பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இமை மயிர்‌ உள்நோக்கல்‌ 299

இமை மயிர் உள்நோக்கல் 299 சளிச்சவ்வு உரிக்கப்பட்ட இடங்களில், குருதிக் கசிவு கட்டுப்படுத்தப்பட்ட பிறகு எண் 1 கறுப்புப் பட்டுச் செங்குத்து மெத்தைத் தையலை இரப்பர்த் துண்டுவழியே நுழைத்து, கீழிமை விளிம்புக்கு நான்கு மில்லிமீட்டர் கீழிருக்கும்படியாகத் தோலில் செலுத்தி உட்புறம், உரிக்கப்பட்ட இடத்தின் பின் எல்லைக் கோட்டருகில் வருமாறு கொணர வேண்டும். பின் இந்தத் தையலை மேலிமையில் இதே போன்று உரிக்கப்பட்டிருக்கும் இடத்தின் வழியேயும், தோலின் வழியேயும் செலுத்தி, ரப்பர்த் துண்டில் நுழைத்து. மேலிமை முடிக்கோட்டுக்கு நான்கு மில்லிமீட்டர் மேலே வருமாறு கொணர வேண்டும். படம் 4. வலக்கண்ணில் மையஞ்சார்ந்த இமைத்தைப்புச் செய்யப்படும் முறையை விளக்கும் படம் செய்ய அதே இரப்பர்த் பிறகு ஊசியைத் திருப்பி துண்டின் மறுமுனையில் செலுத்தித் தோல் வழியே, மேலிமையில் உரிக்கப்பட்ட இடம் கீழிமையில் உரிக் கப்பட்ட இடம், தோல், இரப்பர்த் துண்டு வழியே வெளிக்கொணர்தல் வேண்டும். இது போலவே மையஞ்சார்ந்த மற்றொரு பகுதியிலும் வேண்டும். பிறகு உரிக்கப்பட்ட இடங்களிலுள்ள குருதிக் கசிலைத் துடைத்துத் தூய்மை செய்ய வேண்டும். பின் மேலிமையிலும், கீழிமையிலும் உள்ள உரிக்கப்பட்ட பகுதிகள் ஒன்றோடொன்று நன்றாக ஒட்டுமாறு பார்த்துத்தையல்களை இழுத்து முடிய வேண்டும். சில நாள்களில் இமைகள் நன்றாக ஒட்டிக் கொள்ளும். தேவைப்படும்போது இந்த ஒட்டைப் பிரிப்பதன் மூலம் இமைகளைத் தனிப் படுத்தித் திறப்பு நிலையை உண்டாக்கலாம். அவ்வை கலைக்கோவன் நூலோதி. Miller, Stephen., Parson's Diseases. of the Eve, Seventeenth Edition, Churchill Living- stone, 1984. இமைப்புகுடு இமைத்தட்டுத் தசையில் இருக்கும் மெய்போமியான் சுரப்பிகளில் ஏற்படும் நாள்பட்ட அழற்சி காரண மாக இமைப்புகுடு chalazian) தோன்றுகிறது. தொடர்ந்த உறுத்தல், சக்தி குறைந்த நுண்ணு யிரிகளின் தாக்குதல் ஆகியவையே இச் சுரப்பி களின் நாள்பட்ட அழற்சிக்கு அடிப்படைகள். இத னால் சுரப்பி இழைமம் திரிந்து கொழுப்புச்சத்து நிறைந்த பெருந்திசுக்களாக மாறும். நோய்வெளிப்பாடு. இமையில் சிறு புடைப்பு, பார்வைக்குத் தெரியாது. இமையின் மேல் விரலால் தடவினால் மட்டுமே உணரமுடியும்; நாள்பட்ட வளர்ச்சி நிலை - மெல்ல மெல்ல வீக்கம் பெரிதாதல்; முற்றிலும் வலியற்ற புடைப்பு; இமையைத் திருப்பி உள்புறம் பார்த்தால் புடைத்த பகுதி சிவந்து விழி வெளிப்படலம் லேசாய்த் தடித்து இருப்பதைக் காணலாம்; சில நேரங்களில் இந்த அழற்சி சுரப்பி யின் நாளத்தில் ஏற்பட்டுச் சிறு முண்டு வடிவில் இமை விளிம்பில் துருத்திக் கொண்டு நிற்கலாம். மருத்துவம். புகுடு உள்ள இமைப் பகுதியை உணர்விழக்கச் செய்தல்; புகுடு இடுக்கியினால் புகுட்டைப் பொருத்தி இமையைத் திருப்பி இமைத் தட்டுத் தசையைப் பார்வைக்குக் கொண்டுவருதல்; புடைப்பு உள்ள பகுதி இமைத்தட்டுத் தசையில் காணப்படும்; இப்பகுதியில் சிறு கத்தியால் தேவை யான அளவு நீளமாகக் கிழிக்க வேண்டும்; தட்டுத் தசை பிளந்ததும், உள்ளிருக்கும் அழற்சி விளைவுப் பொருள்களைத் தாமாகவே பிதுங்கி வெளியிடும். இவற்றை வெளியேற்றிய பிறகு முழுமையாக கரண்டியினால் இந்தப் புகுட்டின் சுவர்களை நன் றாகச் சுரண்டித் தூய்மை செய்யவேண்டும்; இமைப் புகுடு கிடுக்கியை நீக்கி இரத்தக் கசிதலைக் கட்டுப் படுத்தி உயிர்க்கொல்லிக் களிம்பு இட்டு அழுத்திக் கட்டிவிட வேண்டும்; அடுத்த நாள் கட்டை நீக்கி, உயிர்க்கொல்லிக் களிம்பு தொடர்ந்து போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தவேண்டும். இமை மயிர் உள்நோக்கல் இரா. கலைக்கோவன் இந்நிலை இமை முடிகளின் திசைமாற்ற நோக்க லால் ஏற்படுகிறது. பொதுவாக மேலிமை முடிகள்