இயக்கம் 309
இயக்கம் 309 மற்று இருப்பதால் அவற்றின் மொத்த உந்தம் சுழியாகும். குண்டு வெளியே வரும் போதும் மொத்த உந்தம் சுழியாக இருக்க, துப்பாக்கியின் உந்தம், குண்டின் உந்தத்திற்குச் சமமாகவும், எதிர்த் திசை யிலும் அமைய வேண்டும். இவ்வாறு இருக்கத் துப்பாக்கி பின் நோக்கி நகருகிறது. ஏவூர்தியினை விண்வெளியில் செலுத்தும் பொழுது அதிலுள்ள எரிபொருள் எரிந்து மிகுந்த அழுத்தமுள்ள வளிமங்களாக வேகத்துடன் கீழே தள்ளப்படுகிறது. இச்செயலுக்கு எதிர்ச் செயலாக ஏவூர்தி மேலே எழும்புகிறது. இயக்கம் ந.கி.சுலோச்சனா ஒரு பொருள் தொடர்ந்து இடம் பெயர்ந்தபடி இருந் தால் அது இயக்கத்தில் (motion) உள்ளதாகவும், அப்படியே ஒரே இடத்தில் இருந்தால் பொருள் நிலைத்திருப்பதாகவும் கொள்ளப்படும். இடம் பெயர்ந்த தொலைவு. பொருளின் தொடக்க நிலைக்கும் இறுதி நிலைக்கும் இடையே உள்ள நேர்கோட்டின் நீளத்தைக் கொண்டு கணிக்கப்படு கின்றது.ஒரு பொருளின் இடப்பெயர்ச்சியினை அறிய அது இயங்கிய தொலைவினையும், இயங்கிய திசையினையும் ஒருங்கே அறிய வேண்டியுள்ளது. அதனாலேயே, இடப்பெயர்ச்சித் திசை சார்ந்த வெக் டார் அளவாகக் குறிக்கப்படுகிறது. மேலும், ஒரு பொருளின் இடப்பெயர்ச்சியை ஓர் இடம் அல்லது மற்றொரு பொருளை நிலையாகக் கொண்டே அளக்க வேண்டியுள்ளது. பொதுவாக, இயங்கிய நிலையிலிருந்து கொண்டு ஒரு பொருளின் தனித்த இயக்கத்தை அளவிடுவது இயலாது. புவி இயங்கிய நிலையில் உள்ளது. பேரண் டத்தில் அது பல்வேறு இயக்கங்களைப் பெற்றிருக் கின்றது. எனவே, எந்தவோர் இயக்கமும் தனி இயக்கமாக இருக்க முடியாது. சார்பியக்கமாகவே இருக்கும். வகை இயக்க வகைகள். இயக்கங்களில் மூன்று உண்டு. இயங்கும் திசையில் மாற்றம் என்பதே இராமல் இயங்குவது நேர்கோட்டு இயக்கம் எனப் படும். அவ்வாறின்றி இயங்கும் திசையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருப்பது கோட்டியக்கம் எனப்படும். கழல் இயக்கம் என்பது ஒருபொருள் ஒரு நிலையான அச்சைப் பற்றிச் சுழன்ற படி இயங்குவதாகும். வளை பொருளின் இயக்கத்தைக் கருத்தில் கொள்வ தற்குப் பொருளின் இடப் பெயர்ச்சி, காலம், திசை வேகம், முடுக்கம் ஆகிய அளவுகள் தேவைப்படுகின் றன. காண்க, இயக்கப்பாட்டியல். சீரான இயக்கம். நேர்கோட்டில் சீரான வேகத் தில் இயங்குவது இயக்க வகைகளில் எளிமையான தாகும். பொருள் சமகால அளவில் சமதொலைவு களை ஒரே திசையில் கடந்தால் அது சீரான திசை வேகம் கொண்டதாக இருக்கும். ஒரு பொருள் நேர் கோட்டில் சீரான திசைவேகத்தில் t கால அளவில், பெறும் இடப்பெயர்ச்சியை s=vt என்னும் சமன் பாட்டால் குறிக்கலாம். பொருளின் தொடக்கத் திசைவேகம் u எனவும், சீரான முடுக்கம் a எனவும், t நேரத்திற்குப் பின்னர் திரைவேகம் எனவும் கொண்டால், முடுக்கம் - திசைவேகமாற்றம் காலம் எனவே, บ u+at ஆகிறது. a தொடக்கத் திசைவேகம் u ஆகவும் இறுதித் திசைவேகம் ய ஆகவும் முடுக்கம் சீரானதாகவும் இருப்பதால் சராசரித் திசைவேகம் = ஆகும். எனவே, நேரத்தில் பொருள் கடக்கும் தொலைவு $ = t x சராசரித் திசைவேகம்,S 2 = tx u+1 2 இச்சமன்பாட்டில் V- இன் மதிப்பைப் பிரதியீடு செய்தால் S = ut + a* என்றாகும். v = u + at ஐ இரு மடியாக்கிச் சுருக்கினால் u -- 2 as எனக் கிடைக்கும். அடுத்து, st, இறுதி நொடியில் கடந்த தொலைவு எனக் கொண்டால், St= t நொடியில் கடந்த தொலைவு - (t- 1) நொடியில் கடந்த தொலைவு ஆகும். - (அ.து.) s = [ut+4atி) (u (t-1) + 4 a(t-1)')
இதைச் சுருக்கி, St = 1 + a (2t-1) எனவும் எழுதலாம். தடையின்றிக் கீழ்நோக்கி விழும் பொருள்கள். சீரான முடுக்கத்துடன் இயங்கும் பொருள்களின் இயக்கத்திற்கான சமன்பாடுகள் தடையின்றிக் கீழே விழும் பொருள்களின் இயக்கத்துக்குப் பொருந் தும். ஏனெனில் புவியின் குறிப்பிட்ட ஓரிடத்தில் ஈர்ப்பினால் உண்டாகும் முடுக்கம் சீரானதாக இருக்கின்றது. எனவே, புவியீர்ப்பு விசையினால் மட்டும் உள்ளான இயக்கத்திற்கு பொருளின் இயக்கச் சமன்பாடுகள்,