பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 இயல்தனிமக்‌ கனிமங்கள்‌

358 இயல்தனிமக் கனிமங்கள் படும். உள்ளடக்கி உள்ள வரிக்கால் (veins) உரு மாற்றத் தணற்பாறைகளிலும், உமிழ்வுப் பாறைகளி லும், சிலசமயங்களில் வண்டல் படிவுப்பாறைகளிலும் இது ஊடுருவிக் காணப்படும். இக கனிமம் பல்வேறு உலோக சல்பைடுகளில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு ஆங்காங்கே சிதறிப்பரவிக் காணப்படும். இவை சல்ஃபைடுகள், சியோலைட்டுகள்(zeolites), கால்சைட்டு (calcite), பாரைட்டு (barite), ஃபுளூ (fluorite) ரைட்டு குவார்ட்சு கனிமங்களோடு தொடர்புற்று நார்வேயில் உள்ள கோங்ஸ்பெர்க் (Kongsbarg) போன்ற இடத்திலும், ஆர்சனைடுகள் (arsonides) கோபால்டு, நிக்கல், சல்பைடுகள் ஏனைய வெள்ளி கனிமங்களுடனும் கலந்து கனடாவி லுள்ள ஒன்டாரியோ கிரேட்டு பியர் ஏரி (Great Bear Lake) ஆகிய இடங்களிலும் இயல் தனிமக் கனிமத் தோடு தொடர்புற்று அமெரிக்காவிலுள்ள சிவினா முந்நீரகத்திலும் (Keweenaw Peninsula) சிலியிலுள்ள கிடைக்கின்றன. அட்டகாமா, டெக்ஸிகோவிலும் தற்காலத்தில் தங்கம் செறிவு படுத்தும் முறைகளி லிருந்து கிடைக்கும் துணைப்பொருளாகவும், ஈயம் துத்தநாகம் பிரித்தெடுக்கும் பொழுது கிடைக்கும் துணைப்பொருளாகவும் இந்தியாவிலுள்ள செவர் (zewar) சுரங்கப் பகுதியில் கிடைக்கிறது. புலியில் கிடைக்கும் உலோகங்களில் வெள்ளி ஒரு தலைசிறந்த மின் கடத்தியாக இருப்பதால் மின் தொழிலகங்களில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. புகைப்படத் தொழிற்சாலைகளிலும், குளிர்சாதனத் தொழிற் சாலைகளிலும் நாணயங்களாகவும் ஆபரணங்களாக வும், உபகரணங்களாகவும் மிகுதியாகப் பயன்படுத் தப்பட்டு வருகிறது. செம்பு. இது கன சதுரப் படிகத் தொகுதியின் கீழ் அறு நான்முக வடிவப் பக்கங்களைக் கொண்ட படிகங்களாகக் காணப்படும். தெளிவான படிகங் களாகக் கிடைப்பது அரிது. இது ஒழுங்கற்ற முறுக் கேறிய கயிறு வடிவிலும்,நார் போன்றும், மரக் கிளை போன்று படர்ந்தும் காணப்படும். மணலில் இருந் தால் திண்மக் கனிமமாகக் காணப்படும். தட்டை யாகவும், நீண்டும், பட்டாணி வடிவைப்போன்ற உருவம் பெற்றும் எண்முக வடிவ இரட்டுறல் தளத்தைக் கொண்ட இயல்புத் தனிமக் கனிமமாகக் கிடைக்கிறது. சில வேளைகளில் குப்ரைட்டு, அசு ரைட்டு, சால்சோபைரைட்டு, கால்சைட்டு, அரசோ னைட்டு போன்ற கனிமத் தாதுக்களின் வடிவு பெற்றுக் காணப்படக்கூடும். அடர்த்தி எண் 8.8 பண்புகள் முதல் 8.9 வரையும், மற்ற தங்கம் வெள்ளி போன்றும் காணப்படும். இது இரும்பு. வெள்ளி, பிஸ்மத், தகரம், ஈயம், ஆண்டிமெனி போன்ற உலோகங்களுடன் சிறிதளவு கலந்து காணப்படும். இயல்பு