பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 இயங்கிலக்கு காட்டும் முறை

328 இயங்கிலக்கு காட்டும் முறை பலித்து இனங்காட்டும் ராடார்த் துடிப்பு எதிர் பலிப்புமுறை இயங்கிலக்கு காட்டும் முறை (moving target indication) ஆகும். குறிப்பிட்ட தரைநிலையம், வலிமைமிக்க தரை எதிர்பலிப்பு அலைகளைத் தரும் குறிப்பிட்ட வட்டாரத்துக்குள் இயங்கும் பொருள் களை மட்டும் பிரித்து மிகவும் ஒற்றறிய தேவைப்படுகிறது. இயங்கிலக்கு காட்டல் வசதியுள்ள ராடார் வெளியீட்டைத்தர, தரை அமைவுப்பட இருப்புக் காட்டி வகை(plan-position indicator) தான் நடைமுறையில் உள்ளது. இதில் தரை எதிர் பலிப்புகள் (ground clutter) அடங்கிவிடும் இயங்கு இலக்கு எதிர்பலிப்புகள் (echos) மட்டும் ஒளிமிக்க புள்ளிகளாகத் திரையில் தோன்றும். இயக்கக்கோட்பாடு. இயங்கிலக்கு காட்டல் செயல் முறையில் டாப்ளர் விளைவு பயன்படுகிறது. ராடாரி லிருந்து விலகிச்செல்லும் அல்லது நெருங்கிவரும் இயங்கும்பொருள் தரும் எதிர்பலிப்பின் ஊர்தி அலை வெண், பொருளின் ஆரவிரைவு, செலுத்த அலை வெண் ஆகியவற்றின் பெருக்கல் மதிப்புக்கு நேர் தகவில் இடம் பெயர்கிறது. அலைவாங்கியில் (recei ver) உள்ள நிலைப்புமிக்க அலைவியற்றி அலைச் செலுத்தியுடன் ஒத்தியக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து செலுத்தியின் தறுவாயையும், அலைவெண்ணையும் தரும். எதிர்பலிப்புகள், மேற் கொள் அலைவியற்றியுடன் பன்மையியக்கப்படுத்தப் படுகின்றன. நிலையான பொருள்கள் நிலையான இடை வெளியுள்ள துடிப்புகளைத் தரும். ஏனெனில் ராடாருக்கும் நிலையாக உள்ள துடிப்புகளின் பயண நேரம் மாறாமலிருப்பதேயாகும். பன்மையியக்கப் படுத்தப்பட்ட நிலைப்பொருள் தரும் எதிர்பலிப்பு களின் துடிப்பிடையே உள்ள தறுவாய் மாறாது. ஆனால் இயங்கு பொருள் தரும் துடிப்பு எதிர் பலிப்புகளிடையே உள்ள தறுவாய் மாறும். ஏனெ னில் ராடாருக்கும் இயங்கு பொருளுக்கும் இடையில் தொலைவு மாறமாறத் துடிப்பின் பயண நேரமும் மாறுகிறது. எனவே எதிர்பலிக்கும் துடிப்பிடையே உள்ள தறுவாயும் மாறுகிறது. காண்க ராடார். டாப்ளர் தரை எதிர்பலிப்புகளைத் தவிர்க்க, தரைத் துடிப்பிடைத் தறுவாய் வேறுபாடின்மையைப் பயன் படுத்த வேண்டும். இதற்குத் தாழ்ந்த தொடர்கள் (delay lines) பயன்படுகின்றன. இவை பன்மையியக்க அலைகளில் உள்ள நிலையான துடிப்படை நேர அளவுள்ள சைகைகளைத் தேக்கி விடுகின்றன. பிறகு தாழ்ந்த தொடரின் வெளியீட்டைப் புதிய பன்மை யியக்கி வெளியீட்டிலிருந்து கழித்தால், இரண்டும் முற்றொருமித்தவையானால் வேறுபாடு சுழியாகும். எனவே தரை எதிர்பலிப்புகட்கும் இவ்வேறுபாடு சுழியாகும். இயங்கிலக்குகளுக்குத் துடிப்பிடையே உள்ள