412 இயற்கைச் செல்லுலோஸ் இழை
412 இயற்கைச் செல்லுலோஸ் இழை கின்றன. இந்த உணவுத்தொடரில் ஓர் இணைப்புக் கேடுற்றால், அந்த இணைப்பிற்கு முன்னும் பின்னும் உள்ள இணைப்புகளும் தடுமாற்றமுறுகின்றன. ஆனால் உணவுத் தொடர்கள் இவ்வளவு எளிமை யான நேர்கோட்டில் அமையவில்லை. அலை பின் னிப்பிணைந்து காணப்படுகின்றன. இயல்பான சம நிலையில் மாற்றம் ஏற்பட்டால், உணவுவலையில் (food web) காணப்படும் குறுக்குத் தொடர்கள் கார ணமாக மீண்டும் சமநிலை நிலைப்படுத்தப்படும். ஓரிடத்தில் வாழும் முயல்களின் எண்ணிக்கை, இயற்கைச் சீர்கேடு, உணவுத்தட்டுப்பாடு, கொன்று தின்னும் எதிரிகள் போன்ற பலகாரணங்களில் ஏதாவ தொன்றினால் குறைந்துவிட்டால், அவற்றைத் தின்று வாழும் பருந்து, ஆந்தை போன்றவை உணவின்றித் தொல்லைப்படுவதில்லை. ஏனென்றால், முயல்கள் குறைந்துள்ள காலங்களில் தாவரங்கள் செழித்து வளரும். அப்போது எலிகள் தாவரங்களை உண்டு எண்ணிக்கையில் பெருகும். பருந்துகளும் ஆந்தைகளும் எலிகளைத் தின்று வாழத் தொடங்கு கின்றன. ஆகவே ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை அமைப்பின் உணவுவலையில் எவ்வளவுக்கு எவ்வளவு சிக்கலான குறுக்குத்தொடர்கள் உள்ளனவோ, அவ் வளவுக்கவ்வளவு சமநிலையைப் பேணுதல் எளிதாக நடைபெறும். இயற்கையில் காணப்படும் சமநிலை பெருமள வுக்குப் பாதிக்கப்பட்டால், பல சிக்கல்கள் தோன்று கின்றன. ஒரு சூழ்நிலை அமைப்பிலுள்ள ஊனுண்ணி கள் அழிக்கப்படும் போது, அவற்றின் இயற்கை இரையான தாவரவுண்ணிகள் பெருகிக் காட்டுத் தாவரங்களைத் தின்று அழிக்கின்றன. காட்டுத் தாவரங்கள் குறைந்தவுடன், காட்டுப்பன்றி போன்ற தாவரவுண்ணிகள் விளைநிலங்களுக்குச் சென்று பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கின்றன. மேலும் காடுகள் அழிக்கப்பட்டதால் மழையளவு குறைந்து அதன் காரணமாக வேளாண்மை பாதிக்கப்பட்டுப் பொருளாதாரக் கேடுகள் ஏற்படுகின்றன. பாம்புகள் அவற்றின் தோலுக்காகப் பெருமளவில் கொல்லப் படும்போது அவற்றின் இயற்கை இரையான எலிகள் அளவுக்கு மேல் பெருகும். அதனால் விளை பொருள் களுக்குப் பெரும்சேதம் ஏற்படும். சுமத்ரா தீவிலிருந்து பனை எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அத் தீவில் புலிகள் வேட்டையாடிக் கொல்லப்பட்டதால், காட்டுப்பன்றிகள் எண்ணிக்கையில் பெருகிப் பனை மரங்களை அழித்தன. அதனால் அத்தீவின் பொருளா தாரம் பாதிக்கப்பட்டது. உணவுத் தட்டுபாடு காரண மாகத்தான் கழுதைப்புலிகள் குழந்தைகளைத் தூக்கிச் செல்கின்றன; புலிகள் ஆட்கொல்லிகளாக கின்றன. வட அரிசோனாவில் (North Arizona) கைபாப் (Kaibab) பகுதியில் 1906 ஆம் ஆண்டி லிருந்து ஒருவகை மான்கள் வேட்டையாடப்படுவது மாறு கள் தடை செய்யப்பட்டு அவை பாதுகாக்கப்பட்டன். அதேகாலத்தில் சிங்கம், ஓநாய் போன்ற ஊனுண்ணி கொல்லப்பட்டன; மிகுதியாகக் வளர்ப்பு ஆடுகளின் மேய்ச்சலும் ஓரளவு குறைந்தது. மேலும், இம்மான்களின் பழக்கவழக்கங்களும், அந்நாட்டின் நில அமைப்பும் இவை வேறு இடங்களுக்குப் பரவிச் செல்வதற்குத் தடையாக இருந்தன. இக்காரணங்களி னால் இம்மான்களின் எண்ணிக்கை மிகவிரைவாகப் பெருகியது. 1906 ஆம் ஆண்டு 4000 ஆக இருந்த இவற்றின் எண்ணிக்கை 1924 இல் 100,000 ஆக உயர்ந்தது. ஆனால் இவை தாவரங்களைப் பெரு மளவு தின்று அழித்துவிட்டதால் உணவுப்பற்றாக் குறை ஏற்பட்டு 1925 இல் இவற்றின் இனத்தொகை யில் 60% அழிந்து விட்டது. இம்மான்களை வேட்டை யாடுவது மீண்டும் அனுமதிக்கப்பட்டது; 1936 இல் இவற்றின் எண்ணிக்கை 10,000 ஆகக் குறைந்தது. இயற்கைச் சமநிலை பாதிக்கப்பட்டதால் இது போன்ற தீயவிளைவுகள் ஏற்படுகின்றன. இயற்கைச் சமநிலை செயற்கைக் காரணிகளால் பாதிக்கப்படும் போது இத்தகைய நிகழ்வுகள் தோன்றுவதைப் பல இடங்களில் வரலாற்றறிஞர்கள் கண்டுள்ளனர். ந. மு. நூலோதி. Kendeigh, S.C., Ecology with Special Reference 10 Animal and Man, Prentice - Hall of India Private Limited, New Delhi, 1980; Rastogi, V. B. & Jayaraj, M. S., Animal Ecology and Dis- tribution of Animals, Kedar Nath Ram Nath, Meerut, 1984-85. இயற்கைச் செல்லுலோஸ் இழை அனைத்துத் தாவரங்களும் நாரிழை கொண்டவை. தாவரங்களின் நார், இலைகளுக்கும் தண்டுகளுக்கும் வேர்களுக்கும் உறுதியைக் கொடுப்பதுடன், அவற் றுக்கு நன்கு வளையும் (flexibility) தன்மையையும் தருகின்றது. சில தாவரங்கள் நெய்வதற்கேற்ற இழையைக் கொடுக்கின்றன. இயற்கைச் இயற்கைச் செல்லு லோஸ் இழை (natural cellulose fibre) தாவரங்களின் எப்பகுதியிலிருந்து கிடைக்கின்றது என்பதைப் பொறுத்து அது வகைப்படுத்தப்படுகிறது. அதனைக் கீழே உள்ள அட்டவணையில் காணலாம். தேவதாரு மரங்களிலிருந்தும், பருத்தியிலிருந்தும் கிடைக்கும் பஞ்சு போன்ற இயற்கைச் செல்லு லோசைக் கரைத்து மறுதிண்மப்படுத்தல் (dissol- ving and resolidifying) முறையில், மீளாக்கச் செல்லுலோசு இழை (regenerated cellulose fibre) அல்லது ரேயான் இழை தயாரிக்கப்படுகிறது.