பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயங்கமைப்பு 319

வெளியில் கண்காணிக்கப்படுகிறார்கள். (ஆ) அதி காரத்திற்கேற்பத்/திருத்தவோ, புகழவோ செய்தல். பயிற்சியளிப்பவர், மற்ற பாடங்களை நடத்து வதற்கு முன்னர் பயிலுபவர்களை முன்னால் நடத்தப் பட்ட பாடங்களை அறிந்து கொள்ளச் செய்வது அறிவு விரிவடைய உதவுகிறது. மொத்தப் பயிற்சித் திட்டத்தைச் சிறு சிறு பாடங்களாகப் பிரிப்பதால் பயிற்சியளிப்பவர் புதுப்பாடங்களை நடத்துவதற்கு முன் பழைய பாடங்களிலுள்ள சிறப்புக் குறிப்புகளை மீள் ஆய்வு செய்ய இயலுகிறது. சிறு சிறு பாடங் களாக கற்றுக் கொடுப்பது, சிறப்புக் குறிப்புகளுக்கு மிகுந்த கவனம் செலுத்துவது, அடிக்கடி மீள் ஆய்வு செய்வது, தவறுகளைச் சரியாகத் திருத்துவது, பயிலு பவர்களின் கூச்சத்தைத் தவிர்ப்பது, வினாக்களைக் கேட்டு ஊக்குவிப்பது, போட்டி மனப்பான்மையை ஏற்படுத்துவது போன்றவற்றை மற்ற பயிற்சி வழி காட்டிகள் கற்பிக்கின்றனர். . வேலையின் போதே அளிக்கப்படும் பயிற்சியில் பயிலுபவர், பயிற்சியாளரின் உயர்ந்த அறிவு, புதுத் தகவல்கள், முறையின் மதிப்பு ஆகியவற்றை ஏற்றுக் கொள்வது முக்கியமான தேவையாகும். நிரந்தர மான நன்னடத்தை சிறப்பாக அமைய, பயிலுபவர் இவ்வழியைக் கடைப்பிடித்தல் வேண்டும். செய் மீள் ஆய்வு செய்தல், பரிசோதித்தல், கற்பித்தல், படித்தல், ஆகியவற்றால் ஏற்படும் விளைவு, முழுத் திட்டத்தின் மதிப்பைக் கணக்கிடுதல் போன்றவற்றிற் கான முன்னேற்பாடுகளை ஏற்படுத்த வேண்டும். சிறந்த முறையில் கற்றுக் கொடுக்க இயலாத ஆசிரியர்களை திறமையை வளர்த்துக்கொள்ளுமாறு செய்வதற்கோ, பணியிலிருந்து மாற்றம் வதற்கோ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தேவைப்படும் திறமைகளை எவ்வளவிற்குப் பெற்றுள் ளார்கள் என்பதை அளப்பதற்குப் பயிலுபவர்கள் பரிசோதிக்கப்பட வேண்டும் (படம் 1). தேவையான பயிற்சி இல்லாதிருந்தால் திருத்தி அமைத்த பயிற்சி அல்லது கூடுதல் பயிற்சி தேவைப்படு கிறது. திறமை படிநிலைகளைப் படித்தரமாகவோ, மாறிலியாகவோ அமைத்து, அதற்கான நேரம், உழைப்பு ஆகியவை வேறுபடக்கூடிய ஒரு விவர மாக அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பயிலுநரும் பயிற்சியில் வெற்றி பெற்று அல்லது அடுத்த படிக்கு முன்னேறித் தேவையான அளவு திறமைகளை அடையவேண்டும். வருகைப்பதிவு நேரங் களில் மட்டும் இருப்பதாலும் அல்லது முறையாகப் பயிலாமல் மற்ற பிரிவிலுள்ளவர்கள் முன்னேறும் போது அவர்களுடன் சேர்ந்துகொண்டு முன்னேறு வதாலும் சிறப்பான பயிற்சியை அடைய இயலாது. மேலும் பயிலும் மாணவர்கள் தங்கள் பயிற்சியைத் தாங்களே மதிப்பிடும்படியும் செய்ய வேண்டும். முடிவாக, நிறுவன மற்றும் நிருவாக முடிவுகள், சில இயங்கமைப்பு 319 தேர்வு முறைகள், திறமைப் படிநிலைத் தேவைகள் (படம் 1) ஆகியவை அந்தந்தக் காலக்கட்டத் திற்குப் பொருத்தமாகவும் (relevance overtime) தொடர்ந்த முறைமைத் தகுதியுடனும் (continued validity) இருக்கின்றனவா என மீள் ஆய்வு செய்யப் படவேண்டும். -இரா.ச, இயங்கமைப்பு இயங்கமைப்பு என்பது இயக்கத்தை வேண்டிய வடி விற்கு மாற்ற உதவும் எந்திரக் கருவியாகும். இது திறனை அதன் வாயிலிலிருந்து தேவைப்படும் இடத் திற்கு மாற்றும். இது பல எந்திரங்களிலும் எந்திர அமைப்புகளிலும் பரவலாகப் பயன்படுகின்றது. தற் கால நடைமுறைப் பொருளில் இயங்கமைப்புகள் எந்திரங்களை மட்டும் குறிப்பிடுவதில்லை. நீரியல், TITTIN - L பின்பற்றி ன்பற்றி நெம்புருள் நெம்புருள் (a) (ஆ) மீள்விற்சுருள் wwwww பின்பற்றி நெம்புருள் படம் 1. நெம்புருள் பின்பற்றி வடிவங்கள்