342 இயங்கு சமநிலை மாற்றியம்
342 இயங்கு சமநிலை மாற்றியம் உறுப்புகளின் வடிவமைப்பு. மீத்தைல் இயங்கு உறுப்பு sp அல்லது sp' கலப்பினத்தைச் சார்ந் திருக்க வாய்ப்பு இருந்தாலும், நிறநிரல் ஆய்வுகளின் (spectral analysis) வாயிலாக sp² அமைப்பே எனவே மீத்தைல் பொருந்திக் காணப்படுகிறது. தொகுதி சமதளத்தில் அமைந்தது. மெத்திலீன் உறுப்பில் நான்முகியின் நான்கு மூலைகளுள் இரண்டு இரு ஹைட்ரஜன் மண்டலங்களுடனும் மற்றவை இரண்டு ஒற்றை எலெக்ட்ரான்களுடனுன் உள்ளன. கோல்ஷ் ( Koelseh's) இயங்கு உறுப்பு, சிசிபாபின் ஹைட்ரோகார்பன் (Chichibabin's hydrocarbon) ஆகியவற்றின் வடிவமைப்புகள் நன்கு அறியப் பட்டுள்ளன. பயன்கள். சூழ்வெளியிலுள்ள ஓசோன் படலத் துடன் பூச்சிமருத்து தெளிப்பான்களிலுள்ள ஃபுளுரோ கார்பன் வினையுற்று ஓசோன் படலத்தை மெலி தாக்குகிறது. இவ்வினையை நன்கு அறிய இயங்கு உறுப்பு இயக்கத்தைப் பற்றிய அறிவு உதவுகின்றது. எரிதல் வினை (combustion), பெட்ரோலைத் தானியங்கி ஊர்திகளில் பயன்படுத்துகையில் நிகழும் பிளத்தல் வினை (cracking) சில சாயப் பொருள் களின் வண்ணத்தின் அடிப்படை ஆகியன இயங்கு உறுப்புகளுடன் பிணைந்துள்ளன. மே. ரா. பாலசுப்ரமணியன் நூலோதி. சூரியநாராயணன் இரா., கரிமவேதி யியல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1974; Finar 1.L., Organic Chemistry, Vol, 1 Sixth Edition, ELBS, London, 1973; King, Christine M., A History of Free Radical Chemistry, Chem. Tech., November 1985; Ferguson, Lloyd N., Text Book of Organic Chemistry, Second Edition. Van Nostrand, New York, 1965. இயங்கு சமநிலை மாற்றியம் சில சில கரிமச் சேர்மங்கள், வினைகளில் ஈடுபடும் பொழுது பல்வேறு அமைப்புகளுடன் செயல்படு கின்றன என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டறியப்பட்டது. அலை வினைப்பொருள்களுடன் வினை புரியும்பொழுது ஓர் அமைப்பைப் பெற்றிருப்பது போலவும், வேறு சில வினைப்பொருள்களுடன் வினைப்படும்பொழுது மற்றொரு அமைப்பைப் பெற்றிருப்பது போலவும் செயல்படுகின்றன. எடுத்துக்காட்டாக, எத்தில் அசெட்டோ அசெட்டேட் (CeHoOs) என்னும் எஸ்ட்டர் சில வினைகளில் 'கீட்டோ' (keto) அமைப் பையும் (I), மற்றும் சில வினைகளில் ஈனால் (enol) அமைப்பையும் (II) கொண்டிருப்பது போலச் செயல் படுகிறது. ('ஈன்' ene என்ற விகுதியால் குறிக்கப் படும் இரட்டைப் பிணைப்பினைக் கொண்ட ஆல்க ஹால் 'ஈனால்' எனப்படும்). 0 Π HỌC−C−CH-COOC,HC (I) OH CH—C=CH-COOC,H, (II) இவ்வாறாக ஒரு கரிமச் சேர்மம் இரு வகையான வினைப்படு தொகுதிகளுக்குரிய இயல்புகளைக் கொண்டு ஒரே பொருளாகச் செயல்படுவது இயங்கு சமநிலை மாற்றியம் (Tautomerism) என அழைக்கப் படுகிறது. இயங்கு சமநிலையில் பங்குபெறும் மாற்றுருக்கள் (Isomers) ஒவ்வொன்றும் இயங்கு சமநிலை வடிவம் (Tautomer) எனப்படும். இத்தகைய மாற்றுகள் சாதாரணச் சூழ்நிலைகளில், ஒன்று மற்றொன்றாகத் தாமாகவே மாறக்கூடிய இயல்பைப் பெற்றுள்ளன. இம்மாற்றம் விரைவாக நிகழ்வதாலும் மீளும் தன்மை உடையதாக இருப்பதாலும் இயங்கு சம நிலைக் கலவையிலிருந்து மாற்றுகளைத் தனித்தனி யாகப் பிரித்தெடுப்பது கடினம். ஒவ்வொரு மாற்று வடிவத்திற்கும் அக ஆற்றல் internal energy) உண்டு. ஒரு மாற்று மற்றொரு மாற்று வடிவமாக மாறும்பொழுது ஆற்றல் மாற் றம் ஏற்பட வேண்டும். பெரும்பாலான இயங்கு சமநிலைகளில் இந்த ஆற்றல் மாற்றம் குறைவாகவே இருப்பதால் சேர்மத்தின் மாற்று வடிவங்கள் ஒன்று மற்றொன்றாக விரைவிலேயே மாறிக் கொள் கின்றன. இச்சேர்மம் மற்றொரு சேர்மத்துடன் வினைபுரிவதை விட விரைவாகவே மாற்று வடி வங்கள் ஒன்று மற்றொன்றாகத் தாமாகவே மாறி விடும் இயல்புடையவை. எனவே இவற்றைப் பிரித் தெடுப்பது எளிதன்று. பிரித்தெடுத்தாலும் இவை விரைவிலேயே சமநிலை அடைந்து இரு மாற்று வடி வங்களையும் உண்டாக்கும் இயல்பைப் பெறு கின்றன. இந்த இயங்கு சமநிலை மாற்றம் நீர்ம நிலையில் (கரைசல் நிலையில்) அல்லது வளிம நிலை யில்தான் நிகழ்கிறது. இயங்கு சமநிலை மாற்றத்தில் சேர்மத்தினுடைய மூலக்கூறின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு ஓர் அணுவோ அணுக்கோவையோ பெயர்ச்சி அடைகின்றது. பெரும்பாலான இயங்கு சமநிலை அமைப்புகளில் பெயர்ச்சி அடைவது புரோட்டான்