308 இயக்கப் பாட்டியல்
308 இயக்கப்பாட்டியல் சர் ஐசக் நியூட்டன் என்பவர் இயக்கப்பாட்டி யலில் மூன்று விதிகளை நிறுவினார். மேலே கூறிய எடுத்துக்காட்டுகள் முதலாம் இயக்க விதியினைச் சார்ந்தவையாகும். முதலாம் இயக்க விதி. புறவிசையொன்று செயற் பட்டாலொழிய, அசையா நிலை அல்லது சீரான இயக்க நிலையிலுள்ள ஒரு பொருள் அந்நிலையி லேயே தொடர்ந்து இருக்கும். அடிப்படை வரையறைகள் இயக்கம். ஒரு பொருள் அல்லது துகள் தன் நிலையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டு இருந்தால் அது இயங்குகிறது. இடப்பெயர்ச்சி. ஒரு பொருள் இயங்கும்பொழுது அதன் இடப் பெயர்ச்சி என்பது அதன் தொடக்க நிலைக்கும் இறுதி நிலைக்கும் வரையப்பட்ட நேர் கோடாகும். திசைவேகம். துகளின் திசைவேசும் என்பது, அது ஒரு நொடியில் செய்யும் இடப்பெயர்ச்சியாகும். முடுக்கம். ஒரு பொருளின் அல்லது துகளின் முடுக்கம் என்பது ஒரு நொடியில் அதன் திசை வேகத்தில் ஏற்படும் மாறுபாடாகும். திசைவேகம் அதிகமானால் முடுக்கம் நேர் முடுக்கம் எனவும், திசைவேகம் குறைந்தால் முடுக்கம் எதிர் முடுக்கம் எனவும் கூறப்படும். எ ஒரு துகளின் ஆரம்பத்திசைவேகம் ப எனவும், t நாடிகளுக்குப் பின் அதன் திசைவேகம் எனவும் என்பது அதன் சராசரி முடுக்க கொண்டால் மாகும். V-U t உந்தம். பொருளின் நிறை, அதன் திசைவேகம் ஆகியவற்றின் பெருக்குத்தொகை உந்தம்(momentum) ஆகும். m என்பது நிறையாகவும், v என்பது அதன் திசைவேகமாகவும் இருந்தால் my என்பது அதன் உந்தமாகும். இடப்பெயர்ச்சி திசைவேகம், முடுக்கம், விசை உந்தம் இவற்றிற்கு எண் மதிப்பும், திசையும் உள்ளன. இவை திசையன் அளவைகள் ஆகும். ஒரு விசை ஒரு பொருளின் மேல் செயல்படும் போது அதன் திசைவேகம் நியூட்டனின் முதலாம் இயக்க விதியின்படி மாறுகிறது. அதனால் அதன் உந்தமும் மாறுகிறது. விசை அதிகமானால் உந்த மாறுபாடு அதிகமாகும். இரண்டாம் இயக்க விதி. ஒரு பொருளில் ஒரு தொடியில் ஏற்படும் உந்த மாறுபாடு, கொடுக்கப் படும் விசைக்கு நேர் வகிதத்தில் இருப்பதோடு அவ் வசையின் திசையிலேயே ஏற்படும். m என்ற நிறை யைக் கொண்ட ஒரு பொருள் u என்ற சீரான திசை வேகத்தில் இயங்கி, F என்ற விசை மீது t நேரம் செயல்பட்டு அதன் திசைவேகத்தை vஎன்று மாற்று வதாகக் கொண்டால் நியூட்டனின் இரண்டாம் விதிப் படி K., F a Fa my - mu m u) Fa ma ( a முடுக்கம்) F =kma ( k ) மாறிலி புவி, எல்லாப் பொருள்களையும் தன்னை நோக்கி ஒரு விசையுடன் இழுக்கிறது. இவ்விசைக்குப் புவியீர்ப்பு விசை என்று பெயர். நிறை. ஒரு பொருளின் நிறை அப்பொருளி லுள்ள மொத்தத்துகளின் எண்ணிக்கையைக் குறிக் கும். இது ஒரு ஸ்கேலர் அளவு; இது இடத்திற்கிடம் மாறுபடாது. இதனைத் தராசின் மூலம் அறியலாம். எடை. ஒரு பொருளின் எடை அப்பொருளின் மீது புவி கொடுக்கும் ஈர்ப்பு விசையாகும். ஒரு பொருளைக் கீழே போட்டால் புவியீர்ப்பு விசை அப்பொருளில் ஒரு முடுக்கத்தை உண்டாக்கும். இந்த முடுக்கம் புவியீர்ப்பு முடுக்கமாகும். இது g என்று குறிக்கப்படுகிறது. பொருளின் எடை இடத் திற்கு இடம் மாறுபடும். எடையினை வில் தராசின் மூலம் அறியலாம். எடை ஒரு வெக்டர் அளவு W = mg. மூன்றாம் இயக்க விதி. ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு. இங்கு வினை என்பது விசையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாகச் சந்திரன், புவியைத் தன்னை நோக்கி இழுக்கிறது. ஆனால் புவியோ அதற்குச் சமமான எதிர்விசையுடன் சந்திரனை இழுக்கிறது. இதனால்தான் அவை, ஒன்றை நோக்கி ஒன்று நகருவதில்லை. நியூட்டனின் மூன்றாம் இயக்க விதியிலிருந்து உந்தம் மாறாக் கோட்பாட்டினைக் கணக்கிடலாம். உந்தம் மாறாக் கோட்பாடு. ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள், ஒன்றுடன் மற்றொன்று மோதிக் கொள்ளும்போது, மோதலுக்குமுன் உள்ள அவற்றின் மொத்த உந்தம் மோதலுக்குப் பின் உள்ள மொத்த உந்தத்திற்குச் சமம் அல்லது பொருள்கள் மோதும் போது உந்தத்தை உண்டாக்கவோ அழிக்கவோ முடியாது. எடுத்துக்காட்டாக, துப்பாக்கியிலிருந்து குண்டு முன் திசையில் வெளிவரும்பொழுது, துப்பாக்கி நேர் பின் திசையில் செல்லும், துப்பாக்கி, குண்டு, இரண்டும் சுடப்படுவதற்கு முன்பு இயக்க