இயற்கைத்தோலும் செயற்கைத்தோலும் 423
விடக் குறைவு. இவற்றை அடிப்பகுதியாகப் பெற்றி ருக்கும் காலணிகளை அதிகமான வெப்பச் சூழ்நிலை யில் பயன்படுத்தினால் அதிகமாக வியர்க்கும்; கால் களில் சூடான உணர்வு தோன்றும். இவற்றை அணி யும் போது நடக்கும் பாதைகளில் உள்ள கரடு முரடான பகுதிகளை நன்கு உணர முடியும். குளிர் காலத்தில் இவை காலுக்கு அதிகமான குளிரைத் தரும். வழுவழுப்பான தரைகளில் நடக்கும்போது வழுக்கும். பொதுவாக, ஆரோக்கியமான கால்களை உடையவர்களாக இருப்பதற்கு இவை தோல்களைப் போல் பயன்படா. காலணி அடித்தோல் சிறிய அழுத்தங்களுக்கு இணங்கிப் போகும்; ஆனால், பெரிய அழுத்தக் காப்புடையது. எனவே, இவை காலுக்கு ஏற்ற உருவத்தைப் பெற்று, பிறகு நீண்ட காலத்திற்கு நிலை மாறாமல் இருக்கின்றன. இவை ரப்பரை விடக் குறைந்த கடத்துமை (conductivity) உடை யவை. எனவே, இவை குளிர் காலங்களிலும் காலைச் சூடாக வைத்து இருக்கும். வெயில் காலத்தில் வெளிப் புற வெப்பம் அவ்வளவாக உணரப்படுவதில்லை. பெரும்பாலான மேற்பரப்புகளில் தோல் நல்ல பிடிப்பு (grip) உடையதாக இருக்கும். ஈரமான சூழ் நிலைகளில் இந்தப் பிடிப்புமை இன்னும் அதிகரிக்கும். எனவே, இது ரப்பரைப் போல வழுக்காது. தோல் குறைந்த அனற்பதனநிலையால் பாதிக்கப்படு வதில்லை. இழுக்கும்போதும், அழுத்தும் போதும், வளைக்கும்போதும், முறுக்கும்போதும் தோல் மற்றைய பொருள்களைப் போலச் சிதைவுறு வதில்லை. இது இரப்பரைவிட அதிகமான விறைப்புத் தன்மையுடையது. அதிகமாக நெளிக்கும்போது தோலின் அமைப்பு மாறுவதில்லை. இது வியர்வையை ஈர்த்து வெளியே கடத்தும். வெயில் காலத்திலும், குளிர் காலத்திலும் நிலை மாறாமல் உறுதியாக இருக்கும் காலணிகளைச் செய்யும் எல்லா வித நிகழ்ச்சிகளிலும் தோலைவிடச் செயற்கைப் பொருள்கள் உடனடியாகப் பொருந்தும் தன்மை யுடையனவாக இருக்கும். தோலின் தேய்வுக்காப்பும், நீர்க்காப்பும் சில வகையான ரப்பர்களைவிடக் குறைவாக இருக்கும். சுல்பமாக மேல்தோலையும் செயற்கைப் காலணிகளின் பொருள்களையும் ஒப்பிடும் பொழுது மேலும் சில வற்றை அறிய இயலும்; இன்று உலகில் உற்பத்தி செய்யப்படும் தோல்களில் பெரும் பகுதி காலணி களின் மேல்தோலாகப் பயன்படுத்தப்படுகிறது என் வகையான சிறப்புத் பதிலிருந்து மேல்தோல் பல தன்மை உடையதாக இருக்கிறது என்பதையும் உணர இயலும். தோல்கள் நீள்வலிமையும், இழையும் தன்மை யும் அதிகமுடையவையாக இருக்கின்றன. தோல்கள் காலுக்கு ஏற்ற வடிவத்தைப் பெற்று, அணிபவருக்கும் இயற்கைத்தோலும் செயற்கைத்தோலும் 423 சுகம் தரும். பயன்படும் தன்மையிலும், தரத்திலும் தோல் உயர்ந்ததாக