இமைவிழி இழைம ஒட்டு 301
அறுவை முறை. இமைத்தோலைச் கண்குழி விளிம்புடன் சுட்டு விரலால் இலேசாக அழுத்திப் பிடித்து, இமை விளிம்பைத் திருப்ப வேண்டும். மின் பகுக்கை ஊசியை இமை முடியின் வழியாக 2 மி.மீ. தொலைவு உட்செலுத்தி முடியின் வேர்ப்பகுதியை அடைய வேண்டும். பிறகு மின் விசையைச் செலுத் தினால் முடியின் உட்பை அமைவிலும், அதைச் சுற் றிலும் காற்றுக் குமிழிகள் தோன்றும். 3-5 அளவு மின்சக்தி ஐந்திலிருந்து பத்து வினாடிகளுக்குள் செலுத்தப்பட்டால் போதும். சில நேரங் ரங்களில் இதைவிடக் குறைவாகவே தேவைப்படலாம். ஊசியை அகற்றிவிட்டு இமை முடியை இடுக்கியால் பிடிக்க வேண்டும்; வேர்ப்பகுதி பாதிக்கப்பட்டி ருந்தால் முடி அதன் உட்பையில் பிடிப்பற்றுக் கிடக்கும்; எளிதாக அகற்றிவிடலாம். வேர்ப்பகுதி சரியாக விடுபடவில்லையென்றால், அது விடுபடும் வரை மின்சக்தியைப் பாய்ச்சி இமை முடியை அகற்ற வேண்டும். இதேபோன்று, பாதிக்கப்பட்ட மற்ற முடிகளும் அகற்றப்படும். விளிம்பில் நான்கைந்து நாள்களுக்கு நாள்தோறும் இருவேளை தூய்மையான வெள்ளைப் பெட்ரோலியம் குழைவு பூசப்படவேண்டும். இமைத்தட்டு ஒட்டு உ இமை அறுவை (tarsal wedge). தசை மை விளிம்பு சாதாரணமாக இருந்து, இறுக்க இமை உள்நோக்கல் இல்லாமலிருந்து, பல இமை முடிகள் அந்த இமையில் திரும்பியிருந்தால் அவற்றை நேராக்கலாம். இப்படி நேராக்குவது இமையின் ஒரு பகுதியிலோ விளிம்பு முழுதிலுமோ செய்யப்படும். இமை விளிம்பில் உள்ள சாம்பல் கோட்டை (gray line) பாதிக்கப்பட்ட இடத்தில் 3 மி.மீ. ஆழத்துக்குக் கிழித்து அதற்குள் 3 மி.மீ. அகலமுள்ள, விழிவெளி இழைமத்தால் மூடப்பட்ட இமைத்தட்டு அல்லது அதே அளவுள்ள மூக்குத் தடுக்குப் (nasal septum) பகுதியினை நுழைத்து இக் குறைபாட்டைச் சரி செய்யலாம். ஜே.சி.மசுடார்டே என்பவர் இதில் இரண்டாவது முறையைப் பின்பற்று கிறார். இந்த ஒட்டு, தொடர்ந்த பாலியெஸ்டர் தையல்களினால் திறப்பின் விளிம்புகளுடன் இணைக் கப்படுகிறது அல்லது ஒட்டின் விளிம்புகளைச் சேர்க் காமல் 6.0 பாலியெஸ்டர் இழை கொண்டு திறப் பின் இரு விளிம்புகளும் மெத்தைத் தையலினால் இணைக்கப்படும். இவை தவிரச் சளிச் சவ்வு மாற்று மருத்துவ முறையும் சில நேரங்களில் கையாளப் படும். இரா. கலைக்கோவன் நூலோதி. Stephen, J. H. Miller., Parson's Diseases of the Eye, Churchill Livingstone, Seven- teenth Edition, Edinburgh, 1984; Roper- Hall, M.J., Stallard's Eye Surgery, K. M. Varghese Company, Sixth Edition, Bombay, 1980. இமை மூடாமை இமைவிழி இழைம ஒட்டு 301 கண் இமைகள் இரண்டும் சரியாக மூடிக் கண்ணைப் பாதுகாக்கின்றன. ஆனால் இமைகளிரண்டும் அவ் வாறு சரியாக மூட முடியாமல் அவற்றிற்கிடையே இடைவெளி ஏற்பட்டால் அது கண் இமை மூடாமை {lagophthalmos) எனப்படும். கண்ணைச் சுற்றி வெளிப்புறமாக வட்டத் தசை கள் உள்ளன. இவை சுருங்குவதால்தான் கண் இமை கள் மூடுகின்றன. பிறவியிலேயே இத்தசைகள் வளர்ச்சி குன்றியோ, செயல்திறன் குறைவுற்றோ காணப்பட்டால் கண் இமைகளைச் சரியாக, முழு மையாக மூட முடியாத நிலை உண்டாகிறது. மேலும், கண் இமைகளின் வெளிப்புறத் தோலிலும், தசை களிலும் காயம் ஏற்பட்டுப் புண் ஆறித் தழும்பு உண்டாகும்போது கண் இமைகள் வெளிப்புறமாகத் திரும்பிக் கொள்வதால் கண் இமைகளைச் சரியாக மூட முடிவதில்லை. தைராய்டு நோயில் ஏற்படும் கண் பிதுக்கத் தாலும், கண்கோளத்தின் பின்னால் ஏற்படும் கட்டியினாலும், கண்கோளம் முன்பக்கமாகப் துக்கித் தள்ளப்படும் போதும், கண் இமைகளை முழுமையாக மூட முடிவதில்லை. பி கண் இமைகள் சரியாக மூடாமல் திறந்தபடியே இருப்பதால் விழிவெளி இழைமம். விழிவெண் இழைமம்,நிறமலி இழைமம் ஆகியவை உலர்ந்து போய்ப் புண்கள் ஏற்படுகின்றன. இதற்குச் சரியான மருத்துவம் செய்யாவிட்டால் நிறமிலி இழைமப் புண் ஏற்பட்டுப் பார்வை பாதிக்கப்படும். மருத்துவம். இமைகள் மூடுமாறு கண்ணைக் கட்டிவிடுதல், கண் இமைகள் சரியாக மூடும்படி இமைகளைத் தைத்துவிடுதல், இவ்விரு வகை மருத்துவமும் இமை மூடாமையின் அளவுக்கும் காரணத்திற்கும் ஏற்றபடி கைக்கொள்ளப்படும். இமைவிழி இழைம ஒட்டு விழிவெளி இழைமத்தில் ஏற்படும் காயங்கள் ஆறும் போது விழிஇமை விழிக் கோளத்தின் ஒரு பகுதியுடன் ஒட்டிக்கொள்ளும். இதற்கு இமைவிழி இழைம ஒட்டு (symblepharon) என்று பெயர். நோய்க் காரணம். கண்ணில் அடிபடுதல், தீக் காயம் ஏற்படுதல், அமிலம் அல்லது காரம் கண்களில் பட்டுவிடுதல், தொண்டை அடைப்பான் நோயினால்