408 இயற்கை உரங்கள்
408 இயற்கை உரங்கள் பாலும் உள்ளன. கரிமப்பொருள்களைச் நுண்ணுயிர்கள் சிதைவுறச் செய்து, கரிம நைட்ரஜன் வீதத்தினைக் குறைக்கின்றன. வளிம அல்லது ஆக்சிஜன் தேவைப் படும் நுண்ணுயிரினங்களும், (aerobic) தேவையற்ற நுண்ணுயிரிகளும் (anaerobic) கரிமப் பொருள்களைச் சிதைவுறச் செய்கின்றன. குழிகளில் தயாரித்தல், நீண்ட குழிகளில் தயாரித்தல் பெங்களுர் முறை, இந்தூர் முறை என்று கம்போஸ்ட் தயாரிக்கப் பல முறைகள் கம்போஸ்டின் தரம், இவை தயாரிக்கும் விதம், தயாரிப்பதற்குப் பயன்படுத்தப் படும் பொருள்களின் தரம் ஆகியவற்றால் கட்டுப் படுத்தப்படுகின்றன. தயாரிக்கப் நன்முறையில் பட்ட கம்போஸ்ட்டில் 0.75-1.00 விழுக்காடு தழைச் சத்தும்.0.60-0.75 விழுக்காடு மணிச்சத்தும், 1.0-1.5 விழுக்காடு சாம்பல் காணப்படும். கம் சத்தும் போஸ்ட்டில் கரிம நைட்ர ஜன் விகிதம் 15:1 11:1 வரை வேறுபடுகின்றன. கம்போஸ்ட் தயாரிக்கும் போது சூப்பர் பாஸ்பேட் உரத்தினை இடுவதால் அதன் ஊட்டச் சத்து அதிகரிக்கின்றது. சாக்கடைக் கழிவும் கழிவு நீரும். மூடிய சாக்கடை களிலிருந்து கிடைக்கும். நீர்ப்பகுதியைக் கழிவு நீர் என்றும், திடப்பகுதியைச் சாக்கடைக் கழிவு என்றும் கூறலாம். தற்பொழுது நகரங்களிலிருந்து கிடைக்கும் கழிவு நீரும், கழிவுப் பொருள்களும் பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், அவற்றில் பயிரூட்டங்கள் அதிக அளவில் காணப் படுகின்றன. ஆனால் இவற்றில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையைக் குறைத்த பிறகுதான் அவற்றைப் பயிர்களுக்குப் பயன்படுத்தலாம். அதற்காகக் கழிவு நீரைத்தேக்கி வைத்தும், ஆக்சிஜனேற்றம் செய்தும் அல்லது நொதிக்க வைத்தும், நுண்ணுயிர்களின் எண் ணிக்கையைக் குறைத்துப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு செய்வதால் சாக்கடைக் கழிவுப் பொருளில் கரிம நைட்ரஜன் விகிதம் குறையும். ஆக்சிஜனேற்ற வினையாக்கத்திற்குட்படுத்தப்பட்ட சாக்கடைக் கழிவு வினைமிக்க கழிவுப் பொருள் (activated sludge) ஆகும். இதில் 3-6 விழுக்காடு தழைச்சத்தும் 2.0 விழுக்காடு மணிச்சத்தும், 1.0 விழுக்காடு சாம்பல் சத்தும் உள்ளன. சாக்கடைக் கழிவுப் பொருளில் துத்தநாகம், இரும்பு, செம்பு, மாங்கனீஸ் போரான் போன்ற நுண்ணூட்டங்களும் மிகுதியாகக் காணப்படுகின்றன. சாக்கடைக் கழிவை அகற்றிய பிறகு எஞ்சி இருக்கும் தண்ணீர், கழிவுநீர் (effluent) எனப்படும். இதைப் பாசனத்திற்குப் பயன்படுத்தலாம். இக்கழிவு நீரிலும், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகிய மூன்று பயிரூட்டங்கள் உள்ளன. ஆனால், இதில் மிகுதியாகத் தேவைப்படாத கூழ் பொருள்கள் உள்ளன. சாக்கடைக் கழிவு