தனிமக்கனிமமாக இது பின் உரு நிலையில்தான் உருவெடுக்கிறது. இந்நிலையில் உலகில் பல இடங்களில் இது காணப்பட்டாலும் வணிக நோக்குடன் கிடைக்கக்கூடிய செம்புச் செறிவு கொண்ட இடங்கள் மிகக் குறைவு. செம்பு 7000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபரணங்களாகவும் கருவிகளாகவும், பாத்திரங்களாகவும் பயன்படுத்தப் பட்டு வந்து இருக்கின்றது. இது ஒரு நல்ல மின் கடத்தியாக இருப்பதால் மின் தொழிலகங்களில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பல விதமான உலோகக் கலவைகளுக்குப் பயன்படுத் தப்படுகிறது. இக்கனிமம் கார உமிழ்வுப்பாறைகளி லிருந்து மிகுதியான செம்பு தாங்கிவரும் கரைசல்களு டன் இரும்புக் கனிமங்கள் எதிர்விளைவுற்று இயல்பு மாறுபடும்போது அமெரிக் உருவெடுக்கின்றது. காவிலுள்ள கீவினா முந்நீரகத்தில் இத்தகைய நிலை எபிடோட் யில் சால்கோசைட்டு, போர்னைட்டு, கால்சைட்டு போன்ற கனிமங்களுடன் தொடர்புற்றுக் காணப்படுகின்றது. செம்பு நிறைந்த கரைசல்கள் மணற்படிவுப் பாறைகள், உருள் திரளைப்பாறைகள், கண்ணடை எரிக்குழம்புப் பாறைகளில் காணப்படும் குழிகளிலும் இடைவெளிகளிலும் செம்பைப் படியச் செய்வதன் மூலம் இவை கிடைக்கின்றன. இதுபோல் கனிமச் செறிவு ஒலிவியாவிலும், மெக்ஸிகோவிலுள்ள சொனேரா பகுதியிலும் காணப்படுகின்றது. இக்கனி மம் படிவுப்பாறைகளின் படுகைகளிலும் (beads) வரிக் சால்கோபைரைட்டு, கால்களிலும் (veins), கோசைட்டு, மாலகைட், சால் இக் அசூரைட்டு போன்ற கனிமங்களுடன் தொடர்புற்றுக் காணப்படுகிறது. இதுபோன்ற கனிமங்கள் அமெரிக்காவிலுள்ள அரி சோனா பகுதியிலும், புதிய மெக்ஸிக்கோவிலுள்ள ஜார்ஜ்டவுன் பகுதியிலும் கிடைக்கின்றன. கனிமம் மணற்படிவுப்பாறைகள், சுண்ணாம்புப் பாறைகள், களிமண் பாறைகள் இவற்றில் இடப் பெயர்ச்சி செய்வதன் காரணமாகப் படிகமாகிக் காணப்படுகின்றது. ரஷ்யாவிலுள்ள டர்னிஷ்க் ஆஸ்திரேலியாவிலுள்ள வல்லாறு என்ற பகுதியிலும் கிடைக்கின்றது. இந்தியாவிலுள்ள சேத்ரி என்ற இடத்தில் அனற்பாறைகளுடன் தொடர்புற்றுக் காணப்படுகின்றது. இத்தாலியிலுள்ள மான்டே காட்னி என்ற இடத்தில் கார அனற்பாறைகளுடன் தொடர்புற்றுக் கிடைக்கின்றது. வடிவ பாதரசம். கசட்டுக் கனிமங்களில் கோள நீர்த்துகள்களாக இருப்பதைக் காணலாம். இது - 401 செகில் திடப்பொருளாகக் காணப்படும். எக்ஸ்கதிர் மூலமாக இதன் அணுக்கட்டமைப்பைப் பார்க்கும்போது சாய்சதுரக் கட்டமைப்பாக இருப் பதைக் காணலாம். இதன் அடர்த்தி எண் 13.6. இத னுடைய மிளிர்வு பளபளப்பான உலோக மிளிர் வாகும். இது தகரம் போன்ற வெண்மை நிறத்தைக் கொண்டிருக்கும். இது ஒளி ஊடுருவாத் தன்மை பெற்றது. சில வேளைகளில் இது வெள்ளியுடன்