316 இயக்குபவர் பயிற்சி
316 இயக்குபவர் பயிற்சி வைக்கத் திறமையும் வேண்டும் என்று வரையறுக்க வேண்டும். இவ்வாறு வரையறுக்கப்பட்ட வேலைகள் உடனே தேவைப்படாமலிருக்கலாம். ஆனால் பின் னால் பதவிஉயர்விற்கும் ஓய்வு கால நடைமுறைக்கும் இயக்குபவரைக் கருத்தில் கொள்ள இத்திறமைகள் எதிர்பார்ப்போடு தரமிடப்பட்டு, அளவிடப்பட்டு இருத்தல் நலம். ஒரு வேலையைச் செய்யத் தேவைப் படும் திறமைகள் கட்ட வரைபடம் 1 மூலம் விளக்கப் பட்டுள்ளன. படிநிலை 15 13 11 N 1955 அ உ திறமை படம் 1. கொடுக்கப்பட்ட வேலையைச் செய்வதற்குத் தேவைப்படும் திறமைப் படிநிலை குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேலையின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் குறைந்தது எட்டு அடிப்படையான திற மைகள் தேவைப்படுகின்றன என்பதைப் படம்1காட்டு கிறது. சான்றாசு, டர்ரெட்கடைசல்எந்திரத்தில்வேலை செய்தல், தரக்கட்டுப்பாட்டு அமைப்புகளைப் பின் பற்றுதல், வெர்னியர் நுண் அளவியைப் பயன்படுத் தல், எந்திரத்தைச்சீர் செய்தல் நீல நிழற்படம் படித் தல் (blue print reading) போன்ற பணிகளை மேற் கொள்ளத் தேலையான திறமைகளைக் கணிக்கும் போது டர்ரெட்கடைசல் எந்திரப் பணிக்கு அதிகத் தேவையான திறமையும் (13 படிநிலைகளும்) மற்ற பணிகளுக்கு முறையே 10, 4,14,8 ஆற்றல் படி நிலைகளும் தேவைப்படுகின்றன. ட பணியாளரை போது அடையாளம் கண்டுபிடித்தல். தற் நடைமுறையில் இருக்கும் வேலைகளை அல்லது பின்னர் ஏற்படக்கூடிய வேலைகளை செய்யத் தேவைப்படும் பணியாள்கள், முன்பே அவ் வேலையைச் செய்தவர்களாக அல்லது அதற்கிணை யான வேலையைச் செய்தவர்களாயிருக்கவேண்டும். மேலும், நிறுவனத்தால் அமர்த்தப்பட்டு, ஆனால் தற்போது தொடர்பில்லாத வேலையைச் செய்பவர் கள், தற்போது நிறுவனத்தால் அமர்த்தப்படாத வெளியார்கள் போன்றவர்களும் கருதப்படுவார்கள். ஒரு வேலையை நிறைவளிக்கக்கூடிய வகையில் செய் வதற்கு ஒவ்வொரு பணியாளரும், குறைந்த அல்லது மிகுந்த திறமை, அறிவு, அனுபவம், மனநிலை ஆகியவற்றைப் பெற்றிருப்பார். அப்படிப்பட்ட திட்டமான திறமையும், சிறப்பியற்பண்புகளையும், கொண்ட பணியாளரைக் கண்டறிவதில் சிலசமயம் முழு வெற்றியும், சிலசமயம் குறைவான வெற்றியும் கிடைக்கலாம் (சட்டப்படம் 1). சிறந்த இயக்குபவர், வேலைக்குத் தேவையான எல்லாத் திறமைகளையும் ஒன்றிணைத்துப் பணியைத்திறம்படி நடத்துவார். மேலும், இயக்குபவர்களின் நற்பண்பு, சிறப் பியல்புகளும், தேவையான வேலையின் பண்பு களுக்கும் ணையாகின்றன. வேலையில் விருப்பம் கொண்டஓர் இயக்குபவர் திறமைகள், இயற்பண்பு களைப் பெற்றிருக்கலாம், ஓர் இயக்குபவரின் அறிவு, அனுபவத்தை விண்ணப்பம், நேர்முகப்பேட்டி வேலை சரிபார்ப்பு, வேலை ஆய்வுத் தேர்வுகள் போன்றவற்றால் அறியலாம். • இயற்கையாகப் பயிற்சி தேவைப்படாத அனைத்துத் திறமைகளும், சிவ சிறப்புத் திறமைகளும் உடைய ஒருவரைக் கண்டறிவதற்கு முயற்சி தேவை. சில சமயங்களில் இத்தகைய திறமையான இயக்குபவர்களும் பணியில் அமர் கின்றனர். அப்படிப்பட்டவர் கிடைக்கப் பெற்றால், சுருக்கமாக வேலையைப் பற்றிய அறிமுக அறிவுரை களும், புதிய வேலைக்கான ஈடுபாட்டையும் எளிதில் எடுத்துக் கூறலாம். ஆனால் நடைமுறையில் இவ் வகையான பொருத்தம் அமைவது அரிது. ஒரு வேளை தேவையிலுள்ள வேலையின் பண்புகளுடன் தேர்வில் உள்ள இயக்குபவரின் பணிப் பண்புகள் சரியாகப் பொருந்தினால்தான் இயக்குபவர் தேர்ந் தெடுக்கப்படவேண்டும் என்ற நிலை இருக்கக்கூடும். அங்ஙனம் தேர்ந்தெடுக்கையில் சட்டப்படம் : இல் குறிக்கப்பட்டுள்ள வேலைக்குச் சட்டப்படம் 2 இல் குறிப்பிட்டுள்ள திறமை மிக்க இயக்குபவர் பணிய மர்த்தப்பட்டால் சட்டப்படம் 3இல் காட்டப் பட்டுள்ளவாறு பொருத்தமற்று இருக்கும். 15 ழறக 13 1 படி நிலை 0 3 1 அ ஆ 开 உ GT திறமை படம் 2. ஓர் இயக்குபவரிடம் உள்ள திறன் படிநிலை இயக்குபவருக்குத் தேவையான, மிகுதியான திறமை மட்டங்கள் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள் ளன. படம் மூன்றை ஆய்வு செய்தால், இரு வேறு பட்ட சிக்கல்கள் காணப்படுகின்றன. ஒன்று