இயற்கை உரங்கள் 407
துணிகள், காகிதம் பாய்கள் முதலிய பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. கேனாஃப் (kenaf). இவ்விழைகள் சோவியத் நாடு, பங்களாதேஷ், இந்தோனேசியா, வியட்நாம் போன்ற நாடுகளில் பயிராகின்றன. இவ்விழைகளின் அணுக்கள் 2.3 மில்லி மீட்டர் நீளமும், 0.0007 அங்குலக் குறுக்களவும் கொண்டவை. காண்பதற்கு சணல் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளதால் பெரும்பாலும் கோணிகள் செய்யப் பயன்படும். விளைவாக தற்போது பல ஆராய்ச்சிகளின் மிகவும் நீளமான பருத்திகளான வரலட்சுமி, சுவின் சுஜாதா போன்றவை, சாகுபடிக்கு ஏற்ற விளைச் சலையும், அதிக அளவு இழையின் நீளத்தையும் தருகின்றன. வே. சுப்ரமணியன் நூலோதி. Hollen, N. Saddler, J., Langford, A. L., Textiles, Fifth edition, Collier Macmillan Publishing Co., Inc., London, 1979. இயற்கை உரங்கள் யற்கைக் கரிமப்பொருள் நிரம்பிய தொழு உரம், பசுந்தாள் உரம், குப்பை உரம் ஆகிய இவற்றை இயற்கை உரங்கள் (manures) எனலாம். மேலும், உயிர்வாழ் இனங்களின் கழிவுப்பொருள்களும் இயற்கை உரங்களில் அடங்கும். தானிய அறுவடைக் குப்பின், நிலத்தில் எஞ்சியிருக்கும் அடித்தட்டு, வேர்ப் பகுதி, இலை ஆகியவை மண்ணோடு சேர்ந்து மட்கும்பொழுது பல்வேறு பயிர் ஊட்டங்கள் (plant nutrients) மண்ணில் சேர்கின்றன. இவ்வகை கரிமப் பொருள்களே உரங்களில் பெரும்பாலும் மிகுதியாகவும், பயிரூட்டங்கள் குறைவாகவும் இருக் கும். உரங்கள் மிகு அளவுள்ளவையாக இருந்தாலும் அவற்றிலுள்ள ஊட்டப்பொருளடக்கம் குறைவாகவே இருக்கும். இயற்கை உரங்கள் இருவகைப்படும். அவை, மிகு அளவு இயற்கை உரங்கள் (bulky organic man. ures): இந்த உரங்களில் பயிரூட்டங்கள் குறைந்த அளவில் உள்ளன. தொழு உரம் (farm yard manure) மட்கிய உரம் (compost), தழை உரம் (green manure) ஆகியவை இவ்வகுப்பைச் சார்ந்தவை. ஊட்டமிக்க உரங்கள்(concentrated organic manures): இந்த உரங்களில் பயிரூட்டங்கள் மிகுதியாக இருக் கும். பிண்ணாக்கு (oil cake ) பறவைகளின் கழிவுப் பொருள் (guano) மீன்தூள் (fish meal), எலும்புத் தூள் (bone meal) ஆகியவை இவ்வகுப்பில் அடங்கும். இயற்கை உரங்கள் 407 பொதுவாக இயற்கை உரங்களில் பயிரூட்டங்கள் மிகக் குறைந்த அளவில் காணப்படும். இப்பயிரூட் டங்களின் அளவு இவ்வுரங்களில் காணப்படும் பல் வேறு கூட்டுப்பொருள்களின் தன்மைக்கேற்ப மாறு படும். இவற்றை பயிர்களுக்கு இடுவதால் கிடைக்கும் விளைச்சல் மிகுதியாகக் காணப்படாது, இவ்வகை உரங்கள் மட்கிச் சிதைவுற்றுக் கூட்டங்களை வெளிப் படுத்த 2-30நாள் ஆகும். எனவே இவ்வகை உரங்களை ஒரு பயிருக்கு இடும்போது அதன் பலன் அடுத்த பயிருக்கும் கிடைக்கும். மேலும் இவ்வரங்கள் பயிர் களுக்குத் தேவையான முதலூட்டங்களைத் தருவ தோடு, கால்சியம் மக்னீசியம், கந்தகம் போன்ற இரண்டாம் தர ஊட்டங்களையும், இரும்பு, துத்த நாகம் போன்ற நுண்ணூட்டங்களையும் (micronu- trients) தருகின்றன. மண்ணுக்கு மிகவும் தேவைப் படும் கரிமப்பொருள்களையும் தருகின்றன. மிகு அளவு இயற்கை உரங்கள். மாட்டுத் தொழு வில் சேரும் தொழு உரம் சாணி, சிறுநீர், வைக் கோல், குப்பை, கூளம் ஆகிய பொருள்கள் கலந்து மட்கிய பொருளே தொழு உரம் ஆகும். பொதுவாக இப்பொருள்களைக் குழிகளில் சேர்த்து வைக்கின்ற னர் அல்லது சாண எரிவளிக் கலன்களில் பயன் படுத்துகின்றனர். எருக்குழிகளில் தேக்கி வைக்கப் படும்போது ஏற்படும் பயிரூட்டங்களின் இழப்பினை ஓரளவு கட்டுப்படுத்துவதற்கு ஜிப்சம் போன்ற வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.தொழு உரத்தில் பொதுவாக 0.5 விழுக்காடு தழைச்சத்தும் 0.2 விழுக்காடு மணிச்சத்தும் 0.5 விழுக்காடு சாம் பல் சத்தும் காணப்படுகின்றன. ஆனாலும் கால் நடை வேறுபாடு, தீவனங்களில் வேறுபாடு, வயதில் வேறுபாடு, நிலையில் வேறுபாடு, உரத்தைச் சேகரித்து வைக்கும் முறை, உரம் தயாரிக்கப்படும் பொருள் களின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து ஊட்டங் களின் அளவு வேறுபடும். தொழு உரத்திலுள்ள எல்லா ஊட்டச்சத்துக்களும் அந்த ஆண்டிலேயே பயிருக்குக் கிடைப்பதில்லை. முதல் பயிருக்குத் தழைச்சத்தில் 1/3 பங்கும், மணிச்சத்தில் 2/3 பங்கும் சாம்பல்சத்தில் முழுப்பங்கும் கிடைக்கின்றன. பொது வாகத் தொழு உரத்தில் மணிச்சத்துக் குறைவாக உள்ளது. இம்மணிச்சத்தைத் தொழு உரத்தில் மிகுதிப்படுத்துவதற்கு, உரம் தயாரிக்கும்பொழுது சூப்பர் பாஸ்பேட்டையும் உரக்குழியில் இடுகின்றனர். கூளம் மட்கிய உரம். பண்ணைகளில் சேருகிற பயிர்க் கழிவுகளையும், களங்களில் சேரும் தானியச்சாவி ஆகியவற்றையும்,நகரங்கள் கிராமங்களி லிருந்து கிடைக்கும் பல்வேறு கழிவுப் பொருள்களை யும், வீடுகளிலிருந்து கிடைக்கும் குப்பை சாம்பல் கழிவு வைக்கோல் ஆகியவற்றையும் சேர்த்து, குறிப் பிட்ட நாள் வரை மட்கச் செய்து, உரமாகப் பயன் படுத்தும் பொருளே கம்போஸ்ட் ஆகும். பெரும்