324 இயங்கமைப்பு
324 இயங்கமைப்பு யாக இயங்கமைப்புகளைக் குறிப்பிடும் முறைக்கான கட்டுப்பாடுகள் 1 முதல் 4 வரை உள்ள சமன்பாடு களில் தரப்பட்டுள்ளன. உள்ள சமன்பாடுகள் 1 முதல் 4 வரையிலானவற்றில் ஒற்றை கட்டுப்பாடுகளை நிறைவேற்றும் விடுதலை போக்குடைய இயங்கமைப்புகள் 7 வகை களாக அமைகின்றன. நான்கு பிணைப்புகளும் ஆணி மூட்டுகளும் இரண்டு ஊரும் மூட்டுகளும் உள்ள அமைப்புகளுக்கே இக்கருத்துப் பொருந்தும். 10 உறுப்புகள் உள்ள ஒற்றை விடுதலைப் போக்கு டைய அமைப்புகள் கொண்ட தள ஆணி மூட்டு டைய அமைப்பின் கட்டமைப்புகளின் எண்ணிக் கையும், 6 உறுப்புகள் கொண்ட ஒற்றை விடுதலைப் போக்குடைய பல்சக்கரத் தொடர்களில் கட்டமைப் புகளின் எண்ணிக்கையும் எளிதாகக் கண்ட றியப்படு கின்றன.இயக்கப்பாட்டுக்கட்டமைப்பைக் கொண்டு இயங்கமைப்புகளைத் தொகுத்து ஆய்தல், கட்டமைப் புத் தொகுப்பாய்வு எனப்படுகிறது. இது இயங்கமைப் பின் செயல்பாட்டிலிருந்து இயக்கப்பாட்டுக் கட்ட மைப்பைப் பிரிக்கலாம் என்ற அடிக்கோளைச்சார்ந்து கட்டமைப்புத் தொகுப்புச் செய்யப்படுகிறது. ஓர் அச்சுத்தண்டு இணைப்பிற்கான இயங்கமைப் பைத் தேர்ந்தெடுக்கும்போது அதற்குத் தேவையான இயக்கக் கட்டமைப்புடைய இயங்கமைப்பைத் தேடி னால் போதும். தேடும் இயக்கக் கட்டமைப்பு, குறிப் பிட்ட பணியைச் செய்வதற்கேற்ற அமைப்புகளும் பகுதிகளும் விடுதலை முகங்களும் உடையதாய் அமைதல் வேண்டும். மேற்கூறிய கட்டுப்பாடுகளை நிறைவு செய்யும் இயங்கமைப்புகளைத் தேர்ந்தெடுத் ததும் தேவையான செயல்பாட்டுக்கு உரிய கட்டுப் பாடுகளைப் பின்பற்றித் தனி இயங்கமைப்பைத் தேர்ந்தெடுக்கலாம். இத்தகைய ஆய்வு குறிப்பிட்ட செயலுக்கான தகுதிகள் உடைய இயங்கமைப்புகள் எல்லாவற்றையும் இனம் காண வழிவகுக்கும். எந்திர வடிவமைப்பின் கருத்துருவாக்க நிலையிலும் புதுமைபுனையும் நிலையிலும் இந்த விதிமுறை பெரிதும் உதவும். இதற்கு இதுவரையில் நடைமுறை யில் உள்ள எல்லா யங்கமைப்புகளின் விளக்கப்பட நூல் தேவை. இயக்கப்பாட்டியல். பாய்வு மைப்பைப் குறிப்பிட்ட இயக்கப்பாட்டியல் பகுப் குறிப்பட்ட அளவுகளுடைய இயங்க பகுப்பாயும். தொகுப்பாய்வு. இது இயக்கத்திற்கான இயங்கமைப்பின் அளவுகளை வடிவமைக்கும். வை தள மற்றும் முப்பருமான இயக்கங்களின் முன், வரம்புள்ள இடப் பெயர்ச்சிகள், விரைவுகள், முடுக்கங்கள், உயர் முடுக்கங்கள், வளைவியக்கங்கள் உயர் வளைவியக்கங்கள் (high curvatures) ஆகியவற்றைப் படிக்கும். ஓர் இயங்கமைப்பின் இடப்பெயர்ச் சிசுளை வரைபடத்தாலோ, கணிதப் பகுப்பாய் வாலோ கண்டறியலாம். இதற்கு இயங்கமைப் புகளின் தனித்த கன்னிகளின் இணைப்பு