பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயங்கமைப்பு 321

உள்ள வியக்கம் நெம்புருளின் சுழல் இயக்கம் பின்பற்றி யின் இடப்பெயர்ச்சியை ஏற்படுத்துவதால் ஏற்படு பின்பற்றிக்கும் கிறது. நெம்புருளுக்கும் தொடர்பு மீள்விற்சுருளால் நிலைநிறுத்தப்படுகிறது. காண்க, நெம்புருள் இயங்கமைப்பு. பல்சக்கரங்கள். பல்சக்கரங்கள் இரண்டு அச்சுத் தண்டுகளின் இடையே நிலைத்த இணைப்பை உரு வாக்கப் பயன்படுகின்றன. இதில் நடைமுறையில் மிகுதியாகப் பயன்படும் அமைப்பு இணைபல்சக்கர அமைப்பு (spur gear) ஆகும். இவை இணைநிலையி லுள்ள அச்சுத்தண்டுகளை இணைக்க உதவுகின்றன. வட்டவடிவ உருளைகளில் பற்கள் அமைந்துள்ளன. இரண்டு அச்சுத்தண்டுகளின் அச்சுகள் வெட்டிக் கொள்ள வேண்டுமென்றால் சரிவுப் பலசக்கரங்கள் பயன்படுத்தப்படும். இவற்றின் பற்கள் செவ்வட்டக் கூம்புகளில் அமையும். பல்சக்கரத்திலுள்ள பற்கள், இணைக்கப்படும் அச்சுத்தண்டுகளின் கோண விரைவு விகிதம் நிலை யானதாக அமையும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். பல்சக்கரங்களில் சுருளை அமைப்புகளும் உண்டு. புழு அமைப்புகளும் உண்டு. அக உருள்வளை அமைப்புகளும் உண்டு. புழுப் பல்லமைப்பு பல் சக்கரங்களும்,அகஉருள்வளைப்பல்சக்கரங்களும் பல் லமைப்புகளுக்கு குறுக்கமைந்த சுருளைப் பல்சக்கரங் களுக்கு இணையாக அமையாத அச்சுத்தண்டுகளை யும், தம்மிடையே வெட்டிக்கொள்ளாத அச்சுத்தண்டு களையும் இணைக்கின்றன. 10.0 (34) (இ) இயங்கமைப்பு 321 பிணைப்புகள். பிணைப்பு என்பது விறைத்த பொருள்களை மூட்டுகளால் ஒரு இணைக்கும் விறைத்த பொருளாகும். வழக்கிலுள்ள மூட்டுகள் ஆணி மூட்டு (இது R என்ற குறியீட்டால் குறிக்கப் படும்). ஊரும் மூட்டு (P), உருளை மூட்டு (C)பந்துக் கிண்ணமூட்டு (S), திருகுமூட்டு (H) என்பனவாகும். பல் சக்கரத்துக்கு இடையிலுள்ள பல்லின் இணைப் பும், நெம்புருளுக்கும் பின்பற்றிக்கும் உள்ள தொடு கையும் மூட்டுகள் அல்லது இணைப்புகள் எனப்படு கின்றன.படம் 4 வகைமைப்பிணைப்பொன்றின் வடி வத்தைக் காட்டுகிறது. காண்க, பிணைப்பு (இயங் கமைப்பு). ஒட்டுப்பட்டைகளும் சங்கிலிகளும். இவ்வகை நெளி தட்டையான வுடைய இணைப்பிகளில் கப்பியும் ஒட்டுப்பட்டையும் அடங்கும் (படம் 5). இவற்றுள் நேர அமைப்புப் பட்டைகளும் சங்கிலிப் பட்டை களும் அடங்கும். கப்பியும் பட்டையும் உராய்வு வகைகள் ஆகும். பின்னவை நேரிணைப்பு வகைகள் ஆகும். நடைமுறையில் எல்லா இணைப்பிகளும் நிலையான கோண விரைவு விகிதம் உடையவை. காண்க. பட்டை முறை ஒட்டு; சங்கிலி முறை ஒட்டு. பிற எந்திர உறுப்புகள். இவை பற்சட்டங்கள் (ratchets) தொடக்கிகள் (tripes), இடைப்பூட்டுகள் (interlocks) போன்றவற்றைக் குறிப்பிடும். இதில் மிகவும் முக்கியமானது பற்கவ்வு அமைப்பாகும். படம் 6 இத்தகைய பற்கவ்வு இயங்கமைப்பைக் காட்டுகிறது. இதிலுள்ள பற்கவ்வு அமைப்பு ஒரு (A) படம். 4 வகைமைப் பிணைப்புகள் வணரி (ஆ) காடியிட்ட பிணைப்பு (இ) ஆணி இணைக்க முடிந்த ஊரி (slider) (ஈ) முக்கோணப் பிணைப்பு.