376 இயல்பு வாய்ப்பு, வெப்ப
376 இயல்பு வாய்ப்பு, வெப்ப ds = CvdT T PAV + எனப் பெறலாம். இதில் மாறாப்பருமன் (constant volume) வெப்ப ஏற்புத் திறன் (heat capacity) ஈடு படுகிறது. ds, dV போன் றவை சரித்தன்மையுடைய (exact) வகைக் செழுக்கள். இவ்வாறே இயல்பு வளி மத்திற்கு (real gas ), (3) பெறலாம். 85 T 8P (SPP) v என்றும் . C' என்றும் 8T V T 8s &T T -= SV >T P என்றும் வெப்ப இயக்கவியலின் மூன்றாவது விதியின் படி, தனி (absolute) பூஜ்ய வெப்பநிலையில் குறை யற்ற படிகப் பொருள்களின் என்ட்ரொபி பூஜ்யமாகி விடுகிறது. இதன் உதவியுடன் பொருள்களின் தனி என்ட்ரொபியைக் கணக்கிட இயலும். மற்ற வெப்ப இயக்கப் பண்புகளைப் பொறுத்தவரை அவற்றின் மாற்றங்களை மட்டுமே கணக்கிட இயலும்போது என்ட்ரொபியைப் பொறுத்தவரை இக்கணக்கீடு மிகச் சிறப்புடையதாகிவிடுகிறது. இதற்கு எண்ட் ரொபி ஈடுபட்ட இரு சமன்பாடுகள் உதவுகின்றன. AS = =1 T T₁ CpdT T று என்ற சமன்பாடு இரு வெவ்வேறு வெப்பநிலைகளுக் கிடைப்பட்ட (T,, T,) என்ட்ரோபி மாற்றத்தை மாறா அழுத்த வெப்ப ஏற்புத் திறன் (Cp) கொண்டு கணக்கிடவும். AS = ΔΗ T என்பது அப்பொருளின் திரிபுத்தானத்தில் (transi- tion point) விளையும் என்ட்ரோபி மாற்றத்தை அதற்கியைந்த வினை வெப்பம் (heat of reaction ) கொண்டு கணிக்கவும் உதவுகின்றன. இப்படிக் கணக் கிடப்பட்ட என்ட்ரொபி மூன்றாம் விதி என்ட் ரொபி என அழைக்கப்படுகிறது. பல்வேறு பொருள் களுக்கு இவ்வாறு கணக்கிடப்பட்ட எண்ட்ரொபி மதிப்புகள் என்ட்ரொபி, ஒழுங்கின்மை அல்லது முறைகேட்டின் ஓர் அளவு என்ற அனுபவ வாயி லான உண்மையை நிலைநிறுத்துகிறது. எடுத்துக் காட்டாக வளிமங்களில் அணு அல்லது மூலக்கூறுகள் நிலையின்றி இங்குமங்கும் அலைவதால் அவற்றின் என்ட்ரோபி மிகுந்தும், வைரம் போன்ற ஒரு படிகத்தில் அணுக்கள் தமக்குரிய இடங்களில் சிறப் பான ஒழுங்குடன் அமைந்திருப்பதால் அவற்றின் என்ட்ரோபி மிகக் குறைந்தும் இருக்கக் காணலாம். மூன்றாம் விதி என்ட்ரொபியை, புள்ளிவிவர என்ட்ரொபியுடன் ஒப்பிடுவதுண்டு. அப்போது சில போலி ஒவ்வாமைகள் (apparent anamolies) புலனா கின்றன. இவற்றின் மூலம் நைட்ரிக் ஆக்சைடு (NO), பனிக்கட்டி (ice) போன்ற பொருள்கள் மிகு கீழ் வெப்பநிலையிலும் சில படிகக் குறைகள் (crystal defects) பெற்றிருப்பது தெரிய வருகின்றது. இப்புள்ளிவிவரக் கண்ணோட்டத்தில், S = k log w என்ற அடிப்படைச் சமன்பாடு போல்ட்ஸ்மன் மாறிலி (Boltzmon constant, k) அமைப்பின் நிகழ் தகவு (probability = w) ஆகிய இரண்டையும் எண்ட்ரொபியுடன் தொடர்புறுத்துகிறது. குறை யற்ற படிகத்தில் அணு அல்லது மூலக்கூறுகளின் ஒழுங்கமைப்பு ஒரே விதமாக இருப்பின், w=1. எனவே என்ட்ரொபி பூஜ்யம். மாறாக ஓர் அணு மட்டுமே சற்று இடம் மாறிவிடின் w> 1 ஆவதால் என்ட்ரோபி ஒரு நேர்குறி மதிப்பைப் பெற்றுவிடுகிறது. புள்ளி விவரக் கண்ணோட்டத்தின்படி புனைவி யல் வளிமங்கள் ஒன்றுடன் ஒன்று நன்கு கலக்கும் போது அக்கலவையின் மொத்த என்ட்ரொபி உயரு கிறது எனவும் எளிதில் அறிந்து கொள்ளலாம். கலவையில் வளிமங்களின் அணுக்கள் அல்லது மூலக் கூறுகள் இயங்கக்கூடிய நிகழ்தகவு பெருகிவிடுவதே இதன் காரணம். எனவே S கலவை வாயு 1 + Sவாயு 2 1 எனக் குறிப்பிடப்படுகிறது அல்லது AS கலத்தல் ஒரு நேர்குறிப்பண்பு. கலலையில் ஈடுபட்டுள்ள பொருள்கள் ஐசோடோப்புகளாகவோ (isotopes), அணுக்கருச் சுழற்சி சம ஆற்றல் நிலைகள் (nuclear spin degeneracy) இழந்தவையாகவோ இருப்பினும் இம்முடிவு பொருந்தும். புள்ளி விவர வெப்ப இயக்கவியலில் பங்கீட்டுச் சார்பு (partition function) என்ற ஒரு புதிய பண்பும் வரையறுக்கப்படுகிறது. இதன் துணை கொண்டு வெப்ப இயக்கப்பண்புகள், பொருள்கள் ஆற்றலை ஏற்கும்போது பெரும் பல்வேறு இயக்கங்களுக்கேற்ப, இயக்கம் (translational), சுற்று (rotational), அதிர்வு