தறுவாய் வேறுபடலால் இது சுழியாகாது. அடுத்த துடிப்புகளுக்கு இடையில் உள்ள வேறுபாடு இயங்கிலக்கைக் காட்டும் வெளியீடாகத் திரையில் தோன்றும். நடைமுறையில் உள்ள தாழ்ந்த தொடர் கள் பிணைத்த குவார்ட்சுப் படிகங்களில் நிகழும் ஒலி பரவல் பண்பை இதற்குப் பயன்படுத்துகின்றன. பல உள் மேற்கோள் அலைவியற்றியை (reference oscil- lator) அலைச்செலுத்தி வெளியீட்டுடன் ஒத்தியக்க, ஏற்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. மேற்கோள் அலைவியற்றி ஊர்தி அலைவெண்ணில் (carrier frequency) இருக்கலாம். ஆனால் வழக்க மாக, தாழ் அலைவெண் அலைவியற்றியில் சிறந்த நிலைப்புக் கிடைப்பதால் இடைநிலை அலைவெண் ணில் இது இயங்குகிறது. இந்த ஏற்பாட்டில், ஊர்தி அலைவெண்ணிலிருந்து இடைநிலை அலைவெண் ணிற்கு மாற்ற மிகவும் நிலைப்புடைய அக அலை வியற்றி தேவைப்படுகிறது. இத்தேவையை நிறைவு செய்யும் நிலையுடைய அக அலைவியற்றி (stable Incal oscillator) இவ்வகைச் சுற்றுவழிகளைக் குறிப் பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மேற்கோள் அலை வியற்றி ஒத்தியைந்த அலைவியற்றி எனவும் வழங்கப் படுகிறது. அலைச்செலுத்தியின் வெளியீட்டுடன் இந்த அலைவியற்றி ஒத்தியைவதால் அதாவது நிலையான தறுவாய் வேறுபாட்டுடன் இயங்குவதால் இவ்வாறு வழங்கப்படுகிறது. தகுதி இலக்கம். இயங்கிலக்குக் காட்டும் முறை யின் தகுதி இலக்கம் (figure of merit), எதிர்பலிப்பு அடக்குக் கூறு, இயங்கிலக்கு காட்டிக்கு முந்தைய எதிர்பலிப்பு வீச்சின் சராசரி இருபடி மூலத்துக்கும் பிந்தியதற்கும் உள்ள விகிதமாகும் என வரையறுக்கப் இது எதிர்பலிப்பு அடக்குக் படுகிறது. எனவே, இது எதிர்பலிப்பு கூறின் அளவுக்குச் சமமாகும். மேலும், இது பல் கட்டுப்படுத்தக்கூடியதும், சுழல் வானிலை போன்ற கட்டுப்படுத்த இயலாததுமான கூறுகளைச் சார்ந் துள்ளது. இயங்கு இலக்கு காட்டும் ராடாரின் மற்றொரு தகுதி இலக்கம் குறிப்பலை விகிதமாகும். குறிப்பலை எதிர்பரப்பு எதிர்பலிப்பு விகிதத்தை மிகுதிப்படுத் துவதால் அதே நேரத்தில் குறிப்பலை - இரைச்சல் விகிதம் குறைகிறது. இது ரேடாரின் உணர்திறனை அறிந்துகொள்வதற்கு உதவும் ஓர் அளவாகும். அடக்குக்கூறு இல்லாத சுற்றுச்சூழலில் குறிப்பலை இரைச்சல் விகிதம் குறைவாக இருப்பதால் இயங்கு இலக்கு காட்டும் இலக்குகளைக் கண்டறிவது கடின மாகும். குறிப்பலை -எதிர்பலிப்பு விகிதம், குறிப் பலை - இரைச்சல்விகிதம் ஆகியவற்றின்ஒருங்கிணைந்த செயல்திறன் வளர்ச்சிக்கு இணைநிலை டாப்ளர் வடிப்பிகள் துணை புரிகின்றன. காண்க, குறிப் பலை இரைச்சல் விகிதம். மின் ஊட்டம் மாற்றும் அமைப்புகளின் பயன்பாடுகள். சிறந்த திறமையுடன் இயங்கு இலக்குக்காட்டியை