இருக்கிறது. தோலின் பரப்பளவு முழுதும் ஒரே சீரான தன்மை உடையதாக இல்லை. எனவே, காலணிகளுக்குத் தேவையான பகுதிகளை வெட்டும்பொழுது குறைந்த அளவுத் துண்டுகளையே பெற இயலும். செயற்கைப் பொருள் கள் ஒரே சீரான தன்மை உடையவை. எனவே, அவற்றிற்கு வெட்டும் மதிப்பு (cutting value) அதிக மாக இருக்கும். செயற்கைப் பொருள்களில் அதிக மான எண்ணிக்கை உள்ள துண்டுகளை ஒரே நேரத்தில் வெட்ட இயலும். மூன்று பரிமாணங்களை உடைய தோலின் இழைநார்களின் அமைப்பும் தோலின் நீளும் தன்மையும், இறுகும் தன்மையும் (compress) சுலபமாகக் காலணி செய்யும் கட்டை களின் வடிவத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மையும் செயற்கைப்பொருள்களைவிட உயர்ந்திருக்கும். கோர்ஃபாம் (corfam) போன்ற செயற்கைப் பொருள்கள் காலின் வடிவத்திற்கு இடங்கொடுத்து ணங்கிப் போவதில் தோல்களைப்போல் இல்லை. காலணிகளை அணிபவருக்கு ஈரத்தை ஈர்த்துக் கொண்டு வெளியேற்றிச் சுகம் தரும் தன்மையில் தோல், செயற்கைத் தோல்களைவிட உயர்ந்ததாக இருக்கிறது. தோல் அதிகமான நுண்துளைகளைப் பெற்றிருப்பதால் காற்றையும், நீர் ஆவிகளையும். கசியும்படிச் செய்யும் தன்மையுடையதாக இருக்கிறது. மற்றைய பொருள்களைவிட அதிகமான நிலையான படிவைத் (permanent set) தோல் பெற்று இருக்கிறது. பெரும்பாலான செயற்கைப் பொருள்கள் உரிபடும் தன்மை (peciable) உடையவையாக இருக்கின்றன. செயற்கைப் பொருள்களுக்கு நீரினை ஈர்க்கும் தன்மை குறைவாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் நனைத்துக் காய வைக்கும்போது இவை விறைப்பான தன்மை யைப் பெறுகின்றன. இவற்றைச் சுலபமாகத் துளைப்படுத்த இயலும். அதிகக் குளிர் நிலையில் செயற்கைப்பொருள்கள் கெட்டித் தன்மையை அடை கின்றன. அதாவது விறைத்து விடும். தோல்கள் செயற்கைப் பொருளைவிடத் தைப்பதற்குச் சுலப மானவையாக இருக்கின்றன. செயற்கைப்பொருள்கள் குறைந்த அளவு நீள் வலிமையும், கிழியும் தன்மை யும் உடையவையாக இருக்கின்றன. செயற்கைப் பொருள்கள் தோல்களைவிட அதிகமான அளவில் நீரினையும் வியர்வையையும் புறக்கணிக்கும் தன்மை யுடையவையாக இருக்கின்றன. நெகிழி (plastic) போன்ற பொருள்கள் அதிகமான அமிலக் காப்பும் காப்பும் இருக்கின்றன. செயற்கைப்பொருள்களைக் குறிப்பிட்ட சில நிறங் களிலேயே பெற இயலும். ஆனால், தோல்களைப் பல நிறங்களில் பெற இயலும். தோல்களில் காணப் படும் யாப்பு (texture) செயற்கைப் பொருள்களில் காணப்படுவதில்லை. தோலால் செய்யப்பட்ட காலணிகள், செயற்கைப்பொருளால் செய்யப்பட்ட காரக் உடையவையாக