இயங்கு நிலை நிறுத்தல் 351
அசையும் நிலையிலுள்ள ஒரு பொருளை அசையா நிலைக்குக் கொண்டு வர உதவும் எதிர் விசை அல்லது அதற்கான சாதனம், நிறுத்தம் எனப்படும். நிறுத்துவதற்கான எதிர் விசையை உராய்வு முறை, மின் முறை என்னும் இரு வகையில் உண்டாக்கு ன்றனர். கின் உராய்வு முறை நிறுத்தம். இம்முறையில் நிறுத்தக் கட்டைகள் (brake shoes) அல்லது நிறுத்தத் தட்டுகள் (brake dises) பயன்படுத்தப்படுகின்றன. ஒரு தளம் மற்றொரு தளத்தின் மீது நகரும் போது உராய்வின் காரணமாக எதிர்விசை தோன்றுகிறது. இவ்விசை யைப் பெருக்க அசையும் தளத்தின் மீது அசையாத தளம் அழுத்திப் பிடிக்க வேண்டும். நிறுத்தக் கட்டைகள் பயன்படுத்தப்படும்போது இக்கட்டைகள் சக்கரத்தின் விளிம்பில் நன்றாக அழுத்திப் பிடிக் கின்றன. தட்டுகள் பயன்படுத்தப்படும்போது சக்க ரத்தின் விளிம்பிற்குப் பதிலாக இத்தகடுகளின் மீது நிறுத்தக் கட்டைகள் அழுத்தமாக உராய்கின்றன. இந்த உராய்வினால் ஏற்படும் எதிர்விசை, வண்டியை நிறுத்தப் பயன்படுகிறது. வண்டியின் அசைவாற்றல் (kinetic energy) உராய்வால் வெப்ப ஆற்றலாக மாறி வீணாகின்றது. இம்முறை சிறு எந்திரங் களுக்கும், மிதவேக எந்திரங்களுக்கும் பொருத்த மானது. இம்முறையில் கட்டைகள். சக்கர விளிம்புகள் தட்டுகள் ஆகியவை தேய்வடைவதுடன் அவற்றிற் கிடையே உள்ள பல இணைப்புகளும் தேய்வுறு கின்றன. ஆகையால் இந்த இணைப்புகளை அடிக்கடி,சரி செய்வதுடன் கட்டைகளையும் மாற்ற வேண்டி வரும். கட்டையை அழுத்தமாகப் பிடிக்கக் காற்றழுத்தம் அல்லது (hydraulic pressure) நீர் அழுத்தம் பயன்படுகிறது. இதனால் புது அமைப்புகள் தேவைப்படுவதுடன். சிறு துவாரங்கள் அல்லது ஒழுக்கு (leak)காரணமாகத்தடை குறைந்து நிறுத்தம் வேலை செய்யாது. இதனால் பல விபத்துகள் நேர் கின்றன. திடீரென ஒழுக்கு ஏற்படக் கூடுமாதலால் ஆபத்தில்லாமல் செயல்படுவதற்கான அமைப்புகளில் இம்முறையைப் பயன்படுத்துதல் ஏற்றதாகாது. மின்முறை நிறுத்தம். இம்முறையில் உராய்வு இல்லாததால் தேய்வு இல்லை. மேலும் மிகுந்த அளவு எதிர் விசையை எளிதில் ஏற்படுத்த முடியுமாதலால் பெரும் சாதனங்களில் இம்முறையைப் பயன்படுத் தலாம். தவிர ஒரு வகை மின் முறையில் வண்டியின் ஒட்ட ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றிப் பயனுள்ள முறையில் பயன்படுத்தலாம். ஆகவே தற்போது இம்முறை பற்றி மிகுந்த அளவில் ஆய்வுகள் நடத்தப் படுகின்றன. முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது. மேலும் மின் முறையில் நிறுத்தம் சீரான வகையிலும், எந்திர அதிர்ச்சி இன்றியும் செயல்படுகின்றது. இயங்கு நிலை நிறுத்தல் 