370 இயல்பு
370 இயல்பு, அடிப்படை இயல்பு (property) எனப்படும். இது பொருள்கள் தமக்குள் இடைவினை (interaction) புரியும்போது வெளிப்படும். பொருளின் இயல்பினை எடுத்துக் கூறுகையில் நீட்சி (extension), மீட்சி (elasticity), வண்ணம் (colour), மின்கடத்துமை (electric conducti- vity) போன்றவற்றை இயல்புகளாகக் குறிப்பிடலாம். ஒன்றுக்கொன்று ஒவ்வோர் இயல்புமே சார்பு டையது. கட்டையுடன் ஒப்பிடும்போது ஒப்பிடும்போது இரும்பு வன்மையானது. ஆனால் வைரத்துடன் ஒப்பிடும் போது அதே இரும்பு மென்மையானது. இதில் ருந்து பொருள்களினுடைய இயல்பின் சார்புத் தன்மையை அறியலாம். ஒவ்வொரு பொருளும் பல் வேறு எண்ணற்ற இயல்புகளைப் பெற்றுள்ளது. இந்த அனைத்து இயல்புகளுடைய தொகுதியே தரம் (quality) எனப்படுகிறது. காண்க, அளவும் தரமும் (quantity & quality). . அனைத்துப் பொருள்களிலும் நிலவுகின்ற பொது வான இயல்பு, பொது இயல்பு அல்லது அடிப்படை இயல்பு எனப்படும். காண்க, இயல்பு, அடிப்படை. இது சிறப்புநிலை வாய்ந்ததாகவும் பொதுநிலை வாய்ந்ததாகவும், அடிப்படையான தாகவும் அடிப்படை யில்லாததாகவும், கட்டாயமானதாகவும் தற்செய் லானதாகவும், சாரமானதாகவும் சாரமற்றதாகவும், புறநிலையானதாகவும் அகநிலையானதாகவும், ஏற் புடையதாகவும் ஏற்பிலாததாகவும், பிரியக்கூடியதா கவும் பிரியாததாகவும், இயற்கையானதாகவும் செயற்கையானதாகவும் இருக்கும். முரணியக்கப் பொருள்முதல்வாதம் பொருள்களின் இயல்புகள் அனைத்தும் அவற்றுக்குள்ளேயே உள்ளியல்பாக அமைந்துள்ளன என உ றுதிப்படுத்துகிறது. அதாவது அவை புறநிலை ஆனவை என்று உறுதிப்படுத்து கிறது. பொருள்களின் ஒரு தனி இயல்பை ஆராய்வது அவற்றின் பண்புகளை இனங்கண்டு அறிதலின் (cognition) போக்கில் ஒரு கட்டமாக அமைகிறது. இயல்பு, அடிப்படை உலோ. செ. ஒரு பொருளின் அயல்படுத்த இயலாத (inalienable ) இயல்பு, அடிப்படையியல்பு எனப்படுகிறது. டேகார்ட்டே (Descartes) அடிப்படையியல்பு என் பதைப் பொருளின் அடிப்படையான பண்பு என வரையறுத்தார். இதன்மூலம் புறப்பொருளின் ஓர் அடிப்படையான இயல்பும் அதன் அளவுகளும் மனிதனின் அடிப்படையான சிந்தனை இயல்பு எனலாம். ஸ்பினோசா (Spinoza), அளவுகளும் சிந்தனையும் ஒரே பொருளின் இருவேறு அடிப்படை யியல்புகள் எனக் கருதினார். பதினெட்டாம் நூற்றாண்டுப் பிரெஞ்சுப் பொருள்முதல்வாதிகள் அளவுகளையும் இயக்கத்தையும் (motion) பொருளின் கொண்டனர். அடிப்படையியல்புகளாகக் அவர் களுள் சிலர் டிடெரா (Diderot), ரோபினே (Robinet ஆகியோர் சிந்தனையையும் பொருளின் அடிப்படை யியல்பாகச் சேர்த்துக் கொண்டனர், இது தற்கால அறிவியல் தத்துவ இயலில் (Philosophy of Science or Theory of Science) பெரிதும் பயன்படுகிறது. இயல்பு மாறுநிலை - உலோ. செ. ஒரு பொருள் தன் ஒருவகையான திரள் நிலையி லிருந்து (state of aggregation) மற்றொரு வகைத் திரள் நிலைக்கு மாறும் வெப்பநிலை, இயல்பு மாறு நிலை அல்லது திரிபு நிலை (transition point) எனப் படும். இது ஒரு பொதுவான வரையறை; இதில் உருகுநிலை, கொதிநிலை, பதங்கநிலை ஆகியன அடங்கும், ஆனால் நடைமுறையில் இப்பெயர், ஒரு நி லையான அழுத்தத்தில் (101.328 கிலோ பாஸ் கல்கள் = 1 வளிமண்டலம்) ஒரு திண்மம், தன் ஒரு வகைப் படிக வடிவிலிருந்து பிறிதொரு வகைக்கு மாறும் வெப்ப நிலையைக் குறிக்க மட்டுமே பயன் படுகிறது. மற்றொரு வகை இயல்பு மாறுநிலையும் உண்டு. படிப்படியான மாற்றத்தின் ஒட்டு மொத்தச் சேர்க்கையையும் இவ்வாறு குறிப்பிடலாம். எடுத்துக் காட்டாக இரும்பு அல்லது நிக்கல் 4 - புள்ளி அல்லது க்யூரி புள்ளியில் (Curie point) அயக்காந்தத் தன்மை (ferromagnetic property) இழத்தலைச் சொல்லலாம். இது ஒரு தனித்த இரண்டாம் வகை இயல்பு மாறு நிலை ஆகும். நீர்மம், வளிம நிலையாகத் திரிபடை யும் வெப்பநிலை, கொதிநிலை (boiling point) எனப் படும். தூய பொருள்களுக்கு இது ஓர் ஒற்றைப் புள்ளி, ஒரு நீர்மம் கொதிநிலையில் இருக்கும்போது (அதாவது அது கொதித்துக்கொண்டிருக்கும்போது) தரும் வெப்பத்தை ஏற்றுக் கொண்டிருப்பினும் வெப்பநிலை உயர்வதில்லை. அந்நீர்மம் முழுதும் ஆவியாகி முடியும் வரை அதன் வெப்ப நிலை மாறாமல் இருக்கும். இயல்பான கொதிநிலை என்பது. வெளிப்புறமிருந்து பெறப்படும் மொத்த அழுத்தமான ஒரு வளிமண்டல அழுத்தத்தில் ஒரு நீர்மத்தின் கொதிநிலையாகும், அப்போது,நீர்மத்தின் ஆவியழுத்தம் வளி மண்டல அழுத்தத்துக்குச் சமம். மேலும், செலுத்தப்படும் அழுத்தத்தைப் பொறுத்துக் கொதிநிலை உயர்கிறது. என்றாலும், இது முடிவின்றி நிகழ்வதில்லை; ஒரு குறிப்பிட்ட நிலையில் நீர்மம் முழுதுமே மறைந்து விடும். அதனை நிலைமாறு வெப்பநிலை (critical temperature) என்பர். மிகக் அதன்