354 இயல்தனிம ஈயம்
354 இயல்தனிம ஈயம் இயங்க மாட்டா. இதில் இயங்கும் பகுதிகளின் வெப்பநிலை கணிசமாக மாறும். நுட்பமாக இயங்கும் பொருத்து தன் பகுதிகளைக் குறைந்த விரைவிலும், குறைந்த அச்சுத்தண்டு அழுத்தத்திலும் தடையின்றி இயங்கவிடும். ஆனால் இந்நிலை வெப்பநிலை சற்றே மாறும் வரை மட்டும்தான் பொருந்தும். நெருக்க தடையின்றி இயங்கும் மாக, இடைநிலையாக, பொருத்துக்கள் உயர் பரப்பு விரைவுகளுக்கும் அச்சுத் தண்டின் உயர் அழுத்தங்களுக்கும், வெப்பநிலை மாற்றங்களுக்கும் பொருத்தமானவை. தளர் (loose) இயங்கும் பொருத்துகள் தண் உருட்டல் (cold rolling) அச்சுத் தண்டுகளுக்கும் குழாய்களுக்கும் பொருத்தமானவை. இயல் எண்கள் காண்க, எண்கள். இயல்தனிம இரும்பு படிக நா. ரமேஷ் இரும்பு ஓர் இயல் தனிமக் கனிமம். வழக்கமாக இயற்கையில் திண்மையான நிலையிலும், அரிதாகப் காணப்படுகிறது. வகைகளிலும் இரும்பு செஞ்சமச் சதுரப் படிகத் தொகுதியில் படிகமாகிறது. இதன் நிறம் எஃகுப் பழுப்பு முதல் இரும்புக் கருமை வரை கொண்டது; காந்தத்தால் எளிதாகக் கவரப்படக் மிளிர்வைக் கூடியது; உலோக கொண்டது. இதன் கடினத் தன்மை 4 முதல் 5 வரையிலும், அடர்த்தி 7.3 முதல் 7.8 வரையிலும் இருக்கும். பற்கள் போன்ற கூர்மையான முறிவை கொண்டது. யுடையது. தகடாகக்கூடிய தன்மை தெளிவான செவ்விணை வடிவப் பக்கக் (100) கனிமப் பிளவு கொண்டது, மேலும் கூம்பு பட்டக (I11), பட்டக (110) வகைப் பக்கங்களுக்கு இணை யாக அமைந்த தாள்படலப்பிளவு கொண்டது. ஒளியியலாக, இக்கனிமம் செஞ்சமச் சதுரப் படிகத் தொகுதியில் படிகமாகியுள்ளதால் இதன் ஒளியியல் பண்புகளைக் கண்டறிய இயலாது. வகைகள். நிலக்கோள இரும்பு (Terrestrial iron), திண்மையான நிலையில் அரிதாக மிகப் பெரும் அளவிலும்,சிறு துகள் நிலையில் பாசால்ட்டில் பொதிந்தும் காணப்படுகிறது. இவ்வகை இரும்பில் I அல்லது 2 விழுக்காடு நிக்கல் (Ni) கலந்து ஊடுருவிக் காணப்படும். ஒரு வகை உலோக நிக்கல் இரும்பை nickeli ferrous metallic Iron-Fe Ni ) ஆவூரைட்டு (awaruite) 67607 அழைப்பர். மேலும் இரும்பு. காசிடரைட்டு (cassiterite), குரோமைட்டு (chromite) முதலிய தனிமங்களுடன் சேர்ந்து காணப்படுகிறது. இயல் தனிம இரும்பு பரவலாகப் பசால்ட்டுப் பாறை களில் காணப்படுகிறது. விண்கல் இரும்பு. விண் வீழ் கற்களிலும் (meteori- tes) இயல் தனிம இரும்பு கிடைக்கிறது. சில வேளை களில் விண்வீழ் கல் முழுதும் இரும்பாகவே இருக்கும். அவற்றை இரும்பு விண்கற்கள் இரும்பு விண்கற்கள் (iron meteorites) என அழைப்பர். இவ்விண் வீழ் கற்களில் காணப் படும் இரும்பில் 5 முதல் 10 விழுக்காடு வரை நிக்கல் காணப்படும். மேலும் கோபால்ட்டு (cobalt), செம்பு (copper), குரோமியம் (chromium) ஆகிய வையும் கலந்து காணப்படும். கோஹினைட்டு (cohenite) என்பது (Fe NiCo),C என்ற உட்கூறைக் கொண்ட டது. . சு. ச. நூலோதி. Ford. W. E., Dana's Text book of Mineralogy, Fourth Edition, Wiley Eastern Limited, New Delhi, 1985: Winchell. A. N., Winchell. H., Elements of Optical Mineralogy, Fourth Edition, Wiley Eastern Private Limited, New Delhi, 1958. இயல் தனிம ஈயம் ஈயம் (lead) என்பது ஓர் இயல் தனிமக் கனிமம் (native element) இக்கனிமம் இயற்கையில் அரிதாகக் கிடைக்கிறது. இருப்பினும் இது செஞ்சமச் சதுரப் படிகத் தொகுதியில் (isometric) படிகமாகியுள்ளது. படிகங்கள் அரிதாக உள்ளன. இவை முகப்பு மையப் பருச்சதுர அணிக்கோப்பு (face centered cubic lattice) உடையவை, வழக்கமாக மெல்லிய தகடுகளாகவும் சிறிய கோளப் பொதிகளாகவும் (globular masses ) காணப்படுகின்றன. எளிதாகக் கம்பிகளாக நீட்டக் கூடிய தகடாக மாற்றக்கூடியவை. கடினத்தன்மை 1.5 ஆகவும், அடர்த்தி 11.5 ஆகவும் (சிறப்புப் பண்பு) பளிங்கு மிளிர்வு கொண்டதாகவும் காணப் படும். இது ஈயப்பழுப்பு நிறமுடையது. ஒளியியலாக ஒளி ஊடுருவாக் கனிமம் ஆகும். தன் வேதியியல் உட்கூறு, தூய்மையான ஈயம் சில வேளைகளில் சிறிதளவு வெள்ளி ஆண்ட்டிமனி ஆகியவற்றை உட்கூறில் கொண்டுள்ளது. ஊதுகுழல் ஆய்வு முறையில் இது ஊது குழலின் வெப்பத்தில் எளிதாக உருகும். கரிக்குழி ஆய்வு முறையில் கரிக்குழி ஓரங்களில் மஞ்சள் அல்லது