35/ மின் முறை நிறுத்தத்தில் மூன்று வித அமைப் புகள் உள்ளன. மின் திசை மாற்று முறை. மின்மோட்டார் சுழலும் திசை, மின் ஓட்டத் திசையைப் பொறுத்து அமையும். மின் ஓட்டத் திசையை மாற்றுவதால் மின் மோட்டார் சுற்றும் திசையும் மாறும். மின் மோட்டார், வண்டி ஓடும் திசைக்கேற்ப சுழலும், வண்டியை நிறுத்த முதலில் மின் இணைப்பு, துண்டிக் கப்படுகிறது. இதற்குப் பிறகு மின் ஓட்டத் திசையை மாற்றினால் மோட்டார் எதிர்த் திசையில் சுழல ஆரம்பிக்கும். இதனால் வண்டியின் ஓட்டம் எளிதில் தடைப்படும். மோட்டார் இவ்வாறு சுழலத் தொடங் கும்போது உடனே மின் இணைப்புத் துண்டிக்கப்பட வேண்டும். துண்டிக்கப்படாவிடில் வண்டி எதிர்த திசையில் ஓட ஆரம்பிக்க வாய்ப்பு உண்டு. மறுமின் உற்பத்தி முறை. இம்முறையில் மின் சுழற்சிப் பொறி (motor) மின் ஆக்கியாகச் (generator) செயல்படுகின்றது. இதில் வண்டியின் அசைவு ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்பட்டு மின் வழங்கும் அமைப்பிற்கே திரும்பச் செலுத்தப்படு கின்றது. இம்முறையில் ஆற்றல் வீணாவது தடுக்கப் படுகிறது. ஆகவே இம்முறை பற்றியும் ஆய்வுகள் நடப்பதுடன் மேன் மேலும் சிறப்பான அமைப்புகள் உருவாகி வருகின்றன. இயங்கு நிலை நிறுத்தம். இயங்கு நிலையில் உள்ள ஒரு மின் சுழல் பொறி மின்னாற்றல் துண் டிக்கப்பட்ட நிலையிலும், அசையா நிலையை அடை யாமல் சிறிது நேரத்திற்குச் சுழன்று கொண்டு இருக் கும். இந்த இடைப்பட்ட நேரத்தில் மின் சுழற்பொறி மின் ஆக்கியாகச் செயல்படுகின்றது. இவ்வாறு உற் பத்தி செய்யப்படும் மின்சக்தி சரியான திசையில் மின் சுழற் பொறிக்கே திருப்பப்படுகிறது. ஆகை யால் அப்பொறியில் எதிர் சுழற்சி தூண்டப்பட்டு எந்திரம் விரைவில் நிறுத்தப்படுகிறது. இம்முறை மின் தொடர் வண்டி, மின் கமை போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றது. தூக்கிகள் விளக்கம். நிறுத்தப்பட வேண்டிய ஒரு மின் சுழற்பொறி (motor) பளுவுடன் இணைக்கப்பட்டு யங்கிக் கொண்டிருக்கும் போது ஆர்மெச்சூருக்கு மின்னாற்றல் துண்டிக்கப்படுகிறது. இதனால் எந்திர இயக்கம் (mechanical load) மின் சுழற் பொறியின் ஆர்மெச்சூரைச் சுழல்விக்கின்றது. அதனால் ஆர்மெச் சூரில் மின் தூண்டல் ஏற்பட்டு அம்மின்னோட்டம் ஒரு மின் தடைச்சுற்று வழியே செலுத்தப்படுகின்றது. இம்மின்னோட்டம் எந்திரத்தில் எதிரான சுழற்சிச் திசையைத் தோற்றுவிக்கின்றது. ஆகவே விரைவில் எந்திரம் அசையா நிலையை அடைகின்றது. இனி வெவ்வேறு வகையான மின் சுழற் பொறிகளில் இயங்கு நிலை நிறுத்தம் எவ்வாறு செயல்படுத்தப் படுகின்றது என்பதைக் காணலாம்.