பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 இயக்கவியல்‌ பொது

3/4 இயக்கவியல் பொது மட்டங்களுக் வலியுறுத்தும் அடியாகக் கொண்டு அது விரவியிருக்கும் விதத்தை எர்வின் சுரோடிங்கர் (Errvin Schroedinger) கண்டு கூறியது. இரண்டாவது ஆற்றல் கிடையே நிகழும் செயல்பாட்டை டபிள்யூ. பர்கின் (W. Heisenberg) இஹைய்சன் அணிக்கோவை இயக்கவியல், குவான்ட்டம் இயக்க வியலில், பொருள்களுக்கு அலைப்பண்பு கற்பிக்கப் பட்டுள்ளது. அலைப்பண்புகளுக்கு ஏற்ற பொருள் அவற்றிற்கிடையேயான பண்புகளையும் மேலும் தொடர்புகளையும், டி. பிராய் என்பார் தெரிவித் தார். இவருடைய கருத்துக்களே குவான்ட்டம் இயக் கவியலுக்கு முழுமையான அடிப்படையாக விளங்கு கின்றன. இயக்கவியல் புலத்தைச் சார்பில்லாதது, சார் புடையது என்றும் பிரிக்கலாம். இவற்றுள் பிந்தை யது ஒளியின் திசைவேகத்தையொத்த வேகங்களைக் கொண்ட பொருள்களுக்குப் பொருந்துவதாகும். காண்க, பழைய புலக்கோட்பாடு; பழைய இயக்க வியல், இயங்கியல், பாய்ம இயக்கவியல், குவான்ட் டம் இயக்கவியல், சார்பு இயக்கவியல், நிலை இயக்க வியல். கொ.சு.ம. நூலோதி. நாகலிங்கம்; கு. இயக்கவியல், தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1973. இயக்கவியல், பொது இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றின் வழியைக் கட்டுப்படுத்தும் பொது விதிகளைக் கூறும் அறிவியல் பொது இயக்கவியல் அல்லது முரணியக்கவியல் (dialectics) எனப்படுகிறது. முரணியக்கவியல், தத்துவ உலகில் இயக்கவியல் எனவும், பொருளியக்கவியல் எனவும் அழைக்கப்படுகிறது. இயற்பியலில் விறைப் பான பண்டங்களின் இயக்கங்களை ஆராயும் அறி வியல் பகுதி இயக்கவியல் என்று அழைக்கப்படுவதால் பொது இயக்கவியலை முரணியக்கவியல் என அழைத் தல் குழப்பம் தவிர்க்கும். முரணியக்கவியல் என்ற கருத்து அதனுடைய தொடக்ககாலப் பொருளை உதறி எறிந்துவிட்டுத் தற்கால அறிவியலின்படி புதுப்பொருளில் வழங்குகிறது.அதனுடைய தொடக்க காலப்பொருள், வழக்காடும் திறன் அல்லது விவாதத் திறன் என்பதேயாகும். இயக்கி, வெடி உலோ. செ. வெடியை வெடிக்கத் தொடக்கி வைக்கும் அமைப் புக்கு வெடி இயக்கி (detorator) அல்லது வெடித்திரி இயக்கி என்று பெயர். வெடித்திரி மிகவும் விரைந்த இயக்கம் உடைய முதல்நிலை வெடிப்பொருளால் செய்யப்படுவதால் திரியைப் பற்ற வைத்ததும் வெடி இயக்கி முதலில் வெடிக்கின்றது. வழக்கில் இதற் காகப் பயன்படுத்தப்படும். வெடிப் முதனிலை பொருள் பாதரச ஃபல்மினேட், ஈய அசைடு என்பன வாகும். இயக்கியைத் தவிர வெடியில் மூடப்பட்டி ருக்கும் வெடிப்புக்குப்பியில் சிறிதளவு துணை நிலை வெடிப்பொருளும் இருக்கும்.இதில் முதனிலை வெடிப் பொருளைவிடத் திறன்மிக்க அதிர்ச்சியைக் கடத்தும் துணைநிலை வெடிப்பொருளாகப் பெண்டாஎரித் திரீட்டால் டெட்ராநைட்டிரேட்டு பயன்படுகிறது. 4,6,8 67607 எண்ணிடப்பட்ட வரிசையில் இயக்கிக் குப்பிகள் (detonator caps) விற்கப்படுகின்றன. இவற்றில் எண் ஏற ஏற வெடிப்பொருள் அதிக மாகும். காண்க, வெடித்தலும் வெடிப்பொருளும், வெடித்திரி. ஊட மின்னியக்கிகள் உருகு கம்பியால் பற்ற வைக்கப் படுகின்றன. இவை முதனிலை வெடிப்பொருளை வெடிக்கச் செய்யும். இயக்கி வெடித்ததும் டைனை மட்டு வெடிக்கத் தொடங்கும். டைனைமட்டு டத்துக்குள் சாய்வான கொம்பு வழியாக இயக்கிச் செருகப்பட்டு இருக்கும். திறன் குறைந்த வெடிகளில் கூடுதல் ஊட்டம் தேவைப்படும். இந்தக் கூடுதல் ஊட்டம் குப்பிக்கும் அடிப்படைத் தலைமை ஊட் டத்திற்கும் இடையில் அழுத்தப்பட்ட டெட்ரில் போன்ற பொருள்களால் செய்யப்பட்டு வைக்கப்பட் டிருக்கும். ஆல்ஃபிரடு நோபெல் என்பவர்தான் இந்த வெடி இயக்கியைக் கண்டுபிடித்து நைட்டிரோ கிளிசரின் வெடியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் முறையை உருவாக்கினார். வெடி இயக்கியின் கண்டு பிடிப்பும் அதனைப் பாதுகாப்பாக வைக்கும் முறை யின் கண்டுபிடிப்பும் சுரங்க இயலில் புரட்சிகரமான விளைவை ஏற்படுத்தின. உலோ. செ. நூலோதி. Urbanski, T., Chemistry and Tech nology of Explosives, McGraw Hill Book Com- pany, New York, 1965. இயக்குபவர் பயிற்சி ஒரு நிறுவனத்தில் பணி செய்பவர்களுக்குப் பகுத் தறிவு, குறிப்பிட்ட வல்லமை, ஒட்டுமொத்த மனப் பாங்கு ஆகியவற்றைக் கல்வி மூலம் அளிப்பதால் அவர்கள் தங்கள் பணியைச் சிறப்புடன் செய்ய இயலு கிறது. இக்கல்வி முறை, ஒரு நிறுவன வளர்ச்சிக்கு மிகத் தேவை; இம்முறை ஆடம்பரப் பொழுது போக்குக்காகவோ சொற்ப நிறைவுகளுக்காகவோ