424 இயற்கைப் பிறழ்வு
424 இயற்கைப் பிறழ்வு வற்றைப் போன்று அவ்வளவு எளிதாக உருவத்தை (shape) இழப்பதில்லை. தோல்களின் மேனி வனப்பு மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. செயற்கைப் பொருள்களும்,நெகிழிகளும் அநேக வகையான தோல் வியாதிகளை உண்டாக்குவன எனக் கூறப்படுகிறது. தக்கவகையில் பதனிட்டு ஒப்பனை செய்யப்பட்டுள்ள தோல், எவ்விதமான நோய் களையும் தருவதில்லை. இவை கால்களில் எரிச் சலைக் கூட உண்டாக்குவதில்லை. தோல்களின் இயற்கை அமைப்பு, கால்களுக்கு மெத்தை போன்று அமைந்து, வெளிப்புற உணர்வுகளைத் தாராமல் தடுக்கிறது. செயற்கைப் பொருள்கள் ஒரே சீராக இருப்பதால், திறமை அற்றவர்கள் கூட இவற்றை வெட்ட இயலும். ஆனால், தோல்களை நல்ல அனு பவம் உடையவர்கள் மட்டுமே வெட்ட இயலும். செயற்கைப் பொருள்களை ஒரே சீரான வகையில் தைக்க இயலும். காலணிகள் உற்பத்தி செய்யும் போது செயற்கைப் பொருள்கள் அதிகமாக வீணாக் கப்படுவதில்லை. செயற்கைப் பொருள்களைப் பயன் படுத்திக் காலணிகளின் உற்பத்திச் செயல்பாடுகளைச் செய்வது எளிதானது, இந்தச் செயல்பாடுகளை வேக மாகவும் செய்ய இயலும். இவற்றைப் பயன்படுத்தி ஒரே சீரான தன்மைகளையுடைய காலணிகளைப் பெற இயலும். தாமே இயங்கும் பொறிகளைக் கொண்டு காலணிகளைச் செய்வதற்குத் தோலை விடச் செயற்கைப்பொருள்கள் சிறந்தவையாகும். மேலும் பல்வேறுபட்ட சிறப்புத் தன்மைகளையும் ஒப்பிட்டு அறிவது தோல் தொழில் வளர்ச்சிக்கு நல்ல பயன் தருவனவாகும். பழ.முத்தையா. நூலோதி. டாக்டர். முத்தையா, பழ., தோல் பதனிடும் முறைகள் பற்றிய அறிவியலும் தொழில் நுணுக்கமும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1978. இயற்கைப் பிறழ்வு ஒழுங்கான, முழுமையான, இயல்பான அமைப்பு உடைய பெரும்பாலான உயிரிகள் நல்முறையில் வாழ்கின்றன. ஒருசில விலங்குகள் உறுப்புக் குறை பாடுகளுடன் பிறக்கின்றன. இவ்வாறு இயல்பு மாறித் தோன்றுதல் இயற்கைப் பிறழ்வு (freaks in nature) எனப்படும். பெரும்பாலான இயற்கைப் பிறழ்வுகள் உயிரினங்களின் மரபுப்பொருளில் (genetic material) ஏற்படும் திடீர்மாற்றங்களால் (mutations) ஏற்படுகின்றன. சில குறைபாடுகள் தனி வுயிரிகளிலும், மற்றவை வழிவழியாகத் தொடர்ந் தும் வருகின்றன. மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள், அணுகுண்டு ஆய்வுகளால் ஏற்படும் கதிரியக்கம், ஏவுகணைகள், செயற்கைக் கோள்கள் போன்றவற்றால் வளிமண்டலத்தில் ஏற் படும் மாற்றங்கள், தொழில்பெருக்கத்தால் உண் டாகும் விளைவுகள், வேளாண்மையில் பயன்படுத்தப் படும் பூச்சிக்கொல்லிகள், இரசாயன உரங்கள், பல தரப்பட்ட மருந்துகள், கச்சாப்பொருள்களைத் தவ றாகப் பயன்படுத்துதல், காடுகளின் அழிவு ஆகியவை இயற்கைப் பிறழ்வுகள் பெருகக் காரணமாக இருக்கலாம். மனித இனத்தில் முலை இடம் மாறி வளர்வது, அவற்றின் எண்ணிக்கை மாறுவது, முலைக்காம்பு களற்ற நிலை, கருப்பை தவிர்த்த கருவளர்ச்சி போன்ற பலவகைப் பிறழ்வுகளைப் பரவலாகக் காணலாம். ஆண் உடலில் பெண்ணின் கருப்பை காணப்படுவதும் உள்ளுறுப்புகளாகிய இதயம், கல் லீரல், சிறுநீர்ப்பை ஆகியவை உடலுக்கு வெளியே துருத்திக்கொண்டிருப்பதும் இரட்டையர் பிறப்பதும் அலித்தன்மை காணப்படுவதும் இயற்கைப் பிறழ்வு களேயாகும். விலங்கினங்களில் இயற்கைப் பிறழ்வுகள். கூடுதல் உறுப்புகள்,உடல் ஊனங்கள், அரிய அமைப்புகள் போன்ற இயற்கைப் பிறழ்வுகள் விலங்கினங்களில் காணப்படுகின்றன. மனித சமுதாயத்தோடு ஒட்டி வாழும் ஆடு, மாடு, கோழி, நாய் போன்ற வளர்ப்பு விலங்குகளுக்கு இரண்டு தலைகள், ஆறு கால்கள். முதுகில் கால்கள், ஒட்டி வளரும் உறுப்புகள், குரங் கைப் போன்ற முகம் போன்ற இயற்கைப் பிறழ்வு களுடன் குட்டிகள் பிறப்பதைக் காணலாம். கூன் மாடுகள் அல்லது சாமி மாடுகள் அல்லது பூம் பூம் மாடுகள் என்பவை கூட்டமாக வீதிகளில் வரும் போது அவற்றில் சிலவற்றிற்கு இத்தகைய இயற்கைப் பிறழ்வுகள் இருப்பதைக் காணமுடியும். இரண்டு தலைகளுடைய பாம்புகள், இரண்டு வாலுள்ள பல்லிகள், அரணைகள், கோழி முட்டைக்குள் கோழி முட்டை, ஒரு முட்டைக்குள் இரண்டு வளர்கருக்கள் போன்ற பல இயற்கைப் பிறழ்வுகள் விலங்கினங் களிடையே காணக்கிடக்கின்றன. இரட்டைத்தலைப் பாம்புகளும் இயற்கைப் பிறழ்வால் உண்டாகின்றன. அண்மையில் பெங்களூரில் ஒரு பசு முன்கால்களே இல்லாமல் பின்கால்கள் மட்டுமே இருந்த வியத்தகு கன்று ஒன்றினை ஈன்றெடுத்த செய்தி, பத்திரிகை களில் படத்துடன் வந்தது. முன்கால்கள் இல்லாத தைத் தவிர அக்கன்று மற்ற கன்றுகளைப் போலவே இருந்தது.(19). தாவரங்களில் இயற்கைப் பிறழ்வுகள். பழங்கள், காய்கள், பூக்கள் ஆகியவற்றிலும் இரட்டை உண்டு. இரட்டைவாழைப்பழங்கள், இரட்டைத் தக்காளிகள்,