பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்தனிமக்‌ கனிமங்கள்‌ 359

சிறிதளவு கலந்து காணப்படும். இது இயல்பு தனிமக் கனிமமாகக் கிடைப்பது அரிது. அவ்வாறு கிடைக்கும்பொழுது பின்னிலை உருமுறையில் பெரும் பாலும் சின்னபார் என்று அழைக்கப்படும் இத னுடைய தாதுடன் நெருங்கித் தொடர்புற்றுக் காணப் படும். இது பொதுவாக ஆங்காங்கு பாதரசத் துளி களாக இருக்கக்கூடும். ஆனால் பாதரசத்துக்கள்கள் சில வேளைகளில் தாதுப்பாறைகளில் இருக்கும் குழி களில் நிரம்பிக் காணப்படும். பழங்காலம்முதல் எல்லாவிதமான பாறைகளிலும், காலங்களிலும். இது எடுக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் பெரும்பகுதி எரிமலைப் பாறைகளோடும், குழம்புகளோடும் அதிக மாசுக் காணப்படுகிறது. வெப்பநீர் ஊற்று கள் இருக்குமிடங்களில் இயல்தனிமக்கனிமங் களாக அல்லது அதனுடைய தாதுவான சின்னபார் உருவில் காணப்படும். இது இத்தாலியிலுள்ள இட்ரியா, யூகோஸ்லோவியாவில் உள்ள ஆவலா (Avala) மலைப்பகுதியிலும், ஜெர்மனியில் உள்ள பவாரியா பகுதியிலும், ஸ்பெயினிலுள்ள அல்மாடான் என்ற இடத்திலும் கிடைக்கிறது. ஈயம். இது கன சதுரத் தொகுதியின் கீழ் படிக மாகிறது. ஏழு வடிவப் படிகங்களாகக் கிடைப்பது அரிது. பொதுவாக மெல்லிய தகடுகளாகவும் சிறிய கோள வடிவத்திண்மங்களாகவும் கிடைக்கின்றது. இது தகடுபோல் வளையக் கூடியது. கம்பியாக இழுக் கக் கூடிய பண்புபெற்றது. 1.5 என்ற கடினத்தன்மை யும், 11.4 என்ற அடர்த்தி எண்ணும் கொண்டது. உலோக மிளிர்வும், ஈயச்சாம்பல் நிறமும் கொண்டது. ஒளி ஊடுருவாத் தன்மையைக் கொண்டது. நீர்த்த நைட்ரிக் அமிலத்தில் கரையக்கூடியது. 330° ல் இளகும் தன்மையுடையது. கரியுடன் இளகும்பொழுது கரியைச் சுற்றி மஞ்சளிலிருந்து வெள்ளை வரையான ஆக்ஸைடுகளைக் கொடுக்கக்கூடியது. இயல்தனிமக் கனிமங்களாக இவை கிடைப்பது மிக அரிது. இதுவரை அவ்வாறு கிடைப்பதாகக் கூறப்பட்ட இடங்களும் கேள்விக்குரியவையாக உள்ளன. ஸ்வீடனிலுள்ள வெர்மலாண்டு, நோர்டுமார்க் என்ற இடங்களிலும், ரஷ்யாவிலுள்ள ஊரல் மலைத்தொடரிலும், மெக்சிக்கோவிலுள்ள ஜலப்பா என்ற இடத்திலும், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள நியுஜெர்சி, இடாகோ மாநிலங்களிலும் இவ்வாறு கிடைப்பதாகக் கூறப் படுகிறது. பாதரசக் கலவை. இது கன சதுரப்படிகத் தொகுதி யின் கீழ் படிகமாகிறது. பன்னிருமுக வடிவைப் பெற்றது. படிகங்கள் அடிக்கடி உருமாறிக் காணப் படும். தகடுபோன்ற திண்மப் பொருளாகவும், மணி கள் மீது படர்ந்துள்ள பூச்சாகவும், மணிகளினுள் பொதிந்தும் காணப்படலாம். பன்னிருமுகஅள விற்கு இணையான கனிமப்பாறைகளை அரிதாகக் காணலாம். ஒழுங்கற்ற அலகு முறைகளைப் பெற்றது. நொறுங்கக் கூடியதாகவும், வளையக்கூடிய இயல்தனிமக் கனிமங்கள் 359 தாகக் காணப்படும். 