நீரைக் காற்றோட்டத்தில் தேக்கிவைத்துப் பாசனத்திற்குப் + போன்ற பயன்படுத்தினால், அக்கழிவு நீர் தெளிவாகவும், கெட்ட நாற்றமில்லாமலும் இருக்கும்; நோய்தாக்கும் கிருமிகளும் அழிக்கப்படும். தழை உரம். தழை உரங்கள் தனித்தோ மற்ற பயிர்களுடன் கலப்புப் பயிராகவோ அதே நிலத்தில் மடக்கி உழப்பட்டால் அவை பசுந்தாள் உரம் ஆகும். தரிசுகள், காடுகள், குளக்கரை, சாலையின் ஓரங்கள் முதலிய இடங்களிலுள்ள செடி, கொடி, தழை ஆகியவற்றைச் சேகரித்துச் சேற்று நன்செய் நிலங்களில் மிதிப்பதுண்டு. இவை பச்சைத்தழை அல்லது இலை உரம் எனப்படும். பசுந்தாள் உரமாகச் சணப்பை, தக்கைப்பூண்டு, பில்லிப் பயறு, கொத்த வரை போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. பச்சைத் தழை அல்லது இலை உரமாக, பெரும் பாலும் புங்கு, பூவரசு, கிளைரிசீடியா (glyricidia), அவுரி போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. தழை உரம் இடுவதால் மண்ணில் தழைச்சத்து, மட்கும் நிலை அதிகரிக்கும். முதிர்ந்த நிலையில் இல்லாத தழை உரச் செடிகளை உரமாக இடும் பொழுது, அவை விரைவில் சிதைவுற்றுத் தழைச் சத்தினை வெளிப்படுத்திப் பயிர்களுக்குத் தரும். ஆனால், நன்கு வளர்ந்த முதிர்ந்த செடிகளையோ மரக்கிளைகளையோ இடும்பொழுது, அவை மெது வாகச் சிதைவுற்று, மண்ணில் மட்கும் கிடக்கையை அதிகரிக்கச் செய்யும். தழை உரங்களை மண்ணிற்குப் போடுவதால், மண்ணிற்குக் கிடைக்கும் பயிரூட்டங் களின் கிடக்கை, தழை உரங்களின் நிலை, அது மண்ணில் சிதைவுற்று மட்குவதற்குத் தேவைப்படும் நாள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். கதிரியக்கத் தனிமங்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் தழை உரங்களை நிலத்திற்கு இடுவதால் மண்ணின் மட்குச் சிதைவுறுதலை விரைவுபடுத்தலாம் என்று அறியப்பட்டுள்ளது. மேலும், பருவமற்ற காலங்களில் தழை உரங்களைப் பயிர் செய்வதால் மண்ணிலிருந்து தழைச்சத்து இழப்பைத் தவிர்க் கலாம். தழை உரப்பயிர்கள் மண்ணில் சிதைவுறும் போது மணிச்சத்து, துத்தநாகம் போன்ற பயிரூட்டங் கள் பயிர்களுக்குக் கிடைக்கின்றன. இவை சிதைவுறும் பொழுது மிகுதியாகக் கார்பன் டை ஆக்சைடு வெளி யேற்றப்படுகிறது. இது மண்ணில் வினைபுரிந்து, பாஸ்பரஸ் ஊட்டத்தினைப் பயிர்களுக்குக் கிடைக்கச் செய்கிறது. இதைத்தவிரத் தழை உரங்களை மடக்கி உழுவதால், மண்ணின் கட்டமைப்புச் சீர் படுத்தப்பட்டு மழை நீர் எளிதில் உள்ளிறங்க இயலுகிறது. ஊட்டமிக்க கரிம உரங்கள். பருமன் மிக்க கரிம உரங்களை விட ஊட்டமிக்க கரிம உரங்களில் தழைச் சத்து, தானியச்சத்து, சாம்பல்சத்து ஆகிய பேரூட்டங்கள் மிகுதியாகக் காணப்படும். பொதுவாக இவ்வகை உரங்கள் பயிர்கள், உயிரினங்கள் ஆகிய