386 இயலுருத் தோற்றம்
386 இயலுருத் தோற்றம் K PP B1 V, A N M படம். 2 இயலுருத் தோற்றம் இதை நீட்டினால் மறையும் புள்ளியின் இயலுருத் தோற்றமான V, இன் வழியே இது செல்லும். படத் தளத்திற்கு இணையாகஉள்ள கிடைக்கோடுகளுக்கும் நிலைக்கோடுகளுக்கும் மறையும் புள்ளிகள் இல்லை. மற்ற இணையான கோடுகள் அனைத்தும் ஒரே மறையும் புள்ளியை உடையவை. ஒரு காட்சியின் இயலுருத் தோற்றத்தை வரையு முன் மூன்று தளங்களை முடிவுசெய்து கொள்ள வேண்டும். அவை அடித்தளம், அடிவானத்தளம், படத்தளம் என்பனவாகும். அடித்தளம் காட்சி உள்ள தரையின் தளம். படத்தளம் என்பது இயலுருத் தோற்றப்படமுள்ள தளமாகும். முதலிரு தளங்களுக் கிடையேயுள்ள தொலைவு இயல்பான மனிதனின் உயரத்திற்குச் சமமானால் ஒருவர் சாதாரணமாகக் காணும் காட்சியை இயலுருக் தோற்றத்தில் காண லாம். இது மிகவும் அதிகமானால் காட்சியின் தோற்றம் வானிலிருந்து பார்த்தால் தரையில் தென் படும் காட்சியைப்போல் இருக்கும். தரைத்தளத்தை அடிவானத் தளத்திற்குமேல் எடுத்துக்கொண்டு ஒரு காட்சியின் இயலுருத் தோற்றத்தை வரைந்தால், அது கீழிருந்துகொண்டு உயரத்திலுள்ள காட்சியைப் பார்ப்பதுபோன்ற தோற்றங்கொண்டிருக்கும். இயலுருத்தோற்றப் படங்களை வரையப் படத் தளமும் அடிவானத்தளமும் முதன்மையானவை. நடைமுறையில் படத்தளத்தையும் அடிவானத் தளத்தையும் ஒரு தாளின்மேல் வரைய வேண்டி யிருக்கும். இதற்காகப் படத்தளத்தை 90° கோணம் படம் 3. இயலுருத் தோற்றம்