3-3.5 வரை கடினத்தன்மையைக் கொண்டும், 13.75 முதல் 14.1 வரை அடர்த்தி எண் கொண்டும், பளபளவென உலோக மிளிர்வுடனும், ஒளி ஊடுருவாத் தன்மையைக் கொண்டும் வெள்ளி ஒத்த வெண்மை உராய்வுத்துகள்களையும், நிறத் தைக் கொண்டும் இருக்கும். வெள்ளியும், பாதரச மும் பல விழுக்காடுகளில் கலந்து இணைந்து இருக் கும். சாதாரண பாதரசக்கலவையில் 26.4-35 வரை விழுக்காடு வெள்ளி இருக்கக்கூடும். அர்கூரைட்டு என்பதில் 86.6 வரை விழுக்காடு இருக்கக்கூடும். இவ் வகை சிலியிலுள்ள அரசிரோஸ், கொக்குபோ என்ற டங்களில் கிடைக்கிறது. நார்வேயிலுள்ள கொங்ஸ் பெர்க் என்ற இடத்தில் இதைவிட அதிகமான வெள்ளி யைக் கொண்ட (Agsr Hg) ஒரு கனிமம் கிடைக் கிறது. அதைக் கெரில்ஸ்பெர்கைட்டு என்று அழைக் கிறார்கள். இது கரியுடன் ஆவியாகப் போக எஞ்சிய வெள்ளியுடன் ஒருங்கிணைந்து ஒரு கோள வடிவைப் பெற்று இருக்கும். இது நைட்ரிக் அமிலத்தில் கரையும். காப்பர் தகட்டில் தேய்த்தால் வெள்ளி மிளிர்வைக கொடுக்கும். கனிமப்பாறைகளில் சிறிய மணிகளாகவோ, படிகங்களாகவோ பாதரசம், வெள்ளிக் கனிமங்கள் செரார்கிரைட்டு என்னும் கனிமத்துடன் அடிக்கடி தொடர்புற்றுக் காணப் படும். இவை ஜெர்மனியில் உள்ள பவாரியா பகுதி யிலும், செகோஸ்லோவியாவிலுள்ள இஸ்லானா, பொரிமியாவிலுள்ள பிரசின்னா என்ற பகுதியிலும் கிடைப்பனவாகக் கண்டுபிடித்துள்ளனர். தகரம். இது நீள் சதுர படிகத்தொகுதியின் கீழ்படிக் மாகிறது. பல இடங்களில் இயல்தனிமக்கனிமமாகக் கிடைப்பதாகக் கூறப்பட்டாலும் ஆஸ்திரேலியா விலுள்ள நியுசௌத்வேல்ஸ் மாநிலத்தில் உள்ள கிளாரன்ஸ் நதிப் படுகைகளில் கிடைப்பது மிக நம்பத் தகுந்ததாகும். இங்கு சாம்பல்நிற வெண்மை நிறத்தில் வட்டமணிகளாகக் குருந்தக்கல் காசிட்டரைட்டு, தங்கம், கிரிடோஸ்டைன், பிளாட்டினம் போன்ற கனிமங்களோடு கலந்து காணப்படுகிறது. பிளாட்டினம் - இரும்பு வகை. கனசதுரப் படிகத் தொகுதியின் கீழ் மணிகளாகவோ, தகடுகளாகவோ அரிது. கிடைக்கிறது. படிகங்களாகக் கிடைப்பது கனிமப்பிளவு கிடையாது. நார் போன்ற கனிம முறிவு கொண்டது. வளைக்கவும், கம்பியாக இழுக் கவும் முடியும். 4 முதல் 4.5 வரை கடினத்தனமை யும், உலோக மிளிர்வும், எஃகு வெண்மை நிறமும். உராய்வுத்துகள்களும் கொண்டிருக்கிறது. சில வேளை களில் காந்த ஈர்ப்புத் தன்மையும், துருவ முனைப்பும் (polarity) கொண்டவையாகக் காணப்படும். பிளாட்டினம், இரும்பு, இருடியம், ரோடியம், பலாடி யம், ஆஸ்மியம் போன்ற அரிய உலோகங்கள் இத்து டன் இணைந்து காணப்படும். இது வேதியியல் முறைப்படி தூய்மையாக இருக்குமேயானால் இதன் அடர்த்தி எண் 21 முதல் 22 வரை அல்லது 14 முதல்