414 இயற்கைத் தனிமங்கள்
414 இயற்கைத் தனிமங்கள் (1) குறைந்த எடைகொண் டது, நன்கு அடைத்த திண்ணிய கலாம். நூலாக் மிகுந்த மின் கடத்தல் திறனும் உயர் அடர்த்தி யும் (1.5+) உடை யது. கனிம அமிலங்களால் பேரளவில் பாதிக்கப் படுகின்றன. ஆனால், கரிம அமிலங்களால் ஓரளவே பாதிக்கப். படுகின்றன. அந்திப்பூச்சிக்கு எதிர்ப் புத்திறம் உடையது. பஞ்சு. காளான்களால் தாக்கப்படுகின்றது. தீப்பற்றக்கூடிய தன்மை உடையது மித நிலைவாய்ந்த சூரிய ஒளி தாங்கு திறமுடையது. (2) அழுத்தமான மெல்லிய நூலிழை, உயர் நூலெண் நூலிழைகள், காற்றுப் புகா ஆடைகள் செய் வதற்கு பயன்படுகின்றன. இதில் சுதுக்க அமைப்பை உருவாக்கலாம். நிலையானவையல்ல, மற்ற இழைகளைக் கொண் டுள்ள ஆடைகளுடன் ஒப்பிடும் போது ஆடை கள் தூக்குவதற்கு எடை அதிகமாக இருக்கும். பழச்சாறு படும்போது பழக்கறைகள் ஊடுருவிப் படிவதற்கு முன் ஆடை களிலிருந்து நீக்க வேண்டும். இது தேக்கமுறை இடை யூறுகளைக் குறைக்கிறது. அழுக்குத் துணிகளை ஈரத்தில் நனைய விடக் கூடாது. செல்லுலோஸ் இழைகள் எளிதில் தீப்பற்றக் கூடிய வையாக, நன்கு சுடர் விட்டு எரிந்து, சாம்பலா கின்றன. தளர்ந்த ஆடை களை அணிந்து கொண்டு எரியும் தீச்சுடருக்கு அரு கில் செல்லக் கூடாது. திரைச்சீலைகளாக மேலு றையுடன் பயன்படுத்த வேண்டும். ரா. அ நூலோதி. Grosicki, Z., Watson's Textile Design and Colour Elementary Weaves and Figured Fabrics, Seventh Edition, Butterworth, London, 1980; Hollen, N., saddler, J. and Langford, A.L, Textiles, Fifth Edition, Collier Macmillan Publishing Co., Inc., London, 1979; Gaswomi, B.C., Martindale, J.G. and Scardino, F.L.. Texitle Yarn Technology, Stru- cture, and Application, John wiley and Sons, New York, 1977. இயற்கைத் தனிமங்கள் தனிமங்கள் இயற்கையில், பல் சேர்மங்களாகக் கிடைக்கின்றன. தனிமங்களில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு உலோகங்களாகவும், எஞ்சியவை அலோகங்களாகவும் உள்ளன. தனிமங்களில் சில. மற்ற தனிமங்களுடன் சேராமல் இயற்கையில் தனித்த நிலையில் காணப்படுகின்றன. இவை இயற்கைத் தனிமங்கள் (native elements) என அழைக்கப்படும். இவற்றுள் ஆக்சிஜன், நைட்ர ஜன், ஹீலியம், நியான், ஆர்கான்,கிரிப்டான். ஃசெனான், ரேடான், கந்தகம், செம்பு, வெள்ளி, தங்கம், பிளாட்டினம், பாதரசம், வெள்ளீயம், ஆர்செனிக் போன்றவை அடங்கும். இயற்கைத் தனிமங்கள் சேர்மங்களாக இல்லாமல் இருப்பதற்குக் காரணம், அவை மற்ற தனிமங் களுடன் சேராமையே. சேர்ந்தாலும் எளிதாகச் அச்சேர்மம் உண்டாகத் தேவையான வெப்பமும் உலோகங் மற்ற சூழ்நிலைகளும் கடினமானவை. களின் அமைப்பை விட அலோகங்களின் அமைப்புச் சற்றுச் சிக்கலாக அமைந்துள்ளது. பல இயற்கைத் தனிமங்கள் (எ.கா.கரி) புறவேற்றுமைகளாக, சூழ் நிலைக்கேற்றவாறு அமைந்துள்ளன. இயற்கைத் தனி மங்களின் பண்புகள் 416ஆம் பக்க அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. இயற்கைத் தேர்வு தெ. பரிணாமத்தின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் டார்வின் (Charles Darwin) பதினெட்டாம் நூற் றாண்டின் தலைசிறந்த தத்துவப் பேரறிஞராகவும், இயற்கையியல் வல்லுநராகவும் திகழ்ந்தார். அவர் எச்.எம்.எஸ்.பீகிள் (H.M.S Beagle) எனும் ஆங்கி லேயக் கப்பலில் ஐந்தாண்டுகள் பல நாடுகளைச் சுற்றி வந்தபோது, இயற்கைச் சூழ்நிலையில் வாழும் உயிரினங்களை மிகக் கவனத்துடன் ஆராய்ந்தறிந் தார். தென் அமெரிக்கா, காலப்பேகோஸ் தீவுகள் (Galapagos islands) போன்ற பல பகுதிகளில் காணப் பட்ட விலங்குகள், தாவரங்களில் கண்டறிந்த உயி ரியல் உண்மைகள் ஆகியவை இனத்தோற்றம் குறித்து ஆராய இவருக்கு அடிப்படையாக அமைந்தன. பேராசிரியர் மால்த்துஸ் (Malthus) என்பார். 1837இல் எழுதிய 'மக்கள் தொகைப் பெருக்கம் என்னும் கட்டுரையை டார்வின் படிக்க நேர்ந்தது. மக்கள் தொகைப்பெருக்கம் பலவகைப்பட்ட காரணி களால் கட்டுப்படுத்தப்பட்டாலன்றி, அதன் எண் ணிக்கை, 'பெருக்கு வீதத்தில்' (geometric progression ) அதிகரிக்கின்றது என்பது அக்கட்டுரையின் அடிப் படைக் கருத்தாகும். இக்கோட்பாட்டின் அடிப்படை