பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயங்கு உருமாற்றப்‌ பாறைகள்‌ 329

நடைமுறைப்படுத்தி எதிர்பலிப்பை நீக்குவதற்கு மின் ஊட்டம் மாற்றும் அமைப்புகளைப் பயன்படுத்த லாம். மின் ஊட்டம் மாற்றும் அமைப்புகள், இதழ் அணிவகையைச் சார்ந்த பகுதிக் கடத்தி வகைக் கொண்மி போன்றவையாகும். இயங்கு இலக்குக் காட்டியில் பயன்படுத்தப்படுவதுபோல் திரும்பி வரும் ரேடார் துடிப்புகளின் பதக்கூறுகள் (samples) திரட்டப்பட்டுத் தனித்தனி இடைவிட்ட மின்னூட்ட மாகப் (electric charge) பயன்படுத்தப்படுகின்றன. இம்முறை இடைவிட்ட குறிப்பலைமுறை இயங்கி லக்கு காட்டல் என அழைக்கப்படுகிறது. உலோக ஆக்சைடாலான பகுதிக்கடத்தி வகைப் புலவிளைவு திரிதடையங்களே, மின் ஊட்டம் மாற்றும் அமைப்பு களாக நடப்பு ராடார் திருப்பத்திலிருந்து ஒரு துடிப்பு மீள்நிகழ் இடைவெளி கழிக்கப்பட்ட ராடார் பயன் திருப்பத்தைத் தாமதப்படுத்துவதற்காகப் படுத்தப்படுகின்றன. இடைவெளியைவிடக் தகவமைப்புடைய இயங்கு இலக்கு காட்டி. ராடார் துடிப்பு மீள் அமைப்புகளை வடிவமைப்பவர்கள், குறைந்த கால நிகழ்கால அளவைக் கொண்ட மீள் நிகழ் துடிப்புகளைப் பயன்படுத்திச் சிறந்த இலக்குத் தொலைவையும், விரைவுப் பிரிதிறனையும் (velocity resolution) பெறலாம் என அறிந்துள்ளனர். என்றாலும் இந் நடைமுறையில் இலக்கின் தொலைவையும், வினா வையும் அறிவதில் குழப்பம் உருவாகிறது. இயங்கு இலக்கு காட்டும் முறை பயன்பாட்டில் உள்ளபோது, இம் மீள்நிகழ் துடிப்புகள், சில இயங்கு இலக்கு விரைவுகளில் ராடாரைச் செயல்படாதவாறு செய் கின்றன. எனினும் ராடாரின் துடிப்பு மீள்நிகழ் இடைவெளி அலைவெண்ணைச் சீரற்ற முறையில், மாற்றி இம்மறைபுல விரைவைத் தவிர்க்கலாம். துடிப்பு மீள்நிகழ் அலைவெண்ணின் விரைவான மாற்றம், வடிப்பு அமைப்புகள், தொகுப்பு முறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது தன்னியக்க முறையில் தக்க மாற்றங்களை ஏற்படுத்தி இலக்கின் தொலைவு, விரைவு ஆகியவற்றை மயக்கமின்றி அறிய உதவுகிறது. துடிப்பு மீள்நிகழ் அலைவெண் மிகுந்த வேகத்தில் இருந்தாலும், சீரற்ற துடிப்பு இடைவெளி மறைபுல விரைவைக் குறைத்தாலும், எதிர்பலிப்பு வடிப்பிகள் துடிப்பு மீள்நிகழ் அலை வெண்ணுடன் ஒத்தியக்கப்பட்டால் வேண்டாத எதிர்பலிப்புப் பக்கப்பட்டைகளைக் குறைக்கின்றன. எதிர்பலிப்பு வடிப்பிகள் தள்ளற்பட்டைகளை ஊர்தி அலைவெண்ணைச் சுற்றிச் செறிந்தமையும்படி கொண்ட வெட்டுப்பள்ளவகை (notch) வடிப்பி களாக