்கிருமிகளின் தாக்குதலுக்காளாகிச் சீழ் பிடிக்கும். மருத்துவம். நிறமிலி இழைமத்தைப் பாதுகாக்க மைகளை மூடச் செய்தல், தொடக்கநிலையில் இரவில் விழியை மூடச்செய்து கட்டுக்கட்டி வைத்தல், மறைப்பற்ற நிலைக்கான காரணத்தைச் சரி செய்தல். மையஞ்சார்ந்த இமைத்தைப்புச் செய்முறை, உணர் விழப்பு மருத்துவம்,கருவிகள் ஆகியவை பக்கக் கடைக் கண் இமைத்தைப்பு மருத்துவத்தைப் போலவே அமையும். கீழ் இமையின் தோலைப்பிடித்துக் கீழ்ப் புறமாக இழுப்பதன் மூலம் உட்புறமிருக்கும் அதன் விளிம்பு வெளிப்புறம் திருப்பப்படும். இமை விளிம் பின் பின்பகுதியில் அறுப்புக்கான இடத்தை ஜென்சன் கத்தரிப்பூ வண்ண மை கொண்டு குறித் துக் கொள்ள வேண்டும். மேலிமை விளிம்பை வெளிப் புறம் திருப்பி திருப்பி இது போலவே அறுப்புக்கான இடத்தைக் கீழ் இமை இடங்களுக்கு நேர் எதிராகக் குறிக்க வேண்டும். இமை முடிக்கோட்டில், அறுப்புக் கோடுகள் வாராமல் கவனம் கொள்ளல் வேண்டும். இமைமூடிக் கோடு காயமுற்றால், நார்ச்சிதைவு (fibrosis) உண்டாகி இமை மயிர் உறுத்தல் நோயில் (trichiasis) முடியலாம். புள்ளிகளுக்கு அறுவைக்குக் குறிக்கப்பட்ட அப்பால் மூன்று மில்லிமீட்டர் தொலைவில், புள்ளிக் கொன்றாக இரண்டு பிளாஸ்டிக் கொக்கிகளை இயைத்தசையில் நுழைத்துச் சற்று மேலே தூக்கிய நிலையில் முன்னுக்கு இழுப்பதால், உட்புறமிருக்கும் இமைவிளிம்பு நன்றாக வெளிப்புறம் திருப்பப்படும். இப்படிச் செய்வதால் இமையில் குருதிக்கசிவு நேராது. இனிக் கீழ் இழையின் சாம்பல் கோட்டுக்குச் சற்றுப் பின்னுள்ள இமை விளிம்பிலிருந்து செவ்வக வடிவில் ஆறு மில்லிமீட்டர் நீளத்துக்கு, இமையின் மையத்தில் இருந்து இருபுறமும் உள்ள சளிச்சவ்வு (mucous membrane) வெட்டப்படும். மேலிமையின் போலவே முனையிலும் இதே இடங்களில் இது வெட்ட வேண்டும்.