பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 இயங்கு உருமாற்றப்‌ பாறைகள்‌

332 இயங்கு உருமாற்றப் பாறைகள் படுகை நெருங்கு நொறுங்கு கற்படிவு படம். 4 குறுக்கு வெட்டுத்தோற்றம்-பாறைப்பிளவு இடப்பெயர்ச்சியுடன் நெருங்கு, நொறுங்கு கற்படிவுப் பாறை காணப்படுகின்றன. இந்தப் பாறைகளில் காணப் படும் பெரிய அளவில் இருக்கும் கனிமங்கள், செயல் பட்ட அழுத்தத்தின் காரணமாக ஒளியியல் சிறப்புக் குணங்களைக் கொண்டனவாகக் காணப்படுகின்றன. அக்கனிமங்களில் காணப்படும் கனிமப்பிளவில் வளைவுத் தன்மையும், கனிமப் பிளவுத் தனத்தில் நெகிழ்வுத் தன்மையும் அதிகஅளவு காணப்படும். குவார்ட்சில் அலை ஒளிமறைவும், கால்டைட், ஃலெஸ் பார் படிகங்களில் இரண்டாம்தர இரட்டிப்புத் தன்மையும் (secondary twinning) காணப்படுகின்றன. ஒளிமாறாக் கனிமமான (isotropic mineral) கன்னெட் சீரில்லா இரட்டைக் கோட்டையுடையதாகக் காணப் படுகிறது. ஃப்ளேசர் பாறைகள் (flaser rocks), அழுத்தம் காரணமாகக் சுண்ணாம்புப் பாறைகளில் ஏற்படும் மெல்லடுக்குகளில் ஒத்திணைவான சறுக்குப் பெயர்ச்சியின் (shean) போது சில பாறைத் துண்டு கள் பொதிபடிகங்களாகக் காணப்படுகின்றன. இவை படிகக் காரையில் பதிந்து, அதிகம் மாற்றம் பெறாத படிகங்களாக நுண் துகள் படிகக் காரை யில் இறுகி, பாறைகளாக மாறுகின்றன. இவை ஃப்ளேசர் பாறைகள் எனப்படும். இவற்றில் படிகக் காரை, உருமாற்றம் பெற்றிருக்கும். பொதிபடிகங் கள் உருமாற்றம் பெற்றிரா. சுண்ணாம்பு ஃப்ளேசர் பாறை, கிரேனைட் ஃப்ளேசர் பாறை, கேப்ரோ ஃபளேசர் பாறை எனப் பல வகையான ஃப்ளேசர் பாறைகள் காணப்படுகின்றன. பலகைப் பாறைகள் (slates). களிமண் வயப் படிவுப் பாறைகள் திசை அழுத்தத்திற்கு உட்பட்டு நொறுங்கல் பலகைப் பிளவுத் பாறையாக மாற்றமடையும் போது பாறைகள் உண்டாகின்றன. இவற்றின் தன்மை சீராகவும் தட்டையாகவும் இருப்பதால் மெல்லிய பலவகைகளாக உடையும் தன்மை கொண்டு காணப்படுகிறது. பொதுவாக நுண்ணிய அபிரகக் கனிமங்கள் குளோரைட் ஆகியவற்றுடன் குவார்ட்சு,ஃடெல்ஸ்பார் முதலிய நுண்ணிய துகள் களாக பலகைப் பாறையை உருவாக்குகின்றன. இதில் காணப்படும் அனைத்துக் கனிமங்களும் தட் டையாகவும், பிளவுத் தளத்திற்கு இணையாகவும் அமைந்திருக்கும். இப்பாறையில் காணப்படும் கனி மங்கள், முதலில் திசை அழுத்தத்தால் பிளவுத் தளத்திற்கு இணையாகக் கொண்டு வரப்படு கின்றது. பிறகு இவ்விசை மடிப்புத் தன்மையை (folding) ஏற்படுத்துகின்றது. அழுத்தம் அதிகரிக்கும் போது, கனிமத்துகள்கள் அழுத்தம் செயல்படும் திசைக்குச் செங்குத்தாகச் சுழற்றப்படுகின்றன. இதனால், பலகையில் பிளவுத்தன்மை (slaty cleavage) ஏற்படுகிறது. பலகைப் பாறையின் படுகைத்தளத் திற்குச் சற்று, கோண மாறுபாட்டில், பலகைப் பிளவுத் தன்மை காணப்படுகின்றது. இப்பாறையில் காணப்படும் மாற்றமும், அணுக்கட்டுகளின் சிதற லால் ஏற்படுவதாகும். இப்பாறையில் அபிரகமும், குளோரைட்டும் பெருமளவில் காணப்படுகின்றன. கிராபைட், பைரட் முதலிய கனிமங்கள் சிறிதளவில் காணப்படுகின்றன. ஃபில்லைட்கள் (phillites). இயங்கு உருமாற்றம் அதிகரிக்கும்போது, நீண்ட உருமாற்றச் சூழ்நிலை களில், லெப்பம், சிறிதளவு வேதிநீர்மங்களின் உதவி அ படம் 5. மெட்டாபிலைட் உருவாதலின் தொடக்க நிலை அ) பில்லைட்: இலை அடுக்கு அமைப்பிற்குக் குறுக்காக குவார்ட்ஸ், வெள்ளை அபிரசும், குளோரைட்டுடன் காணப்படு கிறது. குவார்ட்சு சிறிய தாரைகள், இவை அடுக்கு அமைப் பிற்கு இணையாக உள்ளன. ஆ) பலகைப் பாறை: பைரட் பொதி படிகங்களைச் சுற்றி ஏடாகக்குவார்ட்சும், குளோரைட்டும் வளைந்த குவார்ட்சு இழைகள் பொதி படிகங்களின் சுழற்சியைக் காட்டுகின்றன.