பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 இயங்கு சமநிலை மாற்றியம்‌

344 இயங்கு சமநிலை மாற்றியம் அசெட்டோ அசெட்டிக் எஸ்ட்டரின் ஈதர் அல்லது ஹெக்சேன் கரைசலை மிகக் குறைந்தவெப்பநிலை (-80°C, -112^F) வரை குளிரச் செய்யும்போது கீட் டோ வடிவம் தூய நிலையில் படிகங்களாகக்கிடைக் கிறது. சோடியம் அசெட்டோ அசெட்டேட்டை ஹெக்சேனில் தாங்கல் கரைசலாக (buffer solution) எடுத்துக் கொண்டு -80°C இல் அமிலத்துடன் வினைப்படுத்தினால் ஈனால் வடிவம் தூய நிலையில் கிடைக்கிறது. இவ்விரு வடிவங்களையும் அறை வெப்பநிலையில் படிகக்கல் பாத்திரத்தில் வைத்தி ருப்பின் பல வாரங்கள் வரை பாதுகாக்க இயலும் எனத் தெரிய வந்துள்ளது. அமிலம் அல்லது காரம் சிறிதளவில் இருப்பது கூட ஒரு வடிவம் மற் றொன்றாக மாறும் வினையை ஊக்குவிக்கலாம். கண்ணாடியின் மேற்பரப்பிலுள்ள நுண்காரப் பண்பும் இம்மாற்றத்தைத் தூண்டப் போதுமான தாகும். எனவே படிகக்கல்லால் ஆன கருவிகளைப் பயன்படுத்திக் காய்ச்சி வடித்தல் மூலம் இவ்விரு வடிவங்களையும் தூய நிலையில் பிரித்தெடுக்கலாம். ஈனால் வடிவம் கீட்டோ வடிவத்தை விடச் சற்று எளிதில் ஆவியாகும் தன்மை உடையது. சாதாரண வெப்பநிலையில் அசெட்டோ அசெட்டிக் எஸ்ட் டரின் சமநிலைக் கலவையில் நூற்றுக்கு 93 பங்கு கீட்டோ வடிவமும் 7 பங்கு ஈனால் வடிவமும் உள்ளன. ஈனால் வடி அசெட்டோன். இது கீட்டோ-ஈனால் இயங்கு கொண்டுள்ள மற்றொரு சமநிலை அமைப்பைக் சேர்மமாகும். முற்றிலும் நீர் அகற்றப்பட்ட நிலையில் அசெட்டோன் சோடியத்துடன் வினைபுரிந்து ஹைட் ரஜனைத் தருகிறது. எனவே இது வத்தில் இருப்பது புலனாகிறது. இச்சேர்மம் ஃபினைல் ஹைட்ரசீன் செமிகார்பசைடு போன்ற வற்றுடன் வினைபுரிவதிலிருந்து இதன் மூலக்கூறில் கீட்டோ தொகுதி இருப்பதும் தெரிய வருகிறது. எனவே அசெட்டோன் இரு இயங்கு சமநிலை வடி வங்களைக் கொண்டிருப்பது தெளிவாகிறது. 0 Π OH 1 H,C-C-CH, = H,C-C=CH? கீட்டோ வடிவம் ஈனால் வடிவம் அசெட்டால்டிஹைடு. இச்சேர்மத்திலும் கீட்டோ ஈனால் இயங்கு சமநிலை வடிவங்கள் உள்ளன. 0 H₁C-C-H OH H.C=C-H கீட்டோ வடிவம் ஈனால் வடிவம் நைட்ரோ-ஐசோநைட்ரசோ;இயங்கு சமநிலை. அலிஃ பாட்டிக் ஓரிணைய ஈரிணைய நைட்ரோ சேர்மங்கள் புரோட்டோட்ராப்பி இயங்கு சமநிலையைக் கொண் டுள்ளன. இவற்றில் புரோட்டான் கரியணுவி ஆக்ஸிஜன் லிருந்து மூன்றாவது இடத்திலுள்ள அணுவிற்குப் பெயர்ந்து செல்வதால் இவை மும்மை புரோட்டோட்ராப்பி எனப்படும். R-CH,-N நைட்ரோ வடிவம் OH R-CH=N 0 ஐசோநைட்ரசோ (அல்லது அசிநைட்ரோ) வடிவம் (R என்பது அல்க்கைல் தொகுதியைக் குறிக்கும்) அலிஃபாட்டிக் நைட்ரோ சேர்மங்கள் சிறிது அமிலத் தன்மையைப் பெற்றுள்ளன. ஆனால் இவற்றைச் சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைப்படுத்தினால் உடனடியாகச் சோடியம் பெறுதிகள் கிடைப்ப தில்லை; சிறிது காலம் கழிந்த பின்னரே உண்டா கின்றன. பெறப்பட்ட உப்புக்கரைசலை ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் நடுநிலையாக்கினால் சிறிது அமிலத்தன்மையுடைய விளைபொருள் உண்டாகிறது. ஆனால் சிறிது நேரத்தில் இது தானாகவே நடு நிலைத் தன்மையைப் பெற்று விடுகிறது. எனவே நைட்ரோ சேர்மங்கள் அமிலத்தன்மை, நடுநிலைப் பண்பு ஆகியவற்றைப் பெற்றுள்ள இரு இயங்கு சமநிலை வடிவங்களைக் கொண்டுள்ளன என்பது தெளிவாகிறது. அமிடோ-இமிடோ இயங்கு சமநிலை. அமில் அமைடுகள் அமிடோ - இமிடோல் (amido imidol) இயங்கு சமநிலை வடிவங்களைக் கொண்டுள்ளன. 0 11 R-C-NHR' அமிடோ அமைப்பு OH R-C=NR' இமிடோ (இமி னோ) அமைப்பு R.R' என்பன அல்க்கைல் தொகுதிகளைக் குறிப் பனவாகும். அமிடோ வடிவத்திலுள்ள நைட்ரஜன் அணுவிலிருந்து மூன்றாவதாக உள்ள ஆக்சிஜன் அணுவிற்குப் புரோட்டான் பெயர்ச்சியடைந்து இமி டோ வடிவம் உண்டாவதால் இது ஒரு மும்மைப் புரோட்டோட்ராப்பி ஆகும். இவ்வகைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, யூரியா (கார்பமைடு) அமைந் துள்ளது. யூரியாவின் சில வினைகளிலிருந்து அது இரு அமைப்பைப் பெற்றுள்ளது என்பது தெளிவா கிறது. ஆனால் நைட்ரிக் அமிலம் போன்ற கனிம அமிலங்களுடன் யூரியா நிலையான கூட்டுச் சேர்மங் களைத் போன்ற தருகிறது. இது வினைகளை