நிலைமை கள் தேவை. விரைவு முடுக்கங்கள் உயர் இயக்கக் கொணர்வுகள் ஆகியவற்றை வகைப்பாட்டின் மூலம் (differentiation) கண்டறியலாம். பொதுவான ெ தொடர் தள இயக்கத்தின் ஒரு கணத்தில் ஒரு புள்ளியில் விரைவு சுழியாகும். இதற்குக் கணமையம் என்று பெயர். மற்றொரு புள்ளியில் முடுக்கம் சுழி யாகும். இதற்கு முடுக்கமையம் என்று பெயர். மற்றொரு புள்ளியில் முடுக்கத்தின் வகைகள் சுழி யாகும். கணமாறிலிக் கோட்பாடு இத்தகைய ஆய்வு களுக்குப் பயன்படுகிறது. ஒரு விறைத்த பொருளின் இருப்பைக் குறிப்பிடப்பட்ட தளம் ஒன்றிய தனித் தனி இருப்புகளின் வரிசை முறையில் வழிப்படுத்த அப்பொருள்களில் உள்ள இயக்கப் புள்ளிகளின் இருப்பு வரை (loci) தேவை. இந்தப் புள்ளி வணரி அல்லது ஊர்வமைப்புகள் பொருத்தப்பட்டால் அவை அப்பொருளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும். நான்கு தற்செயலாக அமையும் நிலையான இருப்பு களுக்கு இந்த இருப்புவரை ஒரு புள்ளியைச் சுற்றி அமையும் வட்டமாகவோ ஒரு மையம் சுற்றி அமையும் வளைவாகவோ, பந்துப் புள்ளியாகவோ அமையலாம். ஒரு இயங்கும் பொருளின் நான்கு புள்ளிகள் ஒரு வட்டத்தில் அமைந்தால் அதுவட்டப் புள்ளி வளைவு எனவும், வட்டப்புள்ளி வளைவின் புள்ளிகளால் உருவாக்கப்படும் மையங்களின் இருப்பு வரை மையப்புள்ளி வரை எனவும், ஓர் இயங்கமைப் பின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் பொருளின் நான்கு இயக்கப்புள்ளிகள் கோடு ஒன்றியவையாக அமைந் தால் அது பந்துப்புள்ளி என்றும் அழைக்கப்படும். வட்டப்புள்ளிகளும், மையப்புள்ளிகளும் முறையே அமைக் இயங்கும் மற்றும் நிலையான வணரிகளை கும் புள்ளிகளுக்கும், பந்துப்புள்ளி ஊர்வு அமைப் பைப் பொறுத்த புள்ளிக்கும் உதவும். இவ்வகையாக ஒரு விறைத்த பொருளைக் குறிப்பிட்ட இருப்புகளின் வரிசையூடே வழிப்படுத்தும் இயங்கமைப்புப்பிணைப் புகளின் விகித அளவுகளைக் கண்டறியலாம். வட்டப்புள்ளியும் மையப்புள்ளியும் முப்படி. இயற்கணித வளைவுகளில் அமையும். இந்த வளைவு கள் இயங்கமைப்புகளின் பிணைப்புகளைப் பல்வேறு இயக்கத் தேவைகளுக்கு வடிவமைக்க உதவுகின்றன. இந்தக் கோட்பாட்டை முப்பருமான இயக்கத்திற் கும், தளம் ஒன்றிய ஐம்புள்ளி இருப்புகளுக்கும் நீட்டிக்கலாம். ஷெபிச்சேவின் தோராயங்களைப் பயன்படுத்திப் பிணைப்பு இயக்கத்தைத தேவையான இயக்கத்துக்கு மிக அணுக்கமாக அமையுமாறு உகப்பு நிலைப்படுத்தலாம். இயக்கப்பாட்டுப்பகுப்பாய்வில் பயன்படும் பல் வேறு கருத்துகளாவன, இயக்கப்பாட்டுத் தலை கீழாக்கம் (ஓர் இயங்கமைப்பின் பல்வேறு பிணைப் புகளின் செயல்முறையை அல்லது இயக்கத்தைத்