பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கையழகுத்‌ தோட்ட அமைப்பு 425

இரட்டைத் தலைப் பாம்பு இயற்கையழகுத் தோட்டஅமைப்பு 425 இரட்டைச் செம்பருத்திப் பூக்கள், இரட்டைத் தேங்காய்கள் எனப் பல உள்ளன. மு. இராஜேந்திரன் இயற்கையழகுத் தோட்டஅமைப்பு ஆகிய சுற்றுப்புறத் தாவரங்கள் உயிரினங்கள் வற்றைப் பயன்படுத்திச் சூழ்ல்களை மனித வாழ்க் கைக்கு இன்றியமையாத இயற்கையுடன் ஒன்று படுத்தி அழகுற அமைத்தலே இயற்கையழகுத் தோட்ட அமைப்பாகும். சாலை ஓரக்காடுகள் தோட்டங்கள் நிழல்தரும் மரங்கள் அமைத்தல், தேசியப் பூங்காக்கள் பறவை விலங்கு சரணாலயங்கள் அமைத்தல், குடியிருப்புகளைச் சுற்றி அழகுபடுத்தல், பொது இடங்கள் காலி இடங்கள் நதிக்கரை ஓரம் முதலிய வற்றை அழகுபடுத்துதல் ஆகியன இதில் ஆடங்கும். சமீபகாலமாக உணவளிக்கும் இயற்கை அழகுத் தோட்டங்களும் {edible landscaping) தோன்றி யுள்ளன. இவை பதினெட்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில், கெண்ட் (kent), பிரவுன் (brown), ரெப்டன் (repton ஆகிய ஆங்கிலேயர்களால் தோற்றுவிக்கப்பட்டன. இயற்கையழகுத் தோட்ட அடிப்படை அமைப்புமுறைகள், அளவு முறை. இது அமைப்பு முறையிலுள்ள ஒரு பகுதிக்கும், மற்றொரு பகுதிக்கும் உள்ள இடை வெளியின் அளவு ஆகும். விகித முறை. இது அமைப்பு முறையிலுள்ள இரு பகுதிகளின் இடைவெளி மட்டுமல்லாமல், இடை வெளிக்கும் மொத்த தொடர்பைக் காட்டுவது. அமைப்புக்கும் உள்ள பரிமாணம். தோட்ட அமைப்பின் நடுக்கோட்டி லிருந்து பார்க்கும் போது இரண்டு பக்கங்களுக்கும் உள்ள சமன்பாடு. சரிவிகிதப் பரிமாணமாக வோ, (symmetrical balance விகிதமற்றதாகவோ ( asymmetrical) இருக்கலாம். ஒன்றியம் (rhythm). இது அமைப்பு முறையில் ஒன்றுபோல உள்ள தோற்றம். இவ்வொன்றிய நிலை மிகுதியாகக் காணப்படின் தோட்டத்தின் இயற்கை யழகு கெடும். 1 முதன்மைத்தன்மை. பார்வைக்குக் களைப்பைத் தரும் ஒற்றுமைகளைக் களைய, உடனே கவரக்கூடிய முதன்மைத்தன்மை களை இயற்கையழகுத் தோட்டங் களில் புகுத்த வேண்டும். மேற்கூறப்பட்ட அமைப்பு முறைகளைக் கையாண்டால், வடிவம் (line). உருவம் (form) நிறம் எழில் (texture) முதலியன உள்ளடங்கிய அழகான இயற்கை அழகுத் தோட்டம் அமையும். மேலும், இத்தோட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் தாவரங்களின் குணவியல்புகளை நன்கு அறிந்திருந் தால் சிறந்த தோட்டம் அமையும். சுற்றுப்புறச் சூழல்களைத் தூய்மைப்படுத்துவதிலும், அழகுபடுத்து வதிலும் தாவரங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இவை எழில் மிகு இயற்கையழகுத் தோட்டங்களாக