பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயக்கப்‌ பாட்டியல் 307

கண்ணுக்குப் புலப்படும். பார்வை நிலைப்புத் தத்து வத்தின்படி துளை வழியே நாம் கண்ட பொருளின் உருவம் நம் கண்ணில் சிறிது நேரம் (1/10 நொடி) நிலைத்திருக்கும். அடுத்த துளை வரும்போது மறுபடி யும் சுழலும் பொருள் நம் கண்ணில் தெரிய வரு கிறது. இவ்வாறு பல முறை உருவம் தோன்றித் தோன்றி மறைந்தாலும் இந்தப் பார்வை நிலைப்புத் தத்துவத்தின்படி நாம் தொடர்ச்சியாகப் பார்ப் பதைப் பொறுத்தே ஒரு தோற்றத்தை உணர்கிறோம். இவ்வாறு இயங்கும் அல்லது சுழலும் பொருள் குறிப் பிட்டதொரு இடத்தில் வரும்போது மட்டும் ணுக்கு நேரே துளை வந்து அமையுமாறு துளை யுள்ள வட்டத் தட்டின் சுழற்சி விகிதத்தைச் சரிப் படுத்தி, இயங்கும் பொருள் தொடர்ச்சியாக ஒரே நிலையில் நிலைத்து நிற்பது போல் நம் கண்ணுக்குத் தோன்றுகிறது. இத்துளை சிறியதாக இருக்கும்போது தான் மிகத் தெளிவாகத் தோன்றுகிறது. 82 கண் இதைத் தவிர்த்து எலெக்ட்ரான் அடிப்படையில் இந்தத் துளை, தகட்டிற்கு மாறாக ஒளி விளக்கை ஒத்திசைவுச் சுற்றில் (electronic resonance circuit) இணைத்துப் பொருளின் இயக்கத்திற்குத் தகுந்தவாறு 1/1000 நொடிக்கு ஒரு முறையோ நமக்குத் தேவை யான அளவிற்கோ கூடக் குறையும்படித் திருகு அமைப்பை வைத்துக்கொண்டு கட்டுப்படுத்தி விளக்கை விட்டு விட்டு எரியச் செய்யலாம். விளக்கு எரியும்போது மட்டும் இயங்கும் பொருள் நமக்குத் தெரியும். அவ்வாறு தெரியும்போது இயங்கும் பொருள் குறிப்பிட்ட ஒரு நிலையில் இருக்கும்படி இயக்கங்காட்டி இயக்கப் பாட்டியல் 307 அமைத்துக் கொண்டால் பொருள் ஒரே இடத்தில் நிலைத்து நிற்பதுபோல் தோற்றமளிக்கும். எந்திரங்கள் விரைவாக இயங்கும்போது சில நேரங்களில் தேவையற்ற இயக்கங்கள் நிகழலாம். அவ்வாறு நிகழ்வதை நீக்க இயக்கங்காட்டி மிகவும் பயன்படுகிறது. அலையியக்கம் போன்ற இயற் பியல் விளைவுகளை ஆராய்வதற்கும், இயங்கும் பொருளைப்படம் பிடிக்கும் நிலைக்கும் இயக்கங் காட்டி பயன்படுத்தப்படுகிறது. மா.பூ. இயக்கப்பாட்டியல் ஒரு பொருள் அல்லது துகளின் மீது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விசைகள் சமன் செய்யப்படாமல் செயல்படும்பொழுது, அப்பொருளின் அல்லது துகளின் இயக்கத்தில் என்ன மாறுபாடுகளை ஏற் படுத்துகின்றன என்பதைக் கூறுவது இயக்கப்பாட் டியல் (kinetics) ஆகும். அசையா நிலையிலுள்ள ஒரு பொருள், தானாகவே அசையாது. அதே போல சீரான இயக்கத்திலுள்ள ஒரு பொருள் அதன் இயக் கத்தைத் தானாகவே மாற்றிக்கொள்ள முடியாது. இத்தகைய, இயக்க மாற்றம் ஏற்படாத் தன்மைக்கு அப்பொருளின் பண்பு நிலைமம் (inertia) எனப் பெயர். ஒரு கல்லைப் பூமியிலிருந்து மேலே தூக்குவதற்கு அதன் மீது மேல்நோக்கிய விசை ஒன்றினைக் கையின் நாம் மூலமாக விசையுடன் செலுத்துகிறோம். வரும் பந்தினை நிறுத்துவதற்கு எதிர்விசை ஒன்று தேவை. நீராவி வண்டியின் வேகத்தை மிகுவிக்க ஒரு விசை தேவை. மேலும், ஓடிக்கொண்டிருக்கும் பேருந்திலிருந்து ஒருவன் கீழே குதித்தால், அவனது பாதங்கள் மட்டும் பூமியில் முதலில் படுவதால் ஓய்வு நிலைக்குக் கொண்டு வரப்படுகின்றன. அவனது உடலின் மற்ற பகுதிகள் பேருந்தின் வேகத்துடன் முன்னோக்கிச் செல்கின்றன. அதனால் அவன் முன் னோக்கிக் கீழே விழுகிறான். இதனைத் தடுக்க, அவன் பேருந்து செல்லும் திசைக்கு இணையாகச் சிறிது தொலைவு ஓடி, வேகத்தைக் குறைத்துப் பாதங்களை மெதுவாக ஓய்வு நிலைக்குக் கொண்டு வரவேண்டும். மேற்கூறிய விளக்கங்களிலிருந்து விசை ஒரு பொருளின் ஓய்வு நிலையையோ நேர் கோட்டில் நகரும் அதன் சீரான இயக்க நிலையையோ மாற்ற முயலும் அல்லது மாற்றும் எனத் தெரிகிறது. இந்த விசை செலுத்தப்படாவிட்டால் எந்த வகை இயக்க மாற்றமும் ஏற்படாது. அ.க.4-20அ