380 இயல்பு வேதியியல்
380 இயல்பு வேதியியல் கள் அனைத்தையும் இந்தப் பரப்பில் ஏற்படும் வேறு பாடுகளையொட்டிக் கருத்திற் கொள்ளவேண்டும். வெப்ப இயக்கவியலில், பாய்மத்தின் இயல்பு களை ஆராய அதனை இயல்பு வெப்ப ஓட்டமாகக் கருத்திற்கொண்டால்தான், விஞ்ஞான விவாதங்களை விளங்க வைக்க இயலும். கே.ஆர். கோவிந்தன் நூலோதி. Calrin Victor Daris, Hand Book of Applied Hydraulics, Third Edition, McGraw Hill Book Company, New York, 1970; Jain. R.K., Fluid Mechanics, Khanna Publishers, New Delhi. இயல்பு வேதியியல் வேதியியல் நிகழ்வுகளையும், பண்புகளையும், அடிப் படை இயற்பியல் முறைகளைக் கொண்டு விளக்க முற்படும் துறைக்கு இயல்பு வேதியியல் (physical chemistry) எனப் பெயர். இது வேதியியலில் ஒரு முதன்மையான பிரிவு. வேதியியல் ஆய்வின் நுணுக்க முறைகளின் வளர்ச்சிக்கும் இது உறுதுணையாகிறது. வேதி இயற்பியல் (Chemical physics) என்பது இயற்பு வேதியியலின் ஒரு பிரிவாகும். இதில் வேதி வினைகள் பற்றிய எவ்விதக் குறிப்பீடும் இல்லை. இதில் தனித்தனி மூலக்கூறுகள், ஒட்டுமொத்த அமைவுகள் (bulk systems) ஆகியவற்றின் இயற்பியல் குணங்கள் மட்டுமே ஆராயப்படுகின்றன. இதனுடன் தொடர்புடைய மற்றொரு பிரிவு, கோட்பாட்டு வேதியியலாகும் (theoretical chemistry), குவாண்டம் இயக்க வியல் (quantum mechanics), புள்ளிவிவர வெப்ப இயக்கவியல் (statistical thermodynamics) ஆகியவற்றின் அடிப்படையில், மூலக்கூறுகள், அமைவுகள் ஆகியவற்றின் பண்புகளைக் கணக்கிட்டு அறிவதில் இத்துறை பயன்படுகிறது. வேதி வெப்ப இயக்கவியல். பொருள்களை அவற் றின் சமநிலைகளில் ஆய்ந்தறிவதில் வேதி வெப்ப இயக்கவியல் (chemical thermodynamics) பயன்படு கிறது. இது ஓர் அமைவு வெளிச் சூழ்நிலைகளுக் கேற்ப, தன் பண்புகளில் (எடுத்துக்காட்டாக கொதி நிலை, உறைநிலை) எத்தகைய மாற்றங்கள் பெறு கின்றன என்பதை விவரிக்க உதவுகிறது. தூய பொருள் அல்லது கலவைகளின் இயைபு மாறும்போதோ அவற்றில் வேதிவினைகள் நிகழும் போதோ உடன் விளையும் ஆற்றல் மாற்றங்களின் காரணங்களை இம்முறையினால் விளக்கலாம். அத் தகைய ஆற்றல் மாற்றம் ஒரு வெப்ப மாற்றம் என்றால், அதற்கியைந்த உட்பிரிவு வெப்ப வேதியியல் (thermochemistry) எனப்படும். ஒரு குறிப்பிட்ட மாற்றத்துக்குட்படும் ஒர் அமைவில் உருவாகக்கூடிய உச்ச அளவு வேலையை நிர்ணயிப்பதற்கான சட்டதிட்டங்களையும் வேதி வெப்ப இயக்கவியல் வரையறுக்கிறது. எனவே இயந்திரங்கள், குளிர்வூட்டிகள், மின்வேதிக்கலங்கள் போன்ற பல்வேறு சாதனங்களில் வேலைத் திறன் களுக்கு வரம்பு நிறுவுவதற்கு இப்பிரிவு வழிகோலு கிறது. இவ்வாறு வெப்ப இயக்கவியலை, வேதி யியலுக்குப் பொருத்தும்போது வேதிவினைகளின் சமநிலைத்தானம் (equilibrium) தெரியவருகிறது. அதாவது அந்தக் குறிப்பிட்ட வேதிவினை எவ்வளவு தூரம் நிகழும் என அறியவும், ஒரு குறிப்பிட்ட வினைப்பொருள் எந்த அளவுக்குக் கிடைக்கும் எனக் காணவும் தேவையான நிபந்தனைகளை பிரிவு கூறுகிறது. மின்முனைகள் உடனிருக்க நிகழும் அயனி வினைகளைப் பற்றிக் கூறும் வேதி வெப்ப இயக்கவியலின் உட்பிரிவு சமநிலை மின் வேதியியல் ஆகும். வேதி வெப்ப இயக்கவியலில் பயன்படும் மிகவும் முதன்மையான இரு பண்புகள்: வெப்பஉள்ளுறை (enthalpy, H), கிப்ஸ் (Gibbs) அல்லது கிட்டும் ஆற்றல் (free energy,G) ஆகியன. மாறா அழுத்தச் சூழநிலைகளில் நிகழும் ஒரு குறிப்பிட்ட மாற்றத்தின் போது அமைவுக்குத் தரப்படும் வெப்பத்தின் அளவை H என வரையறுக்கலாம். அனைத்துப் பொருள்களுக்கும் இப்பண்பு நிர்ணயிக்கப்பட்டு அட்டவணைப்படுத்தப்படுகிறது. இம்மதிப்புகளைக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட வினைக்குத் தேவை யான அல்லது அதிலிருந்து கிடைக்கக்கூடிய வெப்ப அளவைக் கணக்கிட முடியும். ஒரு வினையிலிருந்து பெறக்கூடிய அவ்வளவு வெப்பமும் வேலை செய்வ தற்குக் கிட்டுவதில்லை. இது எத்தகைய வேலையா யினும், எடுத்துக்காட்டாக, எந்திர வேலை அல்லது ஒரு குறிப்பிட்ட தேவையான வினைப்பொருளைத் தரவல்ல வகையில் நெறிப்படுத்தப்பட்ட வேதி வினையில் ஈடுபட்ட வேலை, எதுவாயிருப்பினும் அதற்கு இவ்விதி பொருந்தும். மாறா அழுத்தச் சூழ்நிலைகளில் ஒரு குறிப் பிட்ட செயல்முறையை உருவாக்கக் கூடிய விரிவாக்க வேலை தவிர வேறுவகைப்பட்ட உச்ச அளவு வேலையை G வெளிப்படுத்துகிறது. ஒரு தேவை யற்ற திசையில் ஒரு வினையை நிகழ்த்த இயலுமா எனத் தெரிந்துகொள்ள இதன் மதிப்பு பயன்படு கிறது. எடுத்துக்காட்டாக, உயிர்வேதியியலில் வினை களுக்கியைந்த கிப்ஸ் சார்பின் மாற்றங்களைக் கொண்டு உயிர்க் கூறுகளில் நிகழும் செயல்முறைகள் பற்றி விவரிக்க இயலும், அதாவது உட்கொண்ட உணவிலிருந்து பெறப்படும் ஆற்றல் இறுதியாக