இருக்கலாம். காண்க, மின்வடிப்பி. இத்தகவமைப்பு இயங்கு இலக்கக் காட்டிகள் பனி வீழ்படிவுப் பின்னணியில் இயற்கையான இயங்கு இலக்குகளைக் கண்டறியவும், எதிரிகளால் ராடார்களுக்கு எதிராக வீசப்படும் பயனற்ற கசடு களிலிருந்து இயங்கு உருமாற்றப் பாறைகள் 329 ராடாரைப் பாதுகாக்கவும் கின்றன. காண்க. மின்துளியல்போர்; ராடார். இயங்கு உருமாற்றப் பாறைகள் உதவு உலோ. செ. வெப்பம், அழுத்தம், வேதியியல் நீர்மங்கள் முதலியன உருமாற்றப் பாறைகள் உண்டாவதற்கு முக்கியமாகச் செயல்படும் இயற்பியல் பண்புகளாகும். அனற் பாறைகளும், படிவுப் பாறைகளும் இயற்பியல் பண்புகளால் பலவிதமான புதுக்கனிமங்களும், புது நுண் இழைமை அமைப்புகளும் கொண்ட புதுத் தன்மையுள்ள உருமாற்றப் பாறைகளாக மாற்றம் பெறுகின்றன. உருமாற்றத்திற்கு வெப்பம் முக்கிய காரணமாக இருப்பின், உருவாகும் பாறைகள் தொடு உருமாற்றப் (contact பாறைகள் metamorphic rocks) என்றும், அழுத்தம் காரணமாயிருப்பின் இயங்கு உருமாற்றப் பாறைகள் (dynamic metam - orphic rocks) என்றும், இரண்டு இயற்பியல் தன்மை களும் காரணமாகும்போது இயங்கு - வெப்ப உருமாற்றப் பாறைகள் என்றும் அழைக்கப்படுகின் றன. வேதியியல் நீர்மங்கள், சில சமயங்களில் மடிப்பு உருமாறிப் பாறைகளையும் (metasomatic) தோற்று விக்கின்றன. இயங்கு உருமாற்றப் உருமாற்றப் பாறைகளில் அழுத்தம் முக்கிய இடத்தை வகிக்கிறது. புவியின் அழுத்தப் பகுதி களில் இவ்வித நிகழ்ச்சிகள் அதிகமாக ஏற்படுகின்றன. பொதுவாக இந்த அழுத்தம் ஒரு குறிப்பிட்ட திசை யில் இயங்கும் அழுத்தம், அல்லது தகைவு (directed pressure or stress) நிலை நீரியக்க அழுத்தம் (hydro- static pressure) என இருவகைப்படும். ஒரு குறிப்பிட்ட திசையில் இயங்கும் அழுத்தம் விஞ்சும்போது அப்பாறையின் அமைப்பும், நுண் இழைமையும் மாறுபட்ட சிறப்புத் தன்மையைப் பெறுகின்றன. பொதுவாக புவி ஆழம் அதிகரிக்க, வெப்பமும் சீரான அழுத்தமும் அதிகமாகின்றன. ஆனால் ஒரு திசையில் இயங்கும் அழுத்தம் ஒரு குறிப்பிட்ட ஆழம் வரை அதிகமாகிக் கொண்டே யிருந்து மீண்டும் குறைந்து வெற்றுநிலையை (zero stage) அடைகிறது. இதனால் அதிக ஆழத்தில் பாறைகள், குறைதிட நிலையை (semi-solid stage) அடைகின்றன. இந்த அழுத்தம் கனிமங்களின் உருகு நிலையைக் குறைக்கின்றது. ஆனால் கரைதிறனை அதிகமாக்குகின்றது. எனவே, மறு படிகமாதலுக்கு (recrystallisation) இவ்வழுத்தம் ஒரு முக்கிய தேவை யாகும். இந்த அழுத்தம், கனிமங்களின் அளவையும் இருப்பிடத்தையும் மாற்றுகின்றது.