338 இயங்கு உறுப்புகள்
338 இயங்கு உறுப்புகள் தால், அவை ஆக்சிஜனை உறிஞ்சி மூவிணையப் பியூட்டைல் பெராக்சைடு எனும் பொருளைத் தரு கின்றன; அயோடினை நிறநீக்கம் செய்கின்றன. கார உலோகங்களுடன் வினையுற்றுச் செங்கல் சிவப்பு நிற உப்புகளைத் தோற்றுவிக்கின்றன. இவ்வினை களில் எதையுமே அறுஃபீனைல் ஈதேன் போன்ற ஹைட்ரோகார்பன்களில் எதிர்பார்க்க இயலாது. இவ்வினைகள் நிகழ்வதற்கு, (C,H,) C,→ 2{C, H,JC° என்ற வினை முதலில் நிகழவேண்டும். இப்பங்கிடப் படாத (unpaired) எலெக்ட்ரான் ஆக்சிஜனிலுள்ள ஒன்றுடன் சேர்ந்து ஒற்றை எலெக்ட்ரான்களில் இரட்டையாகலாம் அல்லது (CH) C + O® 1 0• + C• (C&H,), (C,H,)-C-0-0-C-(C,H,) அயோடின் அணுவிலுள்ள ஒற்றை எலெக்ட்ரா னுடன் பிணையக்கூடும். I*+ + °C(CH) -I- C(C₂H₂), கார உலோக அணுக்களிடமிருந்து எலெக்ட்ரான் களைப் பெற்றுக் கொள்ளலாம். கோம்பர்க் தாம் தயாரித்த (C.H,),C, வுக்கு மூலக்கூறு எடையை 343 என அறிந்தார். இச்சேர்மத்தின் வாய்ப்பாட்டின் படி அதன் மூலக்கூறு எடை 486 ஆகும்; (CeH),C இயங்கு உறுப்பின் வாய்பாடு 243. எனவே அறுஃ பீனைல் எத்தேனுக்கும் மூஃபீனைல் மீத்தைல் இயங்கு உறுப்புக்கும் இடையே ஒரு சமநிலை இருந்தாக வேண்டும் என்பதும் கோம்பர்கின் தயாரிப்பு இவ் விரண்டின் சமநிலைக்கலவையே என்பதும் வந்தன. தெரிய இயங்கு உறுப்புகளைக் கண்டறிதல், 1929இல் பானெத் (Paneth) என்பார் ஆடி நீக்கச் சோதனை (Mirror removal method} வாயிலாக மீத்தைல் எனும் இயங்கு உறுப்பு உருவாதலைக் கண்டுபிடித்தார். டெட்ரா மீத்தைல் காரீயம் (tetramethyl lead) என்னும் சேர்மத்தை ஒரு குழாயின் வழியாகச் செலுத்தி, குழாயின் நுழைவாயிலுக்குத் தொலை விலுள்ள ஒரு பகுதியை நன்கு சூடேற்றினார். அப் பகுதியில் பளபளப்பான காரீயப்படிவு தோன்றியது. TML வாயு வெப்பத்தால் சிதைவுறுவதால் இப்படிவு தோன்றுகிறது. (CH), Pb pb + 4 CH, TML குளிர்வித்தல் இவ்வினையின் மற்றொரு வினைபொருள் மீத்தைல் இயங்கு உறுப்பாகும். குழாயின் இப்பகுதியைச் சூடாக்குவதை நிறுத்திவிட்டு, நுழைவாயிலுக்கு அருகிலுள்ள பகுதியைச் சூடேற்றினால், அங்கு காரீயப் படிவு தோன்றுவதுடன், அதே நேரத்தில் பிறிதொரு பகுதியில் தோன்றிய காரியப்படிவு மறைந்துவிடுகிறது. இதற்குக் காரணம் நுழை வாயிலின் அருகில் தோன்றிய மீத்தைல் இயங்கு உறுப்பு குழாயினூடே சென்று முன்பே படிந்துள்ள காரீயத்துடன் வினைப்பட்டு, அதனை மீண்டும் TML ஆவியாக்குகிறது. என்பதாகும். மீத்தைல் உறுப்புத் தோன்றுவதுடன் அது காரீயத்துடன் வினை புரியும் வரை நிலையாக இருக்கிறது. இவ்வுறுப்பின் அரை வாழ்வுக் காலம் (half-life period) 0. 006 வினாடி என்றும், சராசரியாக நிலைத்து நிற்கும் காலம் 8×10-3 வினாடி என்றும் அறியப்பட்டுள்ளன. எலெக்ட்ரான் சுழற்சி உடனிசைவு நிறலியல் (electron spin resonance spectroscopy, ESR) என்னும் அளவையைப் பயன்படுத்தி இயங்கு உறுப்பு களை எளிதில் கண்டறியலாம். ஒற்றை எலெக்ட்ரான் அல்லது பங்கிடப்படாத இரு தனி எலெக்ட்ரான் களைக் கொண்ட இயங்கு உறுப்புகளைக் கண்ட்றி வதற்கு ESR நிறலியல் ஏற்றவழியாகும். இயங்கு உறுப்புகளின் நிலைப்புத்தன்மை, வினாடி யில் ஒரு சிறுபங்கே நிலைத்திருக்கக்கூடிய மீத்தைல் இயங்கு உறுப்பு முதல், திண்ம நிலையிலும், கரை சல் நிலையிலும் காற்றுப்புகாத கலனில் பல நாள்கள் நிலைத்து நிற்கக்கூடிய மூஃபீனைல் மீத்தைல் இயங்கு உறுப்பு வரை பல்வேறு நிலைத்தன்மைகளைக் கொண்ட இயங்கு உறுப்புகள் அறியப்பட்டுள்ளன. இவை தவிர, இரு பங்கிடப்படாத எலெக்ட்ரானைக் கொண்ட கரிய வகையற்ற NO, NO,, CIO ஆகி யனவும் இயங்கு உறுப்புகளின் நிலைத்தன்மைக்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்பதை விளக்கு கின்றன. (C.H,),C+, (C,H,), C- ஆகிய அயனி களைப் போன்றே (CH,},C° உறுப்பு எதிர்பாராத நிலைத்தன்மையைப் பெற்றுள்ளது. இதற்கான கார ணத்தை ஆராயுமுன், இதன் மூலப்பொருளான (C,H,),C• ஐக் கூர்ந்து நோக்கினால் ஓர் உண்மை புலப்படும். CH க்குப் பிணைப்பாற்றல் 83 கி.கலோரி ஆக இருக்கையில் அதன் சார்புச் சேர்ம மாகிய (C,H,), C,க்குப் பிணைப்பாற்றல் 11 கி. கலோரியே ஆகும், இதற்குக் காரணம் (C,H,) C இல் தோன்றக்கூடிய கொள்ளிடத்தடை (steric hinderence) ஆகும். இதன் விளைவாக (C.H,)¢C, எளிதில் சிதைவுற்று (CH,),C என்னும் இயங்கு உறுப்பைத் தோற்றுவிக்கிறது. இவ்வுறுப்பில் உட னிசைவு (resonance) மலிந்துள்ளது. ஒற்றை எலெக்ட் ரானை மூன்று பென்சீன் வளையங்களின் ஆர்தோ. பாரா இருக்கைகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய வாய்ப்பு இருப்பதால் 44 உடனிசைவு அமைப்பு களை வரையலாம். உடனிசைவு அமைப்புகளின் எண்ணிக்கை உயர்ந்தால், சேர்மத்தின் உடனிசைவு ஆற்றலும்